சாலை விரிவாக்கம் முடிந்த நிலையில் மரத்தை சுற்றி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. முயற்சி எடுத்த குழந்தைகளை காணவும் அவர்களது மனநிலையை அறியவும் அவர்களை சென்று பார்த்தேன். பெரிய மழலை பட்டாளமே அங்கு இருந்தார்கள். மரத்தை காப்பாற்றிய பெருமிதம் அவர்கள் முகத்தில் இருந்தது. குழந்தைகளின் பெற்றொர், ஆட்டோ ஓட்டுனர்கள், கடை உரிமையாளர்கள் என அனைவரும் அதில் பெருமிதம் கொள்வதோடு மேலும் மரங்களை வளர்க்கவும், பாதுகாக்கவும் ஆவலாய் இருப்பது எனக்கு மேலும் உற்சாகம் தந்தது. இந்த சமூக அக்கறைதான் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. இக்குழந்தைகளின் மனதில் இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற விதையை இங்குள்ள பெரியவர்கள் விதைத்திருக்கிறார்கள் அது மிக பெரிய விருட்சமாக வளர எல்லா வரங்களையும் பெற்று மேலும் சேவை செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.. இதுபோன்று பல கோடி குழந்தைகள், மக்கள் இந்த உலகத்திற்கு தேவை.
ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.... நோ பீஸ் ஆப் மைன்ட். ( No peace of Mind )
ஆயிரம் இல்லாவிட்டாலும் வசதிகள் இல்லாவிட்டாலும் இயற்கையோடு இருந்தால் எல்லாம் உண்டு.
இது பற்றிய பழைய பதிவைக் காண:-
http://maravalam.blogspot.com/2010/05/55.html
ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.... நோ பீஸ் ஆப் மைன்ட். ( No peace of Mind )
ஆயிரம் இல்லாவிட்டாலும் வசதிகள் இல்லாவிட்டாலும் இயற்கையோடு இருந்தால் எல்லாம் உண்டு.
இது பற்றிய பழைய பதிவைக் காண:-
http://maravalam.blogspot.com/2010/05/55.html
11 comments:
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
மிக்க மகிழ்ச்சியான செய்தி
மிக்க மகிழ்ச்சி. பார்த்தாலே தெரிகிறது பாலைவனச்சோலை போல..!!
காப்பாற்றிய அனைவருக்கும் நன்றிகள்!
மிகவும்
மகிழ்ச்சியாகவும்
நெகிழ்ச்சியாகவும் உள்ளது..
அந்த பிஞ்சு முகங்களில்தான் எத்தனை பூரிப்பு சந்தோஷம். உங்களுடன் நானும் இணைந்து வாழ்த்துகிறேன்.
திருமதி.முத்துலெட்சுமி
திரு.கதிர்
திரு.ஷங்கர்
முனைவர்.இரா.குணசீலன்
உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியினை தந்த அந்த குழந்தைகளின் சார்பாக மிக்க நன்றி.
திருமதி. ராமலக்ஷ்மி
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
மகிழ்ச்சி தரும் தகவல் . பகிர்வுக்கு நன்றி நண்பரே . இளையத்தலைமுறைக்கு என் வாழ்த்துக்கள்
திரு. சங்கர்
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
அய்யா நல்லதொரு பதிவு.மழலைப் பட்டாளங்கள் மரங்களுக்குப் பாதுகாப்பாக நின்று மரமண்டைகளுக்கு பாடம் கற்பித்தது சிறப்பானது
திரு. பாண்டியன் ராமையா
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
Post a Comment