Friday, March 7, 2008

வன உயிர்களின் நகர் வலம்

பொருளாதார மாற்றம் கிராம மக்களை நகரம் நோக்கி வர வைத்தால் ,சுற்றுச்சுழல் மாற்றம் வன உயிர்களை நகரம் நோக்கி வர வைத்துள்ளது என்பதும் உண்மை தானோ? கடந்த இரு மாதங்களாக கோவை மாவட்ட வன துறையினர் அரும்பாடு பட்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரம் பயணம் செய்து சூலூர் வரை நகர் வலம் வந்த யானைகளை கஷ்டப்பட்டு திருப்பி அனுப்பினர்.

தற்சமயம் எங்கள் குடியிருப்புப் பகுதிகளில் அழகிய பறவையினங்களும், நமது தேசீயப் பறவையான மயில் கூட்டமும் (குறைந்தது 10 ) வலம் வருகிறது. புறநகர் பகுதிகளில் கட்டிட வேலைகள் தீவிரமாக நடைபெறுவதும் ,அவினாசி சாலையிலிருந்த சுமார் 1068 மரங்கள் சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்டதும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு வந்த அந்த விருந்தினர் இருவரை வெகு அருகிலிருந்து படம் எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உணவிற்காகவும், நீருக்காகவும் அவைகள் தரையிரங்காமல் வீட்டிற்கு மேல் பறப்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.


இருவாரங்களுக்கு முன் 3 யானைகள் இரயிலில் அடிபட்டு இறந்துபோயின. ஆழியார் அணைபகுதியில் நீர் அருந்த வந்த யாணை ஒன்று தவறி விழுந்து இறந்ததாக நாளிதழில் படித்தேன். நாம் சற்று முனைப்புடன் செயல்பட்டு அடுத்து வரும் தலைமுறையினருக்கு இவைகளை விட்டுச் செல்வது நண்பர்களே!! நமது கடமை. எனவே இவைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் வாழ்வாதாரம் தேவை. அதற்கு தாவரங்கள் தேவை. சிந்திப்போம்!! செயல்படுவோம். மரம் நடுவோம், வளம் பெறுவோம்.

5 comments:

seethag said...

வின்ஸெந்ட் வெகு நாட்களாகிவிட்டது...

பறவைகளைப்பற்றி எழுதுஇருண்தீர்கள்..சிட்டுகுருவுஇ இப்போதஎல்லாம் இல்லை தெரியுமா?இங்கே ஆஸ்திரேலியாவில் தான் பார்க்க முடிகிறது.

எனக்கு இந்தியாவில் வெட்டிவேர் எங்கு கிடைக்கும் என்றூ சொல்ல முடியுமா?

வின்சென்ட். said...

திருமதி.சீதா

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அதிக இரைச்சல், கூடுகட்ட இடம் இல்லாமை(முன்பு நாம் ஓடுகள் வைத்து வீடு கட்டினோம் இடம் இருந்து.கூடவே ஒவ்வாத பெயின்ட்.)மேலும் நம்மை தவிர எறும்புகள் கூட நம் வீட்டருகில் வரக்கூடாது என எல்லாவிதமான மருந்துகளையும்,முன்பு சுகாதாரத்திற்காக பசுஞ்சாணம் இட்டு வீடு மெழுகினோம் இன்று இடம் பச்சையாக இருக்கவேண்டுமென விஷமான தடைசெய்யப்பட்ட சாணிப் பொடியை உபயோகிக்கிறோம். எப்படி மற்ற உயிரினங்கள் வாழும்???

வெட்டி வேர் நானே உற்பத்தி செய்கிறேன் எனவே என்னிடம் பெற்றக் கொள்ளலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வின்சன்ட்!
நீங்கள் கொடுத்துவைத்தவர்; மயிலுடன் வாழக் கிடைத்துள்ளது. தயவு செய்து அவற்றைத் தொந்தரவு செய்யாது ஓரளவுக்கு அனுசரித்து வாழவும்; இவை பாம்பு,பூச்சி,பூரானில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

மேலும் இங்குள்ள பல வாசனைத் திரவியத்தில் வெட்டிவேர் தைலம் கலந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனக்கு வெட்டிவேர் என்பது தாவரமா? புல்லா? என்றே தெரியவில்லை.
தயவு செய்து இவற்றின் படங்களைப் பதிவாகப் போட முடியுமா??
இங்கொரு பின்னூட்டத்தில் இது பற்றிக் குறிப்பிட்டதால் கேட்கிறேன்.

வின்சென்ட். said...

திரு.யோகன் பாரிஸ்

உங்கள் வருகைக்கு நன்றி. எனது Labels இல் கடைசியாக வெட்டிவேர் பற்றி இதுவரை 14 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.அதன் 20 பயன்களை படித்துப் பாருங்கள்.

வின்சென்ட். said...

திரு.யோகன் பாரிஸ்

உங்கள் வருகைக்கு நன்றி. எனது Labels இல் கடைசியாக வெட்டிவேர் பற்றி இதுவரை 14 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.அதன் 20 பயன்களை படித்துப் பாருங்கள்.