
Saturday, January 16, 2010
எளிதாக தொட்டிகளில் செடி வளர்க்க...
நகர விவசாயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கழிவுகளை மறுஉபயோகம் செய்து நமக்கு தேவையான செடிகளை எளிதாக வளர்ப்பது. நீர் தேவை மற்றும் பராமரிப்பு குறைந்த, மொட்டை மாடியில் வளர்க்க ஏற்ற இந்த யூபோர்பியா (Euphorbia) பூ செடியை தென்னைமட்டையை ( பொதுவாக நகரங்களில் வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டையை அகற்ற நாம் கஷ்டபட வேண்டி வரும் . இங்கு அதற்கு ஒரு உபயோகம்)சிறு துண்டுகளாக வெட்டி தொட்டியின் அடியில் அடுக்கி பின் வழக்கமாக போடும் மண், மண்புழு உரம் போட்டு வளர்க்க அழகிய பூக்கள் விரைவில் கிடைக்கும். தென்னைமட்டை நீரை உறிஞ்சி வைத்துக் கொள்வதால் இடத்தைப் பொறுத்து 4 - 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றினால் போதும். நிறம், பூக்களின் அளவு இவைகளை பொறுத்து நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் யூபோர்பியாவில் உண்டு. தொட்டியும் அதிக எடையின்றி இருப்பதால் எளிதாக இட மாற்றம் செய்யலாம். 

Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Thanks for sharing. Good one
எங்கள் வீட்டு பல்கனியிலும் இச் செடி இரண்டு வளர்த்துள்ளேன்.
நீங்கள் கூறியதுபோல வேறுசெடிகள் பராமரிப்பது சிரமம் இது இலகுவாக உள்ளது.
M/s தீபா & மாதேவி
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. இதுபோன்று எளிதாக வளரும் பூச்செடிகள் நிறைய உண்டு.
உபயோகமான தகவல்
தர்ப்பை புல் பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா ?
நன்றி
விஜய்
திரு.விஜய்
உங்கள் வருகைக்கு நன்றி. தர்ப்பை புல் பற்றி அதிக தகவல் என்னிடம் இல்லை.
Post a Comment