Saturday, October 19, 2013

மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம்.



 
மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால்  திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

 இன்றைய விவசாய சுழலில் மரம் ஒரு காப்பீடாக தமிழக உழவர் பெருமக்களை காத்து வந்தது. தானே புயலுக்குப் பின் அந்த நம்பிக்கையும் கேள்விக்கிடமானது. பல்வேறு தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த சாகுபடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் மரப் பரப்பையும் விரிவாக்கி, உழவர் பெருமக்களையும் அரவணைத்த வனக்கல்லூரி, மேட்டுப்பாளையம் இம்முறையும் ஆபத்தபாந்தவனாக வந்து இந்த காப்பீட்டுக்கு ஒரு காப்பீடு  திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் 11-10-2013 அன்று அறிமுகபடுத்தினர். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால் மேட்டுப்பாளையத்தில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தற்சமயம் மரம் சார்ந்த தொழில்களுக்கான 7 மரங்களுக்கு இந்த மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம் பயனளிக்கும்.

மரத்தின் பெயர்கள்
  1. சவுக்கு
  2. தைல மரம்
  3. மலை வேம்பு
  4. பெருமரம்
  5. குமிழ் மரம்
  6. சுபாபுல்
  7. சிசு மரம்.
எந்தெந்த வகையான விபத்துகளுக்குக் காப்பீடு
1.      தீ, புதர் தீ மற்றும் காட்டுத் தீ
2.      இடி/ மின்னல்
3.      கலகம்
4.      சூறைக்காற்று, புயல், சுழற்காற்று
5.      தண்ணீரில் மூழ்குதல்
6.      வன விலங்குகளினால் சேதம்.
 
இன்சூரன்ஸ் செய்யும் மதிப்பு
ஒரு குறிப்பிட்ட மரப்பயிர் 1 ஏக்கரில் பயிரிட ஏற்படுபம் அதிகபட்ச செலவுக்கான தொகையே இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகையாகும்.

காப்பீட்டுத் திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் செலவினங்கள்.
1.      நிலம் உழுதல்
2.      நாற்றுக்களின் மதிப்பு
3.      நீர் பாய்ச்சுதல்
4.      உரமிடுதல்
5.      களையெடுத்தல்
6.      மற்ற பயிர் பாதுகாப்பு செலவுகள்
7.      மற்ற தேவையான செலவுகள்

இன்சூரன்ஸ் கட்டணம்
ஒரு ஆண்டுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் மொத்தத் தொகை 1.25% (ரூ.100க்கு ரூ1.25 ) ப்ரிமியம் செலுத்த வேண்டும். இது அடிப்படை இன்சூரன்ஸ் தொகையாகும். இத்துடன் விரிவான காப்பீட்டில்  குறிபிட்ட பூச்சிகளினால் மற்றும் நோய்களினால் ஏற்படும் இழப்பையும்  இன்சூரன்ஸ் செய்ய மொத்த ப்ரிமியம் ரூ 1.60% செலுத்த வேண்டும். சேவை வரி கூடுதலானது.

மேலும் விபரங்கள் பெற
அருகிலுள்ள
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அலுவலகம்

அல்லது 

வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளையம். 641 301
தொலைபேசி எண்: 04254-222010.

Source : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் சுற்றறிக்கை