Saturday, June 5, 2010

சுற்றுச் சுழலை மிக அதிக அளவில் மாசுபாடுத்தும் ஆனால் தவிர்க்க முடியாத பொருள்.

எண்ணை (டீசல்) இதனால் ஏற்பட்ட சுற்றுசுழல் மாசுபாடும், உயரினங்களின் அழிவும், நாட்டிற்கு நாடு போட்டி, சண்டை, கொலை பின்பு சுரண்டல் என கணக்கிட்டால் இந்த கண்டு பிடிப்பு உலக சமாதானத்தை, உயிரின அழிவை மிக அதிகமாகவே பாதித்துள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு நாட்டிலும் எண்ணை கண்டுபிடித்து அதிகார வர்கத்திற்கு லஞ்சம் தந்து உள்ளூர்வாசிகளை வதைத்து எண்ணை எடுத்து அதை கடலில் கொட்டி நாசம் செய்து பின் சேருகின்ற இடத்திலும் புகையை விட்டு வளி மண்டலத்தை நாசம் செய்த கண்டுபிடிப்பு இது. ஆனால் டீசல் எஞ்சினை கண்டுபிடித்த திரு. ரூடால்ப் டீசலின் முதல் எஞ்சின் தாவர எண்ணை கொண்டுதான் ஓட்டப்பட்டது. (நூறு ஆண்டுகளுக்கு முன்பே )எஞ்சினை தாவர எண்ணைக்கு சிறப்பாக மாற்றாமல் தடம் மாறி எரிபொருள் “கச்சா எண்ணை” என்று ஆனபோது மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் நடந்து இன்று அழிவின் எல்லைக்கு வந்தவுடன் “ஞானம் பிறந்து” மறுபடியும் “பயோ-டீசல்” என பெருமளவு தொகையுடன் ஆராய்ச்சிகள். அதிலும் நம் நாட்டில் நன்கு விளையும் புன்னை, புங்கன் போன்ற வறட்சியை தாங்கி வளரும், நோய் சற்று குறைவான சுற்று சுழலை மேம்படுத்தும் தாவர வகைகளை விடுத்து ஜெட்ரோபாவில் அதிக கவனம் ஓரு நெருடல்தான். உணவு பொருட்களையும் “பயோடீசலாக” மாற்ற நினைப்பது ஏழை மற்றும் வளரும் நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சென்ற மாதம் ஏற்பட்ட மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவை பார்த்தோம். இதே போன்ற மிக மோசமான எண்ணை விபத்து "எக்ஸான் வால்டெஸ்" எண்ணை விபத்து ஆகும். கடற்பகுதியில் மனிதானால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான விபத்து ஆகும்.

1989 ஆண்டு மார்சு மாதம் 24 ஆம் தேதி அலெஸ்காவின் “பிரின்ஸ் வில்லியம் சௌண்ட்” பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து லட்சக் கணக்கான பறவைகளையும், கோடிக் கணக்கான மீன்களையும் அழித்து நிறைய மீன்பிடி, சுற்றுலா நிறுவனங்களை திவாலாக்கியது. மக்களின் உணவு மற்றும் வாழ்வாதாரங்களை பாழடித்தது. 5 பில்லியன் நஷ்ட ஈடு கேட்கப்பட்டு பின் மிக குறைவான தொகைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுசுழல் மாசுபாடு இன்று வரை தொடர்கிறது.

இந்த சுற்றுச்சுழல் தினத்தன்று சில வரையறைகளை, இலக்குகளை நமக்கு நாமே விதித்து செயல்படுத்தலாம்.

சிறிது தூர பயணத்திற்கு சைக்கிள் உபயோகப்படுத்துவது. ( உடற்பயிற்சியும் கூட)
அருகிலுள்ள ஊர்களுக்கு பேருந்தை உபயோகிப்பது.
தூரத்திலுள்ள ஊர்களுக்கு இரெயில் பயணம்.
குழந்தைகளை முடிந்த அளவிற்கு பள்ளிப் பேருந்தில் அனுப்புவது.
நாமும் நிறுவன வாகனங்கள் இருந்தால் அதனை உபயோகிப்பது.
நமது வழக்கமான பாதை நெருக்கடி மிகுந்ததாக இருந்தால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது அல்லது மாற்றுப் பாதையை உபயோகிப்பது.
அருகிலுள்ளவர்களையும் இணைத்து ஓரே ஊர்தியை முடிந்த அளவிற்கு உபயோகிப்பது.
மின்சார வாகனங்களுக்கு மாறுவது ( வேகம் வசதி குறைவுதான் )
மின்தடையின் போது ஜெனரேட்டர்களுக்கு பதில் சூரிய விளக்கு (Solar light) அல்லது காற்றாலைகளை உபயோகிப்பது.
எண்ணை வித்து மரங்களை நடுவோம்.
மாற்று எரிபொருளை ஆராய்வோம்
ஈயம்[lead] கலக்காத எரி பொருளை பயன்படுத்தலாம்.
வாகன புகையளவை கட்டுக்குள் வைக்கலாம்.
(வேறு ஏதேனும் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். )

4 comments:

நீச்சல்காரன் said...

அண்ணே,
இந்த தகவலை திரட்டிகளில் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஈயம்[lead] கலக்காத ஏரி பொருளை பயன்படுத்தலாம்.
வாகன புகையளவை கட்டுக்குள் வைக்கலாம்

வின்சென்ட். said...

திரு. நீச்சல்காரன

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் இரு ஆலோசனைகளும் பதிவில் ஏற்றிவிடுகிறேன். மிக்க நன்றி.

Essar Trust said...

இன்றய தேவை மற்றும் பின்தொடரவேண்டிய அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி அய்யா....

வின்சென்ட். said...

M/s Essar Trust

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.