Friday, October 17, 2008

குழந்தைகளின் பார்வையில் புவிவெப்பம்- ஓவியமாய்

சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் திரைப்பட விழா, கோவை 2008 டின் ஒரு பகுதியாக குழந்தைகளைக் கொண்டு புவிவெப்பம் குறித்து ஓவியம் தீட்ட வைத்தனர். குழந்தைகள் புவிவெப்பம் என்பது என்ன ? என்று மிக மிக அழகாக தீட்டிய ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.

Thursday, October 16, 2008

“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்”-- திரு. ஜான் பெர்கின்ஸ்.

சில மாதங்களுக்கு முன் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்” (Confessions of an Economic Hit man By John Perkins. Year 2004) என்ற நூலில் திரு. ஜான் பெர்கின்ஸ் அவர்களின் வாக்கு மூலத்தை படித்தபோது தற்போது நடக்கும் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு இவ்வளவு விரைவாக உலகயே உலுக்கியெடுக்கும் என்று நான் எண்ணவில்லை. நியுயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை நூலாக 70 வாரங்கள் (Newyork Times Bestsellers ) இருந்த இந்நூல் 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்களையும், எழுதாமலிருக்க பணம் தரப்படுவதையும் மீறி சுற்றுச்சுழல், உலக அமைதிக்காக எழுதப்பட்ட நூலாக தோன்றுகிறது..

வெள்ளை மாளிகையின் கூரைகளில் திரு.கார்ட்டர் பதிக்கச் செய்திருந்த சூரிய ஒளித் தகடுகளை முதல் வேலையாக அகற்ற செய்த திரு. ரீகன் (பக்கம் 219), கியுட்டோ ஒப்பந்தத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஒத்து வராது என்று கையெழுத்திட மறுத்த திரு.புஷ் போன்றவர்களின் நிலைப்பாடுகளையும் கூறியுள்ளார்.

இறுதியாக அனுபவத்தின் மூலம் நமக்குப் பயன்படும் ஒருபட்டியலையும் தருகிறார். (பக்கம் 298)

1.பெட்ரோல் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
2.ஷாப்பிங் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எழும்போது அதற்கு பதிலாக ஒரு புத்தகம் படியுங்கள் அல்லது தியானம் செய்யுங்கள்.
3.உங்கள் வீட்டின் பரப்பளவை, ஆடைகளை, அலமாரியை, அலுவலகத்தை முடிந்த வரை சுருக்கிக் கொள்ளுங்கள்.
4.பாவப்பட்ட மக்களை அடிமைகள் போல பிழிந்தெடுக்கும் அல்லது சுற்றுச்சுழலை நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.
5.தடையற்ற வணிக ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவியுங்கள். என இப்பட்டியல் நீண்டு செல்கிறது.

படியுங்கள் நல்ல இயற்கைச் சுழலை, சுரண்டலில்லாச் சமுதாயத்தை வரும் தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோம்.

COIMBATORE CMS VATAVARAN 2008

COIMBATORE CMS VATAVARAN 2008

Environment and Wildlife Travelling Film Festival
Coimbatore: It's an encore for the Centre for Media Studies (CMS) VATAVARAN in Coimbatore, as it travels to the city for the second time to spread the message of green earth, with its CMS VATAVARAN 2008 - 3rd Environment and Wildlife Travelling Film Festival.

Situated on the banks of river Noyyal and popularly known as the Manchester of South India, Coimbatore will play host to the CMS festival from 17 – 19 October, 2008, at the Kalairangam Auditorium, R.S. Puram. Twenty five award winning and internationally acclaimed films will be screened over a period of three days from 10.30 am to 7.30 pm, daily at the Kalaiarangam Auditorium. The State Forest Service College, R.S. Puram, will be the second venue of the festival where seminar on climate change will be organized on the 18
th October followed by a Symposium on Conservation and Livelihood and Green Filmmaking workshop on October 19. There is no entry fee to participate in the festival. CMS is a national research and advocacy organisation and the festival is a part of its 3rd Environment and Wildlife Travelling Film Festival series.

Tamil Nadu, rich in biodiversity, shares with other southern states, the Western Ghats — among the 25 biodiversity hotspots designated globally. Nearly 1/3rd of the total flora of India is found in Tamil Nadu. The state is also rich in medicinal plants and domesticated biodiversity. Of the 446 primary freshwater fishes known from India, 230 species are found in the Western Ghats. The Mudumalai and the Anamalai wildlife sanctuaries are home to a wide variety of animals — tigers, elephants, the sloth bear, green pigeon, pangolin and the civet cat. But the state grapples with the issue of habitat destruction, overexploitation, pollution, and species introductions which are leading to the loss of biodiversity.

The CMS festival looks at these concerns and will also highlight the exemplary initiatives taken and efforts being made to conserve this unique biodiversity.

The festival will be inaugurated on October 17 at 11.00 am at the Kalaiarangam Auditorium by the Shri R. Venkatachalam, Mayor, Coimbatore Municipal Corporation. Noted actor and director Ms. Revathy Menon and acclaimed conservation filmmakers K.P. Sasi and Suresh Elamon will also grace the inaugural ceremony.


The Coimbatore CMS VATAVARAN initiative is being co-organized by the Salim Ali Centre for Ornithology and Natural History (SACON) Coimbatore. The Ministry of Environment and Forests, Government of India is the India Principal Partner, supporting the festival in eight cities — Agartala, Bhopal, Coimbatore, Hyderabad, Leh, Lucknow, Pune and Ranchi.

The theme for the festival is "Climate Change", in consonance with UNEP's theme of the World Environment Day, i.e. CO2 Kick the Habit: Towards a Low Carbon Economy. CMS VATAVARAN will have special sections dedicated to International Year of the Reef, International Year of Planet Earth and other environmentally significant days, as declared by UNEP.

"CMS VATAVARAN is not just celebrating the cinematic art of the films but focusing more on using the films as a tool and catalyst for change", says Dr. N. Bhaskara Rao, Chairman, CMS.

Earlier on October 12, some 41 people from the age group 4-70 years participated in an Ecotour to Kotagiri-Kodanad, about 100 kms from the city. A painting completion was also organized for children on October 12 on the theme Climate Change. Some 65 children from different schools in the city participated in the competition organized at the GD Matriculation Higher Secondary School. These paintings will be put on display at the Kalaiarangam Auditorium from Oct 17-19. The other attraction of the festival is an exclusive poster Exhibition on Climate Change.

The festival will be a free-for-public event aimed at drawing people of all ages and streams from across the city to be part of the CMS movement to conserve the state's natural riches. Further details about the festival can be had from the festival website www.cmsvatavaran.org.
For participation or any other details, please contact:
Dr. P. Pramod, Nature Education Officer, SACON, 94431 67773, neosacon@gmail.com
Ashwini Sinha, Festival Manager, CMS VATAVARAN, 09899 046542, ashwini@cmsindia.org

Tuesday, October 14, 2008

முதல் உலக கைகழுவும் தினம் 15 அக்டோபர் 2008.


இத்தினம் உங்களுக்கு வியப்பையும், அதிர்ச்சியும் தரலாம். இதற்கெல்லாம் கூட ஒரு உலக தினமா ?? என்று, ஆனால் WHO உலகில் ஆண்டிற்கு சுமார் 35 லட்சம் குழந்தைகள் தங்கள் 5 வது பிறந்த நாளை கொண்டாட உயிருடன் இருப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை தருகிறது. காரணம் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகின்றனர். காரணம் நன்றாக கைகளை சுத்தம் செய்யாமல் உண்பது மற்றும் மலம் கழித்த பின் கைகளை நன்கு சுத்தம் செய்யாமல் சென்றுவிடுவது போன்றவைகள். ஆனால் இதனை எளிதான செலவு குறைந்த முறையால் இறப்பு விகிதத்தை பாதியாக குறைக்க இயலும் என்று ஐக்கிய நாடுகள் சபை (UN) கணக்கிட்டுள்ளது. அந்த முறை சோப்பை உபயோகித்து கை கழுவுதல் ஆகும். சுமார் 20 நாடுகளில் இதனை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடுகின்றனர்.

சில விளம்பரங்களை நாம் மறப்பதில்லை.

ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைப்பாய்
லைப்பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம் இடம். லைப்பாய்

என்று விளம்பரம் செய்த lifebuoy சோப் இந்தியாவின் சுமார் 44,000 கிராமங்களுக்கு The lifebuoy Swasthya chetna என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு இயக்கம் மூலம் இந்திய கிராமங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது. இது உலகின் மிகப்பெரிய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இயக்கமாகும். நாமும் நேரம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தேவைப்படும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தருவோம். குறிப்பாக உழவர் பெருமக்கள் இரசாயன மருந்து அடித்த பின் நீரினால் மட்டும் கைகழுவிட்டு உணவருந்த வருவதை பார்த்திருக்கிறேன். சோப்பை பயன்படுத்தி கைகழுவது நல்லது.

Monday, October 13, 2008

சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் திரைப்பட விழா, கோவை 2008

சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் (Centre for Media Studies CMS) புது டில்லி, சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் (SACON) ஆனைகட்டி இணைந்து 3 நாட்கள் (17-10-08 முதல் 19-10-08 வரை ) சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் திரைப்பட விழாவை , கோவை ஆர். எஸ் புரம் கலையரங்கத்தில் நடத்தவுள்ளனர். உலகின் தலைசிறந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் ஆவணப்படங்களை திரையிடவுள்ளனர். பயிற்சிப் பட்டறையும் உண்டு.



3வது முறையாக நடத்தப்படும் இந்த திரைப்பட விழா 2008 ஆண்டு கீழ்கண்ட 8 நகரங்களில் மட்டுமே நடைபெறவுள்ளது. அதில் கோவை நகரில் நடைபெறுவது நமக்கு நன்மையும் பெருமையுமாகும். வாய்ப்பை பயன்படுத்தி வருங்கால தலைமுறைக்கு நல்ல சுற்றுச்சுழலையும், கானுயிர்களுக்கு அழிவிலிருந்து பாதுகாப்பையும் உருவாக்குவோம்.


ஆங்கிலத்தில் நிகழ்ச்சி நிரல் காண.
http://www.cmsvatavaran.org/coimbatore%20programme%20guide%20for%20net.pdf