Friday, November 25, 2011

தமிழக கடற்கரை கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.


அழியும் தருவாயில் இரயுமன்துறை கிராமம்
 வெட்டிவேர் உதவியுடன் பிரேசில் நாட்டின் சா போலோ மாநிலத்திலுள்ள பெர்டியோகா என்ற கடற்கரை குடியிருப்பு பகுதியை கடலரிப்பிலிருந்து காப்பாறும் பணியை பொறியாளார். லூயிஸ் லுக்கினா அவர்கள் விளக்கிய போது மனம் ஏனோ இரயுமன்துறை கிராமத்தை நினைத்து வருந்தியது. 
கடலரிப்பில்  'பெர்டியோகா' கடற்கரை
தென்னை நார் விரிப்பில் வெட்டிவேர் நடப்பட்டுள்ளது. வருடம் 2009
சற்று வளர்ந்த நிலையில் வெட்டிவேர்
நன்கு வளர்ந்த நிலையில் வெட்டிவேர்
சுவர் போன்ற அமைப்பில் வெட்டிவேர்.   பொறியாளார். லூயிஸ் லுக்கினா ICV-5   முடித்து சென்ற பின் 2011 நவம்பர்  மாதம் 4 தேதி வலையேற்றியது.
 தென்னைநாரில் செய்யப்படும் ஜியோ டெக்ஸ் (Geo Tex) (பொள்ளாச்சி இதற்கு பெயர் பெற்றது )  என்ற விரிப்பைப் பயன்படுத்தி வெட்டிவேரை நட்டு அவர்கள் கடலரிப்பிலிருந்து குடியிருப்புக்களை காப்பாற்றி இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. முக்கிய பொருட்களான வெட்டிவேரும், தென்னைநாரும் நம்மிடம் இருந்தும் உபயோகிக்காமல் இருப்பது அறியாமையா ? அல்லது ???? முடிவு நம் கையில்தான் உள்ளது. வெட்டிவேர் பாமரனின் கையிலிருந்து பெரிய கம்பெனிகளின் கைக்கு மாறியிருப்பது நிச்சயம் மிக பெரிய மாறுதல்களை உலககெங்கும் ஏற்படுத்தும். ஆனால் நாம் அதிலிருந்து பாடம் கற்கப் போகிறோமா? காலம் தான் பதில் கூறவேண்டும்.
 

Thursday, November 24, 2011

வெட்டிவேர் உதவியுடன் சரிவுகளில் மழைநீர் சேமிப்பு

முன்னாள் தலைவர் முனைவர். டேல் ராக்மிலர் உடன்

5-வது  உலக வெட்டிவேர் மாநாட்டின் (ICV-5) முடிவுகளை தொகுத்து சிறப்பு  விருந்தினர்கள் வழங்கினார்கள். அதில் முனைவர். இலட்சுமண பெருமாள்சாமி அவர்கள் இருந்தது மகிழ்ச்சியைளித்தது. உலக வெட்டிவேர் அமைப்பின் முன்னாள் தலைவர் முனைவர். டேல் ராக்மிலர் பேசும் போது வெட்டிவேர் மூலம் நிலத்தடிநீர் உயர்த்தவேண்டுமென கேட்டுக் கொண்டு என் அருகில் வந்து அமர்ந்தார். மெதுவாக எனது 2 நிமிட படம் பற்றி கூறினேன். திரையிட்ட பின் பாராட்டியதோடு மாநாடு முடிந்தவுடன் காங்கோ நாட்டிற்கு செல்வதாகவும் அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு மொழிமாற்றம் செய்து காண்பிப்பதாகவும் கூறினார். படத்தை உருவாக்கும் போது பள்ளிக் குழந்தைகளையும், நமது மலைப்பகுதிகளையும், ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளையும் எண்ணி உருவாக்கினேன் அது நிறைவேறுவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மாநாட்டிற்கு ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். நமக்காக தமிழ் வாசகங்களுடன் உங்கள் பார்வைக்கு.

Wednesday, November 16, 2011

கைவினைப் பொருட்கள் பயிற்சிப் பட்டறை – ICV 5

கேரள மாநில குழு
 தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த பயிற்சியாளர்கள் கைவினைப் பொருட்கள்பயிற்சிப்பட்டறையை சிறப்பாக நடத்தினர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து வந்த சுயஉதவிக் குழு பயிற்சி பெற்றனர்.
திரு. தாமஸ் பயிற்சியின் போது.
 அவர்களில் 69 வயது நிரம்பிய திரு.தாமஸ் அவர்கள் நீண்ட பயணம் மேற்கொண்டு முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டது எனக்கு உற்சாகம் தந்தது. தாய்லாந்து நாட்டின் கைவினைப் பொருட்கள் பற்றி கூற வேண்டுமானால் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் இலைப் பகுதியை உபயோகிக்கின்றனர். வேர் பகுதியை தொடுவதில்லை. மொத்தத்தில் அற்புதமான அந்த  படைப்புக்கள் உங்கள் பார்வைக்கு.

Wednesday, November 9, 2011

இனிய தமிழ் மக்களே உறங்கியது போதும், விழித்தெழுங்கள்.

HER ROYAL HIGHNESS PRINCESS MAHA CHAKRI SIRINDHORN
 தாய்லாந்து நாட்டின் HRH. இளவரசி மகா சக்ரி ஸ்ரீரின்ந்தான் அவர்களால் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு (ICV-5 ) லக்னோ நகரில் சென்ட்ரல் இன்ஸ்டிடூட் ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ் (Central Institute of Medicinal and Aromatic Plants ) வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொச்சியில் நடந்த மாநாட்டைக் காட்டிலும் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள், பெரிய கம்பெனிகளின் கட்டுமான பணிகளை படங்களாக, வீடியோவாக காண்பித்து பிரமிப்பு ஏற்படுத்தினர்.
 சென்ட்ரல் இன்ஸ்டிடூட் ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ்
 மாநாடு முடிந்தவுடன் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம் என்று மனதில் தோன்றியது. தமிழ் பெயரான வெட்டிவேர்”  என்று உலகம் முழுவதும் அறியப்பட்டாலும், பல நாடுகள் வெட்டிவேர் உதவியுடன் பில்லியன் டாலர்களை சேமித்தாலும், ஏழை எளிய மக்களுக்கு ஆப்ரிக்க நாடுகளில் உறுதுணையாக இருந்தாலும் இதன் பிறப்பிடமான தமிழ்நாட்டில் எனது பாட்டி குடிநீரில் இதனை போட்டிருப்பார்கள், எனது தாத்தா வெட்டிவேர் விசிறி வைத்திருப்பார், திருவிழாக்களில் சர்பத்தில் கலந்திருப்பார்கள்  என்ற எளிய உபயோக முறைகளை சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் 1000 + கி.மீ நீள கடற்கரையை கடலரிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம், குறைந்த மழையளவில் குறுகிய காலத்தில் நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம், சுற்றுலாப் பயணிகளை கவரும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, போன்ற முக்கிய மலை வாசஸ்தலங்களின் சாலைகளை பருவ மழையின் போது பாதுகாப்பது, கிராமப்புற சாலைகளை அதிக செலவின்றி பராமரிப்பு செய்தல், குளம், குட்டைகளில் அதிக மண் சேராமல் தடுத்தல் போன்ற காரியங்களுக்கு வெட்டிவேரை சிறப்பாகப் பயன்படுத்த முடியும். வெட்டிவேரை மையப்படுத்தி பையோ எஞ்சினியரிங் (Bio-engineering ), பையோ ரெமடியேஷன் (Bio-remediation) பையோ வால் (Bio wall ) என்று வார்த்தைகள் மற்றநாடுகளில் பவனி வர நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்தால் நிச்சயம் உறக்கத்திலிருக்கிறோம் என்று சொல்லிவிடலாம். எப்போது விழிக்கப் போகிறோம் ????