Saturday, March 29, 2008

புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு (Earth Hour)

The logo for Earth Hour

புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த World Wide Fund for Nature-Australia (WWF)வும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து சென்ற வருடம் மார்சு 31 ஆம் தேதியன்று சிட்னி மாநகரில் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை 1 மணி நேரம் மின்சாரம் உபயோகிக்காமல் தவிர்த்தனர். சுமார் 2.2 மில்லியன் மக்கள் தவிர்த்ததாக கணக்கிட்டனர். உடனே அது மற்ற நாடுகளையும் கவர்ந்தது. எனவே இந்த ஆண்டு (2008 ) நிறைய நாடுகளில், நகரங்களில் இதனை இன்று 29-03-2008 இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை மின் உபயோகத்தை தவிர்க்கவுள்ளனர். இதில் டில்லி மாநகரும் உண்டு. வலைப்பதிவர்கள் எங்கிருந்தாலும் சிரமம் பார்க்காமல்இன்று மின் உபயோகத்தை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

8 comments:

பிரேம்ஜி said...

நிச்சயம் இந்நிகழ்வில் இணைந்து கொள்கிறேன்.

seethag said...

many of us participated in earth hour..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆச்சுங்க.. குட்டிப்பையன் லைட்டில்லாம இருந்தா ப்ரச்சனை செய்வானோன்னு நினைச்சேன்.. ஆனா அவன் அக்காவோட ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு போயிட்டான்.. அப்பாடான்னு எர்த் ஹவர் கொண்டாடியாச்சு .. கணினி ஆஃப் செய்ததே பெரிய விசேசம் தான் ..
அப்படியே ஒரு வாக்கிங் வெளியே .. ஒரு மணி நேரம் மிச்சம் பிடிச்சாச்சு..

வின்சென்ட். said...

திரு.பிரேம்ஜி
திருமதி.சீதா
திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி

உங்கள் வருகைக்கும்,பங்கு கொண்டதற்கும் மிக்க நன்றி.

இலவசக்கொத்தனார் said...

http://elavasam.blogspot.com/2008/03/blog-post_31.html

வின்சென்ட். said...

திரு.இலவசக்கொத்தனார்

உங்கள் வருகைக்கும்,பங்கு கொண்டதற்கும் அதைப்பற்றி பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

Anonymous said...

why not it follow every month.. if we leave it we cant see our next generation ... shall we

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி. இந்த 1 மணி நேரத்தையே மக்கள் பொறுத்துக் கொள்ள மறுக்கும் போது மாதம் ஒருமுறை என்பது கஷ்டம். தற்சமயம் சனிக்கிழமைகளில் எங்கள் பகுதிகளில் தொழிற்கூடங்களுக்கு மின்வெட்டு உண்டு.அலங்கார விளக்குகள், ஆடம்பரத்தை தவிர்த்து குறைவான மின்சக்தியில் எரியும் விளக்குகள் உபயோகித்தாலே போதும்.