முடிந்தவுடன் கேரளாவின் "குட்டநாடு" பகுதி விவசாயி ஒருவர் மகிழ்ச்சியில் தங்கள் பகுதி விவசாயப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததாக கூறினார். அடுத்த நாள் இந்திய வெட்டிவேர் அமைப்பை தங்கள் பகுதியில் வந்து வெட்டிவேரை அறிமுகம் செய்யும் படி கேட்டுக் கொண்டார். இது வெட்டிவேருக்கும், Prof. Liyu Xu அவர்களுக்கும் கிடைத்த பெரும் வெற்றியென்றால் அது மிகையில்லை.
குட்டநாடு புகைபடம் உதவி :வலைதளம்
குட்டநாடு பகுதி உலகின் ஆபூர்வமான ஆனால் வித்தியாசமான விவசாயப் பிரச்னையுள்ள பகுதி.கடல் மட்டத்திற்கு கீழ் சுமார் 6 அடி வரை தாழ்வான பகுதி.கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியம். பொதுவாக நாம் நீரை இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சி நெல் பயிர் செய்வோம் ஆனால் அவர்கள் வயல்களிலுள்ள அதிக நீரை இறைத்து வெளியேற்றி நெல் பயிர் செய்கிறார்கள். அதிக நீர், கடல் நீர் உள் நோக்கி பாய்தல் என பிரச்னை இருப்பதால் கரைகள் பலவீனப்பட்டு உடைந்து அங்கு விவசாயப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. வெட்டிவேர் உப்பு நீரையும் தாங்கி நன்கு வளர்வதால் கரைகள் பலப்பட்டு விவசாயப் பிரச்னை தீரும் என்பது அவரது மகிழ்ச்சிக்குக் காரணம்.
சீனாவில் வெட்டிவேர் அமைப்பு ரீதியாக என்ன செய்திருக்கிறார்கள் என்று சிலவற்றைப் பார்ப்போம்.
1. 3 வது உலக வெட்டிவேர் மாநாட்டை குவாங்ச்சு நகரில் 2003 ஆண்டு நடத்தியுள்ளனர்.
2. முதலாவது உலக வெட்டிவேர் கைவினைப் பொருட்கள் பயிற்சிப்பட்டறையை நடத்தியுள்ளனர்.
3. 3 மாகாணங்கள் அதிகாரப்பூர்வமாக சாலைப் பராமரிப்புக்கு "வெட்டிவேர்" சிறந்தது என ஏற்று பரிந்துரை செய்துள்ளனர்.
4. 2004 ஆண்டு வரை ஜியாங்ஸி மாகாணம் 2,00,000 ச.மீ பரப்பும், கிஜியாங் மாகாணம் 6,00,000 ச.மீ பரப்பும் சாலை பராமரிப்புக்கு வெட்டிவேரைப் பயன்படுத்தியுள்ளனர்.
5. 2003 ஆம் ஆண்டு சீன தேசீய இரயில்வே அமைப்பு இரயில் பாதை பராமரிப்புக்கு வெட்டிவேர் சிறந்தது என அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
6. வெட்டிவேர் பற்றிய "நீயூஸ் லெட்டரை" சீன மொழியில் வெளியிடுகிறார்கள்.
.
6 comments:
வெட்டிவேர் கோடைகால கோவில் திருவிழாக்களில் நடைபெறும் கடைகளில் விற்பார்கள். வாங்கி வந்து பானைத்தண்ணீரில் போட்டு குடிப்போம், தண்ணீர் நல்ல வாசனையாகவும் குளிராகவும் இருக்கும்.
இதுபோன்ற மூலிகைகளை வெளிநாட்டுக்காரன் சொன்னால் தான் அதன் பயன்பாடே நமக்கு தெரியவருகிறது.
திரு.கோவி.கண்ணன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உண்மையில் ஆயிரமாண்டுகளுக்கு மேல் இதனை பற்றி அறிந்தும் செயல்படாமல் பொருளாதார,சற்றுச்சுழலில் பின்னடைவில் நாம் இருக்கிறோம். இனிமேலாவது செயல்படுவோம்.
பயனுள்ள கட்டுரை , பகிர்விற்கு நன்றி...
உண்மையில் ஆயிரமாண்டுகளுக்கு மேல் இதனை பற்றி அறிந்தும் செயல்படாமல் பொருளாதார,சுற்றுச்சுழலில் பின்னடைவில் நாம் இருக்கிறோம். இனிமேலாவது செயல்படுவோம
கட்டாயமாக...
திரு.பேரரசன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Vetiver is used in products of Bath and Body works in USA. The lotion smells so good!. Hope some enterprising person will introduce such products in moisturising lotions in India.
திருமதி.Vetrimagal
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.நாம் பன்நெடுங்காலமாக வெட்டிவேரை பயன்படுத்தினாலும் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது. மண் அரிப்பைத் தடுக்க பயன்படுத்தினாலே நிறைய சமுதாய மாற்றத்தை காணமுடியும்.
Post a Comment