Monday, June 28, 2010

கண்டுபிடிப்புக்கு கல்வி ஒரு தடையல்ல. அதே சமயம் கல்வியால் மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஒருவர் பள்ளிக்குச் செல்லாதவர். இந்தியாவின் ஒரு கிராமவாசி. மற்றவர் மிக சிறந்த கல்விமான். அமெரிக்காவிலுள்ள உலகின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமான “நாசா ” வில் ( NASA ) பணியாற்றியவர். இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் இந்தியர். இருவரும் அதிகம் செலவில்லாமல் மின்சாரத்தை மிக சிறிய இடத்திலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

இராஜஸ்தான் மாநிலத்தின் lதிரு.ராஜ் சிங் தஹியா முறையான பள்ளி படிப்பு பெறாதவர். ஆனால் சாணம் மற்றும் தாவரக் கழிவுகளிலிருந்து குறைவான செலவில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது அவரது கண்டுபிடிப்பு. 10kw மின்சாரம் எடுக்க ரூ.1,25,000 மும், 35kW மின்சாரம் எடுக்க ரூ.3,25,000 மும் செலவாகின்றது. 20 கிலோ கழிவிலிருந்து 1 மணி நேரத்திற்கு 30 குதிரை சக்தி திறன் கொண்ட எஞ்சினை இயக்க முடியுமாம். இந்த கண்டுபிடிப்பிற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்.

ஜனாதிபதியிடம் விருது பெறும். lதிரு.ராஜ் சிங் தஹியா
28-01-2010 “இந்து” நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாகத்தை ஒலி வடிவில் கேட்க கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
http://blogs.thehindubusinessline.com/audio/wp-content/uploads/2010/01/biotamiloutputwav.MP3

முனைவர். K.R. ஸ்ரீதர் அமெரிக்காவிலுள்ள உலகின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமான “நாசா ” வில் ( NASA ) பணியாற்றியவர். பணிக்குப் பின் தனது ஆராய்ச்சியை சுத்தமான, குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றி பெற்று “புளூம்எனர்ஜி கார்பெரேஷன்” எனும் நிறுவனத்தை உருவாக்கி புளூம்பாக்ஸ் எனும் பெட்டியை உற்பத்தி செய்கிறார். அதனை பிரபல நிறுவனங்களான கூகுள், இபே போன்ற நிறுவனங்கள் உபயோகித்து லட்சக் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்துகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் கையடக்கப் பெட்டியில் நமது வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தை 24 மணிநேரம் 365 நாட்களும் தங்குதடையின்றி பெறமுடியும். சூரியசக்தி, காற்றாலை போன்றவற்றில் தடை ஏற்படும். இதில் அந்த தொல்லையில்லை என்பது இதன் சிறப்பு.

அதன் வீடீயோ காட்சி.


அவரது நிறுவனம் பற்றி அறிய கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
http://www.bloomenergy.com/

முதல் கண்டுபிடிப்பிற்கு மரம், மூங்கில் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுவதால் பசுமையான இந்தியாவை காண முடியும். விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இரண்டாவது கண்டுபிடிப்பால் அனல் மின் நிலைய பயன்பாட்டை குறைப்பதால் சுற்றுச்சுழல் மாசுபாட்டைக் குறைக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் இந்த இரு கண்டுபிடிப்புக்களையும் நமது நாட்டில் செயல்படுத்தினால் நிறைய செலவினங்களை தவிர்த்து சுற்றுச் சுழலை எளிதாக காப்பாற்ற இயலும். பெரிய நிறுவனங்களும் இதனை செயல்படுத்தலாம். அவ்வாறு செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

3 comments:

நீச்சல்காரன் said...

அண்ணே, இந்த மாதிரி நல்ல தகவல்களை தமிழிஷ் போன்ற திரட்டிகளில் கட்டாயம் இணைக்கணும். அப்படியே ஓட்டுப் பட்டையும் வச்சா எல்லாருக்கும் போகும்.

[ஓட்டுப் பட்டை இணைப்பதில் சிக்கல் என்றால் தாரளமாக நான் உதவுகிறேன்.]

பனித்துளி சங்கர் said...

சாதனை என்பது கல்விக்கு மட்டும் சொந்தம் இல்லை என்பதை மீண்டும் தெளிவு படித்தியது உங்களின் பதிவு . பகிர்வுக்கு நன்றி !

வின்சென்ட். said...

திரு.நீச்சல்காரன்
திரு.சங்கர்

உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.

"ஓட்டுப் பட்டை இணைப்பதில் சிக்கல் என்றால் தாரளமாக நான் உதவுகிறேன்."

உங்கள் உதவி தேவை. நன்றி.