
உலகிலேயே முதல் முறையாக குஜராத்தின் சில மாவட்டங்களில் பருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு (Pink bollworm) எதிராக Bt பருத்தி செயல்படவில்லயென்றும் பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுவருகின்றன என்றும் மான்சாண்டோ ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக அவர்களது போல்கார்டு II பயன்படுத்தும்படி ஆலோசனையும் கூறியுள்ளனர். “இந்து” நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது காரணம் உலகின் விதை சாம்ராஜியத்தின் முடிசூடா மன்னர்கள் ஒரு சாதாரண கனடா நாட்டு விவசாயி ஒருவரை செய்யாத குற்றதிற்கு 1998 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து $400,000 நஷ்ட ஈடு தரவேண்டுமென கோரியவர்கள் இயற்கைக்கு தலை வணங்குகிறார்கள் என்பதால் தான். தீர்ப்பு மான்சாண்டோவுக்கு என்றாலும் விவசாயி நஷ்ட ஈடு தரவேண்டியதில்லை என வழக்கு முடிந்தது. உலகபுகழ் பெற்ற இந்த வழக்கை விபரமாக படிக்க கீழ்கண்ட தொடர்பு உதவும்.
http://www.percyschmeiser.com/conflict.htmஉலகின் முதன்மையான நிறுவனமே ஒரு கால கட்டதில் Bt யின் செயல்திறன் பற்றி ஓப்புக்கொள்ளும் போது உணவுப் பயிர்களில் மரபணுமாற்றம் தேவையா ???
அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.
4 comments:
நல்லதோர் பதிவை வெளியிட்டமைக்கு நன்றி!
திரு.சுந்தரராஜன்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
உலகின் முதன்மையான நிறுவனமே ஒரு கால கட்டதில் Bt யின் செயல்திறன் பற்றி ஓப்புக்கொள்ளும் போது உணவுப் பயிர்களில் மரபணுமாற்றம் தேவையா ???//
நல்லாக்கேட்டீங்க ...
திருமதி.முத்துலெட்சுமி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment