Showing posts with label தேனீ. Show all posts
Showing posts with label தேனீ. Show all posts

Thursday, January 15, 2009

தேனீ வளர்ப்பில்.........ஆரம்பப் பாடம்.

ச்சம் தவிர்.
ர்வம் காட்டு.

டமறிந்து துவங்கு.
யைப் பேணு.

ணவு ஊட்டு.
க்கம் காட்டு.

றும்பை விரட்டு.
ற்றமுற உதவு.

யம் அகற்று.

ன்று சேர்.
டாது தடு.

ஷதம் கொடு.

பயிற்சிக்கூடம் ஒன்றில் பார்த்து.

Wednesday, January 14, 2009

தேனீ வளர்ப்பு நுட்பங்கள்- நூல்

மனிதன் தன் அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் மிக அதிக மகசூல் தரும் புதிய இரகங்களை கண்டுபிடித்தாலும் இயற்கையாக தேனீக்கள் செய்யும் மகசூல் அதிகரிப்பை தவிர்க்கக் கூடாது. தேனீ வளர்ப்பது என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் ஆகும். விவசாயத்திற்கு குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு சாலப் பொருந்தும். ஒன்று மகசூல் கூடுகிறது மற்றொன்று தேன், மெழுகு, அரசக்கூழ் (Royal Jelly) போன்றவற்றால் கூடுதல் வருமானம்.
1991-92 ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த தமிழகம் அவ்விடத்தை இழந்துவிட்டது. மீண்டும் அவ்விடத்தை அடைய முயற்சிக்க வேண்டும். தேனீ வளர்ப்பை துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் மெ. முத்துராமன் அவர்களின் “தேனீ வளர்ப்பு நுட்பங்கள்” என்ற நூல் மிக பயனுள்ளதாக இருக்கும். தெளிவான வண்ணபடங்களுடன் வளர்ப்பு, பராமரிப்பு நுட்பங்கள், உணவு ஊட்டுதல், நோய்கள் என அனைத்து தகவல்களையும் விரிவாக தந்திருப்பது நூலின் சிறப்பு. ரூ.100/= விலையுள்ள இந்நூல் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும்.

வேளாண் பூச்சியியல் துறை,
பயிர் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயமுத்தூர் - 641 003.

Tuesday, January 13, 2009

தேனீக்களின் நடனம் - வீடியோ காட்சி.

பூச்சியினத்தில் தேனீக்கள் வித்தியாசமான பூச்சியானமாகும். கூட்டமாக வாழும் அவை மிக தெளிவான வாழ்கை முறையோடு உழைப்பிற்கு பெயர் பெற்றவை. கூர்ந்து நோக்கினால் அதன் வாழ்கை முறை நம்மை பிரமிக்க வைக்கும். அதில் ஒன்று நடனம். புதிதாக உணவின் இருப்பிடத்தை அறிந்த தேனீ மற்ற தேனீக்களுக்கு சூரியனை மையப்படுத்தி உணவு இருக்கும் இடத்தை மிக மிக துல்லியமாக அதன் தூரம், திசை போன்றவற்றை அறிவிக்க நடனம் ஆடும். இதனை waggle dance என்று ஆங்கிலத்தில் கூறுவர். அதிபுத்திசாலிகளான இந்த மிக சிறிய பூச்சியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

அவ்வாறு ஆடும் 1 நிமிட வீடியோ படத்தை காண கீழேயுள்ள தொடர்பை உபயோகியுங்கள். கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=-7ijI-g4jHg

மற்றொரு வீடியோ காட்சி.

Tuesday, December 30, 2008

தேனீக்கள் கூட்டம் !!!!!!

இரு வாரங்களுக்கு முன் சத்தியமங்கலம் - கோபி சாலையிலிருந்து சுமார் 2 கீ.மீ தூரத்தில் பசுமை நிறைந்த இப்பகுதியில் இரு மரங்களில் இயற்கையாக கட்டிய சுமார் 40 மலைந்தேனீக்களின் கூடுகளைப் பார்த்து அதிசயப்பட்டேன். மரங்களின் உரிமையாளர் திரு. மகாலிங்கம் சுற்றுவட்டாரத்தில் இது போன்ற தேன் கூடுகள் இல்லையென்றும் ,அவர்கள் தோட்டத்திலேயே இதே போன்ற மரம் இருந்தும் கூடுகள் இல்லாததை காண்பித்தார். காய்கறி பயிர்களில் நல்ல மகசூல் கிடைப்பதாக கூறிய அவர் டிராக்டர் கொண்டு நிலத்தை உழ முடிவதில்லை காரணம் புகை வாசம் வந்தாலே மனிதர்களை தேனீக்கள் தாக்க ஆரம்பித்துவிடுவதும் அது மாத்திரமன்று புகைபிடிப்பவர்களுக்கும் இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்றார். கூடுகள் 3 அடி வரை இருக்கும் போல் தோன்றுகிறது. பளு தாங்காமல் விழுந்து கிடந்த தேன் அடைகளைப் பார்த்தாலே பிரமிப்பாக இருந்தது.
கீழே விழுந்த தேன் அடையுடன் திரு. மகாலிங்கம் தம்பதியினர்.

Saturday, December 27, 2008

தேனீக்கள் வளர்த்து குபேரன் ஆகமுடியுமா ???

முடியும் என்று சொல்பவர் இந்தியாவின் மொத்த தேன் ஏற்றுமதியில் 70% செய்யும் காஷ்மீர் அபியரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். 1980 களில் ரூ.1000/= துவக்க முதலீடு செய்யது இன்று 2008 இல் ரூ.136 கோடிகள் வர்த்தகம் செய்பவர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். இன்று பணியாற்றும் உழியர்கள் சுமார் 1500 பேர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேனைக் கொள்முதல் செய்கிறது காஷ்மீர் அபியரீஸ். 4 வணிகப் பெயர்களில் 42 நாடுகளில் இவர்களது தேன் விற்பனையாகின்றது. தேனீக்கள் வளர்த்தல் ஏதோ ஒரு விவசாய சிறு உபதொழில் என்று நினைக்கும் நாம் அதில் கூட சாதனைகள் செய்திருக்கும் திரு. ஜக்ஜித் சிங் கபூரை பார்க்கும் போது பிரமிப்பு அடைகிறோம்.. சாதனையாளர் திரு. ஜக்ஜித் சிங் கபூர் அவர்களின் இலக்கான 100 நாடுகள் ரூ.400 கோடிகள் மிக விரைவில் அடைய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
Source : India Today 10-12-2008

Friday, December 26, 2008

தேனீ வளர்ப்பு - ஒரு பார்வை

அயல் மகரந்த சேர்க்கையில் தேனீக்கள், பறவைகளின் பங்கு கணிசமானது. ஆனால் இவைகளின் தொகை குறைந்து கொண்டே போவதால் உணவு உற்பத்தியும் குறைந்து கொண்டே போகின்றது. இதனை மேம்படுத்த UNDP (United Nations Environment Programme) மிக சிறந்த ஒரு திட்டத்தை வரும் 5 வருடங்களுக்கு $26.45 மில்லியன் டாலரில் இந்தியா, கென்யா, பிரேசில், கானா, நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் செயல்படுத்தவுள்ளனர். இதனால் உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் தேன் மற்றும் மெழுகு உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் கிராமப்புற வேலை வாய்ப்பு ஏற்படுகிறது.

வியாதி, வனம்அழிதல், இரசாயன பூச்சிகொல்லிகளை உபயோகித்தல், விவசாய மாற்றத்தால் விவசாயிகள் தேனீ வளர்ப்பை கைவிட்டது, புதியஇனங்களின் அறிமுகம், வைரஸ்களால் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் இதன் தொகை குறைந்து கொண்டே போகின்றது. எனவே UNDP யின் இந்த திட்டம் வரவேற்க வேண்டிய நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய திட்டம். பயன்படுத்திக் கொள்ளவோம்.

தேனீக்கள் பற்றி முழுவதும் அறிந்து கொள்ள கீழ்கண்ட தொடர்புகளை பயன்படுத்துங்கள்
http://www.islamkalvi.com/science/honey_bee.htm
http://iyargai.blogspot.com/search/label/தேனீ
பயிற்சி மற்றும் தேனீ வளர்ப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை.
http://www.ecogreenunits.blogspot.com/

Source: The Hindu 16-08-2008
Photo : Mr. Babu