1. தமிழகத்தின் வனப் பரப்பு 17.59% தான் உள்ளது. இருக்க வேண்டிய பரப்பளவு 33% 2. தமிழகத்தில் 7 வேளாண்மை தட்ப வெப்ப மண்டலங்கள் இருப்பதால் அதிக வகையான மரங்களை வளர்க்க இயலும்.
3. மழையளவு தமிழகத்தில் சுமார் 950 mm அளவிலேதான் கிடைக்கிறது. அதனை சிக்கனமாக பயன்படுத்தி மர வளர்ப்பில் ஈடுபட்டால் நிறைய தரிசுநிலங்களை உபயோகப்படுத்த முடியும்.
4. மரங்கள் அதிகமாக அதிகமாக மழையளவு அதிகரிக்கும். மண்ணரிப்பு குறைந்து நிலத்தடி நீர் உயரும். விவசாயம் செழிக்கும். நீருக்கான அண்டை மாநில தகராறுகள் குறையும்.
5. 1,000+ கி.மீ நீளமுள்ள கடற்கரை இருப்பதால் அலையாத்திக் காடுகளை உண்டாக்கினால் கடலரிப்பிலிருந்து நிலபரப்பை காப்பதோடு சுனாமி போன்ற இடர்களை எளிதில் சமாளிக்கலாம். கடலோர நிலத்தடி நீர் உப்பு நீராய் மாறுவதை குறைக்கலாம்.
6. புவிவெப்பத்தின் காரணமாக அதிகரிக்கும் வெப்ப உயர்வால் தானிய உற்பத்தி பாதிக்கப்படும். அதனைக் குறைக்க மரம் வளர்க்கப்பட வேண்டும்.(உலக சராசரி வெப்பதில் சுமார் 1டிகிரி c உயர சுமார் 10% இந்திய கோதுமை உற்பத்தி பாதிக்கபடும் என்று டாக்டர்.M.S.சாமிநாதன் கூறுகிறார்.)
7. விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாகுறை இருப்பதால் மரவளர்ப்பு அந்த குறையை போக்கும்.
படங்கள் உதவி : வலைதளம் படம் 1 இல் 17.4% என இருக்கும். அதிக வேறுபாடு இன்மையால் படம் எடுத்துக் கொள்ளபட்டது.
8 comments:
மிக உபயோகமான தகவல்.
அரசு என்னதான் செய்யபோகிறது என்று தெரிய வில்லை
விஜய்
திரு.விஜய்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
எங்களுக்கு டாஸ்மாக், இலவச தொலைக்காட்சி வருமானம், சன் டிவி, கலைஞர் டிவி வளர்ச்சி, சினிமா நடிகர், நடிகை கலை நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா போன்றவற்றை கவனித்துக் கொள்ளவே நேரம் போதவில்லை. இதுல மரம் வளர்ப்பு பற்றி எங்கே நினைப்பது? - இப்படிக்கு அரசு
திரு. சத்தியமூர்த்தி
உங்கள் வருகைக்கு நன்றி. நிலைமை புரிகிறது இருப்பினும் அதனையும் தாண்டி நினையுங்கள், செயல்படுத்துங்கள்.
மரம் வளர்க்க வேண்டியதுதான் . ஐயமில்லை.ஆனால் மக்கள் தயாரில்லையே .இதற்கு கைமேல் காசு கிடைக்குமா ? அடுத்தநாளைப்பற்றி சிந்திக்க தெரியாத மக்களுக்கு இதன் முக்கியத்துவத்தை எப்படிப் புரிய வைப்பது ?
திரு.குப்பண்ணன்
உங்கள் வருகைக்கு நன்றி. தற்சமயம் சில காகித ஆலைகள் வாங்குகிறார்கள்.ஜப்பான் சுனாமியை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள். அதுபோன்ற இயற்கை இடர்களை தவிர்க்க சொல்கிறோம். இல்லையென்றால் இயற்கை தரும் தண்டனையை எதிர்நோக்கத்தான் வேண்டும்.
முதலில் இந்த வெப்சைட் ஐ எனக்கு அறிமுகம் செய்த ஆனந்தவிகடனுக்கு நன்றி... மரம் வளர்ப்பின் முக்கியத்தும் நன்கு தெரிந்த பொறியாளன் நான் தற்போது என் சொந்த ஊரில் ஆசிரியர் பணி செய்கிறேன் ... மிகவும் பயனுள்ள இந்த வலைதளத்தை-ஐ பற்றியும் மரம் வளர்ப்பின் முக்கியத்தும் பற்றியும் என் மாணவர் களுக்கு விளக்கி மேம்படுத்துவேன் என உறுதி அளிக்றேன் நன்றி வணக்கங்களுடன் பிரேம் குமார் (செங்கோட்டை)
ஐயா,
தங்களின் வருகைக்கும் செயல்பாடுகளுக்கும் மிக்க நன்றி. தமிழகத்தில் நீராதாரங்கள் சீர்பட வேண்டுமானால் மரங்கள் தேவை. காலம்தான் பதில் கூறவேண்டும்.
Post a Comment