Monday, March 22, 2010

இந்தியாவில் தண்ணீர் உபயோகம் - ஓரு பார்வை.


3 % வீட்டு உபயோகிப்பாளர். அரசாங்கத்தின் முன்னுரிமை இவருக்குத்தான் என்றாலும் பன்னாட்டு கம்பெனிகள் இவரிடம் தான் தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள். இயற்கையின் பொக்கிஷமான நிலத்தடி நீரை உறிஞ்சி நம் ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்து பாட்டில்களில் அடைத்து கொள்ளை லாபத்தில் விற்று விடுகிறார்கள்.


நன்றி : 2006 ஆண்டு ஏப்ரல் 21 Front line இதழ்

சுத்தம் கருதி வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இல்லையேல் மருத்துவு செலவு கூடிவிடுகிறது.

5 % தொழிற்சாலை உபயோகிப்பாளர். . அரசாங்கத்தின் முன்னுரிமையில் மூன்றாவதாக வருபவர். இவரிடம் பணம், பதவியிருப்பதால் பாதாளம் வரை சென்று பிரச்னைகளை குறைத்து கொள்கிறார். இவரது செயல்கள் அத்துமீறும் போது சட்டங்கள் இவரை பாதிக்கின்றது. நமது நீராதரங்களை மிக அதிகமாக மாசுபடுத்துபவர் இவரே. சமூக அக்கரையின்றி லாபம் மட்டுமே இவரது குறிகோளாக இருப்பதால் தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், ஆம்பூர் போன்ற நகரங்கள் சாயம் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் அதன் நீர்வளம் கெட்டது உண்மை. லாபத்தோடு சமூக அக்கரையிருந்தால் நல்ல எதிர்காலம் இந்தியாவிற்கு உண்டு.

92 % விவசாய உபயோகிப்பாளர். திருவள்ளுவர் காலத்தில் இவரை மற்றவர்கள் தொழுது கொண்டிருந்தது போய் தற்சமயம் இவர் மற்றவர்களை தொழுது கொண்டிருக்கிறார். படிக்காத மேதைகள் உண்டு ஆனால் வெளிச்சம் அவர்கள் மேல்படுவதில்லை. எளிதாக ஏமாற்றப்படுபவர். நேர்மை, தன்மானம் நிறைய உள்ளதால் சொற்ப தொகைக்குக் கூட உயிரை மாய்த்துக் கொள்வார். இவர் நாட்டின் முதுகெலும்பாக இருப்பதால் சில யுக்திகளை கடைபிடித்தாலே மிக பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும்.

இயற்கை விவசாயத்திற்கு மாறுவது.
பண்ணை குட்டை அமைத்தல்.
சொட்டு நீர் பாசனம்
துல்லிய பண்ணை விவசாயம்.
பசுமை குடில் விவசாயம்
மரம் வளர்ப்பு
தண்ணீர் வசதிகேற்ற பயிர்கள் .
வறட்சியை தாங்கி வளரும் பாரம்பரிய பயிர்களை பாதுகாப்பது.

புழுதிநெல் சாகுபடி (http://maravalam.blogspot.com/2010/01/blog-post_21.html )

எனது வெர்சுவல் வாட்டர் ( Virtual Water ) என்ற பதிவை அவசியம் படியுங்கள்.
http://maravalam.blogspot.com/2008/09/blog-post.html

அனைவருமே நீர் உபயோகத்தை குறைத்து கொள்வது, மறுஉபயோகம், மறுசுழற்சி செய்தால் (Reduce, Reuse and Recycle ) வருகின்ற தலைமுறைக்கு நல்லது.

2 comments:

நீச்சல்காரன் said...

அருமை நல்ல பதிவு.
நண்பரே உங்கள் முயற்சியால் அதிக விழிப்புணர்வு பதிவுகள் கிடைத்துள்ளது. தொடர்ந்து பல துறைகளில் இயற்கையை பாதுகாக்க எழுதுங்கள்

எனது பங்களிப்பு:
http://ethirneechal.blogspot.com/2010/03/joy.html
http://neechalkaran.blogspot.com/2010/03/green.html

வின்சென்ட். said...

திரு.நீச்சல்காரன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

"இயற்கையை பாதுகாக்க எழுதுங்கள் "
எழுதுவோம் என்று கூறுங்கள். இதில் உங்கள் பங்கு நிச்சயம் மகத்தானது. எளிதாக ஓரே இடத்தில் அனைத்து பதிவுகளையும் இடம் பெற செய்து எல்லோரையும் படிக்க வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.