Saturday, March 22, 2008

உலக நீர் நாள் மார்ச் 22 ஆம் நாள்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. --திருக்குறள் --


அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். --பைபிள் சங்கீதம் /33/7
ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே நீரைப் பற்றி அதன் மறைமுக சிறப்பு பற்றி வள்ளுவர் மிக தெளிவாகக் கூறிவிட்டார். உண்மையான சொத்து (பொக்கிஷம்) துருவப் பனியும் நிலத்தடி நீரும் தான் என பைபிள் கூறுகிறது. ஆனால் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம் என்பது உண்மை. (உ.தா) தமிழகம் அண்டை மாநில உறவு. தற்கால புவி வெப்பம் குறித்து IPCC (Intergovernmental Panel on Climate Change) துருவபகுதிகளை காப்பாற்ற எடுத்து வரும் நடவடிக்கைகள்.
ஆற்றங்கரை அருகேதான் நாகரீகம் தோன்றியது என்பது வரலாறு. பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னிருந்த 'மொகஞ்சாதரோ' வின் Great Bath நம் முன்னோர்கள் நீரை எவ்வாறு உபயோகித்தார்கள் நமக்கு தெரிவிக்கிறது.

Great Bath, Mohenjodaro

சில செய்திகள்.

1) ஐக்கிய நாடுகள் சபை தண்ணீருக்கு முக்கியத்துவம் தந்து பத்தாண்டு கால வாழ்வதற்காக நீர் என்று 22 மார்சு 2005 முதல் 2015 வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறாம்.
The 'Water for Life' Decade was launched on 22nd March 2005 by the United Nations Secretary-General Kofi Annan with the following video message: ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்
Dear friends,
Water is essential for life. Yet many millions of people around the world face water shortages. Many millions of children die every year from water-borne diseases. And drought regularly afflicts some of the world’s poorest countries. The world needs to respond much better. We need to increase water efficiency, especially in agriculture. We need to free women and girls from the daily chore of hauling water, often over great distances. We must involve them in decision-making on water management. We need to make sanitation a priority. This is where progress is lagging most. And we must show that water resources need not be a source of conflict. Instead, they can be a catalyst for cooperation. Significant gains have been made. But a major effort is still required. That is why this year marks the beginning of the “Water for Life” Decade. Our goal is to meet the internationally agreed targets for water and sanitation by 2015, and to build the foundation for further progress in the years beyond. This is an urgent matter of human development, and human dignity. Together, we can provide safe, clean water to all the world’s people. The world’s water resources are our lifeline for survival, and for sustainable development in the 21st century. Together, we must manage them better.
Kofi A. Annan

2) "மித்ரடாம்" (Mithradham Renewable Energy Centre) எர்ணாகுளம் என்ற இடத்திற்கு சொன்றபோது நுண்ணோக்கி முலம் பெரிதாக்கப்பட்ட இரு படங்களைப் பார்த்ததேன்.
நீர்த்துளி ஒருவர் உணர்ச்சிவசப்படும் முன்னும் பின்னும்
நான்கு வெவ்வேறு ஆட்களின் கைகளிலிருந்து


அடுத்து உலகப்போர் வருவதாக இருந்தால் அது தண்ணீருக்காகத் தான் என அறிஞர்கள் கூறுகிறார்கள். இனியாவது கிடைக்கின்ற நீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவோம்.

2 comments:

seethag said...

மிக மிக அவசியமான அபதிவு வின்ஸெந்ட்....

முக்கியமாகா எனக்கு படுவது..சின்ன சின்ன விஷயஙளில் அலட்சியம் இல்லாமல் இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்..
உதாரணமாக:காலையில் பல்விளக்கும்போது நிறய பேர் தண்ணீரை திறண்துவிட்டு கொண்டே பல்விளக்குவார்கள்..அதில் வீணாகும் தண்ணீர் பார்க்கும்போது, பேசாமல் சொம்பு வைத்து உபயோகித்தால் செலவு குறையுமே என்று தோன்றும்..இப்படி நிறய.. சாலையோரத்தில் வீணாகும் குழாயடி தண்ணீரை யாரிடம் சொல்லுவது என்ற ப்ரச்சினையே ஒரு சலிப்பைத்தந்துவிடுகிறது......

வின்சென்ட். said...

திருமதி.சீதா
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் கூறுவது உண்மை. தனி மனிதர்கள் நீர் சிக்கனம் செய்தால் நிச்சயம் அது சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும்.