Saturday, January 23, 2010

12 வருடங்களில் 1,99,132 விவசாய தற்கொலைகள்

நம் நாட்டில் 1997-2008 வரை 1,99,132 விவசாய தற்கொலைகள் (NCRB). 2008 ஆண்டு மட்டும் 16,196 பேர். முக்கிய தற்கொலை மாநிலங்களான மகாராஷ்ட்ரா, ஆந்திரபிரதேஷ், கர்நாடகா, மத்தியபிரதேஷ், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் மாத்திரம் 10,797 பேர் (66.6%) 2008 ஆண்டு தற்கொலை செய்துள்ளனர்.
Source : Mr. P.Sainath in The Hindu/Cbe dated January 22, 2010

1992 - 2009 வரை சுமார் 18 ஆண்டுகளில் கணக்கில் வந்த ஊழல் தொகை ரூ.7300000,00,00,000 (ரூபாய் எழுபத்திமூன்று லட்சம் கோடி) என “ஆவ்ட் லுக்” (Out look ) நவம்பர் 25, 2009 இதழை பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. வருட வாரியாக ஊழலையும் அதன் தொகையினையும் வெளியிட்டுள்ளனர். அத்தோடு அத்தொகை கொண்டு நாட்டிற்கு என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர். கணக்கில் வராத தொகை ???? மேலும் ஆங்கிலத்தில் படிக்க : http://www.outlookindia.com/article.aspx?262842

200 வருட காலனி ஆதிக்க சுரண்டல், கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் ரூபாய் எழுபத்திமூன்று லட்சம் கோடி ஊழல், இவ்வளவையும் இந்த நாடு தாங்கி கொள்ளமுடிகிறதென்றால் இயற்கையும், இறைவனும் நம் நாட்டிற்கு நிறையவே செய்திருக்கிறார்கள். வளமான விவசாய நாட்டில் இவ்வளவு தற்கொலைகள் என்றால் தவறு எங்கே நடக்கிறது ???


மிக சாதாரண விஷயங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும் தமிழ் வலைப் பூக்களின் உலகம் ஏனோ மிக முக்கியமான இந்த வாழ்வாதார பிரச்சனையில் மௌனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்தீர்கள் என்றால் நலமாக இருக்கும்.

4 comments:

Anonymous said...

இடைத்தரகர்கள் இல்லாத நேர்மையான கொள்முதலும் பியூச்சுர்ஸ் எனப்படும் வர்த்தக ரீதியான சூதாட்ட வணிகத்தை விவசாயப் பொருள்களிடமிருந்து ஒதுக்கி வைப்பதன் மூலமும் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

வின்சென்ட். said...

திரு. அனானி

உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கூறுவது உண்மை. பியூச்சுர்ஸ் பரவலக எல்லா நாடுகளிலும் நடைபெறுவதாலும் அதனை வணிகத்தின் ஒரு அங்கம் என்ற அங்கீகாரம் நன்கு படித்த மேற்கத்திய வாழ்கையில் இருப்பதும் உடல் உழைப்பின்றி பணம் என்கின்ற மனோபாவம் இருப்பதால் வளரும் மற்றும் ஏழை நாடுகளில் வணிக பயிர் செய்யும் போது தற்கொலைகள் அதிகமாக ஏற்படுகின்றது.

?!!!@#%* said...

இதற்கு ப‌தில் வராத‌திற்கு கார‌ண‌ம்,

மிக‌ பெரும்பான்மையான‌ இன்றைய‌ த‌லைமுறை ம‌றைமுக‌மாக‌ கார‌ண‌ம்,

மேலும் மீத‌ முள்ள‌ பேர்க‌ளுக்கு ம‌ற‌த்து/ம‌ற‌ந்து விட்ட‌து, என்ன‌ செய்ய‌லாம்?


ச‌ஹ்ரித‌ய‌ன்

வின்சென்ட். said...

திரு.ச‌ஹ்ரித‌ய‌ன்

உங்கள் வருகைக்கு நன்றி. சமுதாயத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இன்று விவசாயிகளுக்கு என்றால் இதனை இப்பொழுது சரி செய்யாவிடில் இன்னும் சில பத்தாண்டுகளில் எல்லா தரப்பினருக்குமே நிகழலாம்.