Wednesday, January 6, 2010

வால்பாறை அக்காமலை கிராஸ் ஹில்ஸில் எனது இளமைகால அனுபவம்.

அழகிய தோற்றம் "மஞ்சு " இல்லாமல்
திரு. C.R. ஜெயபிரகாஷ் அவர்கள் மின்னஞ்சிலில் வால்பாறை அக்காமலை கிராஸ் ஹில்ஸின் அற்புதமான புகைபடங்களை அனுப்பி சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் என்னை 35 வருடங்களுக்கு பின்னநோக்கி செல்ல வைத்து மகிழ்ச்சியான அதே சமயம் மரண பயத்தையும் தந்த அந்த “டீன்” பருவதிற்கு என்னை அழைத்து சென்றதற்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

Good Friday அன்று அக்காமலை கிராஸ் ஹில்ஸின் உச்சி என்று நம் பார்வையில் படும் பகுதியில் சிலுவை வைத்திருப்பார்கள் வருடதில் Good Friday அன்று மட்டும் நிறைய மக்கள் அந்த சிலுவை மரத்தை நோக்கி பக்தி பயணம் மேற்கொள்வார்கள். அந்த நாளை நண்பர்கள் தேர்ந்தெடுத்தோம். அக்காமலை பகுதிக்குச் சென்று ஒற்றையடி பாதையில் சுமார் 3 மணிநேரப் பயணம். செல்லும் பாதையின் அருகே சோலா வன பகுதி.
இடையில் மேற்குமலை தொடர்ச்சிக்கே உரித்தான இந்த “சோலா வனப்பகுதி”. யானையின் பிளிரும் ஓசை. ஒரு வழியாக மேலே சென்றதும் மகிழ்ச்சியில் சிலுவைக் குன்றை தாண்டி அடுத்தடுத்து 6 அல்லது 7 சிறுகுன்றுகளை தாண்டியிருப்போம்.
ஆழமற்ற கோனலாறு
இடையே கோனலாற்றுத் தெளிந்த நீரை பருகி விளையாடி மகிழ்ந்ததில் வழி மறந்து விட்டது. எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரி குன்றுகள்.
இதே போன்று சுற்றிலும் இருந்தால் எதனை அடையாளமாக வைப்பது.
ஏதேனும் ஒரு குன்றின் மீது ஏறி நின்று சிலுவையை இலக்காக வைத்து வழியை கண்டு பிடித்துவிடலாம் என்று நடக்க ஆரம்பித்தோம் மனித நடமாட்டமற்ற பகுதி சுமார் 2 மணியிருக்கும் திடீரென “மஞ்சு” வந்து சூழ்ந்து கொண்டது. 6 அடிக்கு அப்பால் உள்ளவர்களின் குரல் கேட்கிறது. ஆனால் உருவம் தெரிவதில்லை. அவ்வளவு நேரம் ரசித்த இயற்கை ஏனோ பயத்தை அளித்தது. மஞ்சு விலகினால் மாத்திரமே திரும்ப முடியும். 30 நிமிடம், 1மணிநேரம் மஞ்சு விலகவே இல்லை. சரி இத்துடன் ஆயுள் முடிந்துவிட்டது. குளிரில் நடுங்கி இறக்கத்தான் வேண்டும் என்ற நிலையில் 11/2 மணிநேரம் கழித்து மஞ்சுமூட்டம் கலைந்து தூரத்தில் இருந்தவை தெரிந்தன. பொதுவாக பகல் 2 மணிக்கு மேல் வழக்கமாக பெய்யும் கோடை மழையை அனுபவமின்மை காரணமாக கணக்கிட மறந்து சற்று தூரம் சென்றது தவறாகப் போய்விட்டது. எப்படி கீழே இறங்கினோம் என்றே தெரியவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் காய்ச்சல் வேறு வந்துவிட்டது. ஓய்வு விடுதி.
ஆனாலும் இன்றும் அந்த இடத்திற்கும் கோனலாறு ஓய்வு விடுதிக்கும் செல்லவேண்டும் என்ற ஆசையுள்ளது. ஆனால் நேரம்தான் அமையவில்லை.

அன்பர்களே உலகின் “Hotspot” என்று அழைக்கப்படும் முக்கிய இடங்களில் இந்த “புல்வெளியும், சோலா வனப்பகுதியும்” ஒன்று.
தீபகற்ப இந்தியாவின் மேல்நிலை தொட்டி ( Over Head Tank ).
இதுதான் தீபகற்ப இந்தியாவின் மேல்நிலை தொட்டி ( Over Head Tank ). மழைக் காலங்களில் நீரை ஸ்பான்ச் போன்று உறிஞ்சி வருடம் முழுவதும் நமக்கு தண்ணீரை தருகிறது. அதன் பரப்பளவு குறைந்து வருவது தென் மாநிலங்களுக்கு நீர் பற்றாக் குறையை ஏற்படுத்தும். கீழ்கண்ட திருக்குறளை உங்கள் சிந்தனைக்கு தந்து இந்த அரிய வகை காடுகளை காப்பாற்றுவது என்பது நமது வாழ்வதாரத்தை காப்பாற்றுவது போலாகும் எனவே இக்காடுகளை காப்பாற்றுவோம்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

10 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ பயங்கரமான அனுபவம் தான்.. :)

Thekkikattan|தெகா said...

அருமையான பகிர்வு. புல் மேடுகளின் அவசியத்தையும் நன்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள். நன்றி!

வால்பாறை காடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த சமயங்களில் பல முறை 'புல் மேடுகள்' பகுதிக்கும் சென்றதுண்டு. அங்கயே பல இரவுகள் கழித்ததுமுண்டு, அந்த வனக் குடிலிள்.

C.R.Jayaprakash said...

Thanks for giving lively, nostalgic expressions.

வின்சென்ட். said...

திரு. தெகா.

ஆராய்ச்சி மேற்கொண்ட ஒருவர் "அருமையான பகிர்வு." என்று கூறுவது மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் வருகைக்கு நன்றி.

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இன்றும் நினைத்தால் மறுஜென்மம் என்று தோன்றும்.

வின்சென்ட். said...

Dear Sri.C.R.Jayaprakash

Thank you for visting my blog and for the comments. My special thanks you for allowing me to use your wonderful photographs.

Adiya said...

please post this also.
http://www.flonnet.com/fl2613/stories/20090703261306500.htm

வின்சென்ட். said...

Dear Adiya

Thank you for visiting my blog. Actually i am also working on this subject. Due to this invasive plants we lost so many rare medicinal plants.Thank you for your link.

Lakshmanan said...

இந்த புகைப்படங்களை ஆவணப்படத்துக்கு பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன் C.R.Jayaprakas அனுமதி எப்படி பெறுவது

வின்சென்ட். said...

திரு.லட்சுமணன்
அவரது விலாசம்
http://www.crjayaprakash.com

C.R. Jayaprakash
Lecturer in Communication
Coimbatore
Tamilnadu, India
Mobile: +91 98942 59100