இந்த அற்புதமான நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சுரபாலர் அவர்களால் சம்ஸ்கிருதத்தில் எழுத்துருவம் பெற்றது. பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மொழி பெயர்க்கப்படாமல் சுமார் 200 ஆண்டுகள் இருந்தது. பின் டாக்டர். நளினி சதாலே அவர்களால் 1996 ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கத்தை இயற்கை விஞ்ஞானி..ஆர்.எஸ். நாராயணன் மொழிபெயர்த்து 2005 ஆண்டு வெளியிட்டிருக்கிறார். திரு. ஆர்.எஸ். நாராயணன் அவரது மாடித்தோட்டத்தில்
அதிலிருந்து சில பாடல்கள்
பத்து புத்திரர்களைப் பெற்று
அவர்கள் செய்யும் தந்தைக் கடன்களை விட ஐந்து
மரங்கள் நட்டு அவை வழங்கும்
இலை, மலர், கனிகள், மேலானவை.
பாடல் எண் :5
பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்
பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்கு சமம்
பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்
பாடல் எண் :6
இந்தப் பூமியில் மரங்களே மனிதனுக்கு
எல்லையில்லா மகிழ்ச்சியை வழங்கும்.ஏனெனில்
அவை நம்மைக் கொடிய வறுமையிலிருந்து காப்பாற்றுகின்றன.
அவ்வாறு காப்பாற்றுவதால் “ த்ரவஹ” (ரட்சகர்) என்று
மரங்களை அழைக்கிறோம்.
ஆகவே, மரங்களை வளர்க்கவேண்டும்.
பாடல் எண் :97
மரங்கள் பூத்துக் காய்க்காவிட்டால்
எள், பார்லி, கொள்ளுடன் உளுந்தும் பாசிப்பயிறும்
கலந்த குளிர் நீரை மண்ணில் இட்டால்
மரங்கள் பூத்துக்குலுங்கிக் கிளைகள் பெருக்கும்.
பாடல் எண் :215
புத்தகத்தின் சிறப்பு சம்ஸ்கிருத சுவடியின் மூலமும் அச்சிடப்பட்டிருப்பது. 323 பாடல்கள் உள்ளது. இது தவிர குணபஜலம், E.M, பஞ்சகாவியம் என பழைய, புதிய நுண்ணுயிர் பெருக்க தொழில் நுட்பங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. மொத்ததில் விவசாய்களிடம் அவசியம் இருக்கவேண்டிய தொழில் நுட்பங்கள் நிறைந்த நமது பாரம்பரிய விவசாயத்தை விளக்கும் நூல். எழுத்துருவம் பெற்று 1000 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்திற்கு மாறும் அன்பர்களுக்கு உபயோகமான நூல். இந்த நூலை ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆசிரியர் அர்ப்பணித்துள்ளார்.
கிடைக்குமிடம்.
திரு. ஆர்.எஸ். நாராயணன்
5/47 B சவுந்தரம் நகர் அம்பாத்துரை,
காந்திகிராமம் அஞ்சல்
திண்டுக்கல் 624 302
தொலைபேசி : 95451- 2452365
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
திரு.வின்சென்ட்,
மிகவும் உபயோகமான தகவல், அத்தகவல் தொகுப்பின் குறிப்புகள் இன்றைய மாறிய உலகில்
பொருன்த்துகிறதா? என வல்லுனர்களும் கருத்துச் சொன்னால் இன்னும் வலிமை பெறும்
சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கிறதா? எனவும் விலையும் தெரிந்தால் நலம்,
நன்றி,
சஹ்ரிதயன்
திரு. சஹ்ரிதயன்
உங்கள் வருகைக்கு நன்றி. சில அடிப்படையான விஷயங்கள் மாறுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.
"இந்தப் பூமியில் மரங்களே மனிதனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை வழங்கும்.ஏனெனில்
அவை நம்மைக் கொடிய வறுமையிலிருந்து காப்பாற்றுகின்றன.
அவ்வாறு காப்பாற்றுவதால் “ த்ரவஹ” (ரட்சகர்) என்று
மரங்களை அழைக்கிறோம்.
ஆகவே, மரங்களை வளர்க்கவேண்டும்.
பாடல் எண் :97"
சில குறிப்புக்கள் மனித இனத்தின் மாறுபட்ட பொருளாதார மற்றும் நுகர்வு கலாச்சாரத்தால் பொருந்துவது சற்று கடினமே. அதன் பலனை (புவி வெப்பம்)நாம் அனுபவித்து வருவதும் உண்மை. விலை. ரூ.75/= விலாசம் பதிவில் உள்ளது.
ஆர்வமுற்று தேடினால் அது கண்டிப்பாக கிடைக்கும் என்பது இந்த பதிவின் மூலன் உணர்கிறேன்
போன வாரம் தான் சுரபாலரின் புத்தகங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.
கர்த்தர் உங்களின் மூலமாக
அனுப்பி விட்டார்
நன்றி
விஜய்
திரு.விஜய்
உங்கள் வருகைக்கு நன்றி. மிக நல்ல புத்தகம. மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள்.
எனது பதிவிலும் போட்டுவிட்டேன்
நன்றி
விஜய்
திரு.விஜய
உங்கள் பதிவில் இட்டதற்கு நன்றி. நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு அறிய செய்வோம்.
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பொக்கிஷம் ஒன்றை யாவரும் அறியச் செய்த நளினி சதாலே மற்றும் ஆர்.எஸ் நாராயணன் அவர்களுக்கு யாவரும் கடமைப் பட்டுள்ளோம். அதை பாதுகாத்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி. இது போல் இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் அங்கே இருக்கின்றனவோ !!
அரிய நூலைப் பற்றிய நல்ல தகவல் கொடுத்ததற்கு நன்றி
திரு. கபீரன்பன்
நீங்கள் நன்றி கூறிய அனைவரும் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர்களே. வருகைக்கு நன்றி.
திரு. நாராயணன் அவர்களின் தொலைபேசி எண் தற்பொழுது உபயோகத்தில் இல்லை என்று தொடர்பு கொள்ளும்பொழுது செய்தி கிடைக்கின்றது. அப்புதகத்தினை பெறும் வழிமுறையினை கூறவும். நன்றி.
திரு. மகேஷ்
அவரது விலாசம் தந்திருக்கிறேன். கடிதம் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
Post a Comment