Saturday, March 15, 2008

பசுமை விகடனில் " வெட்டி வேர்"

பசுமை விகடன் இம்மாத முதல் இதழில் வெட்டி வேருக்கென 6 பக்கங்களை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. கட்டுரையின் சிறப்பம்சமும் முக்கியமானதும் சென்னை மாநகர மேயர் திரு.மா.சுப்பிரமணியன் வெட்டி வேரை குறித்து அறிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக பரிட்சார்த்த முறையில் கூவத்தை சுத்தப்படுத்த வெட்டி வேரை பயன்படுத்தலாம் என்று கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போன்று திருப்பூர்,கரூர் சாயப்பட்டறை குறித்து பாரதியார் பல்கலை கழகத்தின் பேராசிரியர். லட்சுமண பெருமாள்சாமி அவர்கள் கூறியதையும் அட்டைப் படத்தில் நீண்ட வெட்டி வேருடன் அவர்கள் இருப்பதையும் காணலாம். " வெட்டி வேரை" சிறந்த முறையில் (மறு)அறிமுகம் செய்த பசுமை விகடனுக்கு எனது வாழ்த்துகள். சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய இதழ்.

4 comments:

ஜயராமன் said...

ஐயா,

பயனுள்ள உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. உபயோகமான இந்த தகவல்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி.

வெட்டிவேர் குறித்து போன மாதம் இந்து பத்திரிக்கை (சென்னை) யிலும் பதித்திருந்தார்கள்.

இந்த வீடுகளில் தோட்ட ஓரங்களில் பயிர் செய்யலாம் என்று தெரிகிறது. இதற்கான விதைகள் அல்லது செடி எங்கு கிடைக்கும், எப்படி விதைப்பது என்பதை விளக்கவும்.

நன்றி

ஜயராமன்

வின்சென்ட். said...

ஐயா,

தங்களின் வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி. என்னிடமே Netpot இல் உண்டு.அதைப் பற்றிய பதிவைப் பார்த்த பின் சொல்லுங்கள்.

Muthuraj said...

Thanks for your update on Vetiver..
Nearly 1000 Acres of field was spoiled due to TNPL -waste water in TNPL Sourending near by Karur..we need guidance to give re-birth for our field ..can somebody help us ..?
regards,
Muthuraj.

வின்சென்ட். said...

திரு. முத்துராஜ்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பொதுவாக கரூர், திருப்பூர்,ஈரோடு மூன்று நகரங்களும் சாயக் கழிவினால் பணமா? வாழ்வா? என்ற நிலைக்கு தள்ளப்பட்ட நகரங்கள்.பணம் ஈட்டும் அதே சமயம் சுற்றுச் சுழலையும் காப்பாற்ற முடியும்.தேவை முனைப்புடன் கூடிய செயல்பாடுகள்.
சோதனை முறையில் செயல்படுவோம்.