Thursday, July 8, 2010

இந்த விழிப்புணர்வு சம்பரதாய முறையாக மாறினால்......

பொதுவாக திருமண வைபவங்களில் உடை, உணவு, ஆபரணம் போன்ற காரியங்களுக்காக நிறைய செலவு செய்வதை நடைமுறை வாழ்கையில் பார்க்கிறோம். வெகு சிலரே சமூகம், உலகம் நன்றாக இருக்க இதுபோன்ற வைபவங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக உபயோகப்படுத்திக் கொள்ளுகின்றனர். திரு.பிரஷாந் அவர்களை அவரது பள்ளிக்கூட நாட்களிலிருந்தே நன்கு அறிவேன். சென்ற மாதம் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமணம் முடிவானவுடன் என்னிடம் அவர்களது குடும்பம் சார்பாக வரும் விருந்தினர்களுக்கு மரக் கன்றுகளை இலவசமாக அளிக்க விரும்புவதாக கூறியபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். திரு. பிரஷாந்
இதுபோன்ற செயல்கள் வரவேற்பைத் தருமா? என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் எண்ணியதிற்கும் மேலாக இரண்டு மணிநேரத்தில் அனைத்து மரக்கன்றுகளும் எடுத்துச் செல்லப்பட்டது. நிறைய விருந்தினர்களுக்கு கன்றுகள் கிடைக்காமல் போனது வேறு விஷயம்.

இங்கே நான் குறிப்பிட விரும்புவது மக்களிடம் விழிப்புணர்வு நிறையவே உள்ளது. அவர்களின் நேரம், நாற்றுக்கள் கிடைக்குமிடம் பற்றி அறியாமல் இருப்பது போன்ற காரணங்களால் அவர்களால் எண்ணியபடி செய்யமுடிவதில்லை. இதுபோன்ற தருணங்களை நாம் அளித்தால் அவர்கள் என்றும் (மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம்) நம்மை மறவாமல் இருப்பதற்கு ஒரு வாய்ப்பும் ஏற்படுகிறது.

இதுபோன்ற நல்ல காரியங்கள் நாளடைவில் வைபவ நாட்களில் சம்பரதாய முறையாக மாறினால் ஆரோக்கியமான எதிர் காலம் நிச்சயம் உண்டு. புதுமண தம்பதிகளை உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.

6 comments:

கபீஷ் said...

வாழ்த்துகள் ப்ரஷாந்த் தம்பதியினருக்கு.
நல்ல காரியம்:)

Vidhoosh said...

புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

மரக்கன்று முயற்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு.

:)

ராம்ஜி_யாஹூ said...

நல்ல விஷயம்.

ஆனால் இப்படி நடப் படும் கன்றுகளை நாம் முறையாக பராமரித்து மரமாக வளர்க்கும் வரை பொறுப்பு நமக்கு உள்ளது

வின்சென்ட். said...

திரு. கபீஷ்
திரு. விதூஷ்
திரு. ராம்ஜி

உங்கள் அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி. நாற்றை வாங்கி வரும் போது நமக்கும் நன்றாக வளர்க்க வேண்டும் என்ற பொறுப்பு வந்து விடும்.

ஈரோடு கதிர் said...

மிக நல்லது..

வாழ்த்துகள்

வின்சென்ட். said...

திரு.கதிர்
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.