Saturday, March 20, 2010

உலக சிட்டுக்குருவிகள் தினம்

மறைந்து வரும் சிட்டுக் குருவியிகளை காப்பாற்ற இந்த வருடம் முதல் உலக வீட்டு சிட்டுக்குருவி தினமாக 20-03-2010 (இன்று) அறிவித்து உலகம் முழுவதும் கொண்டாடவுள்ளனர்.

http://www.worldhousesparrowday.org/

எண்பதுகளின் பிற்பகுதியில் புதிதாக வீடுகட்டி வந்த போது சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு வீடுகள் இல்லை. எங்கள் வீடு மட்டுமே. காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கும் அதிகமான சிட்டுக்குருவிகள் இனிய சத்தத்துடன் வீட்டை சுற்றியிருக்கும். எங்கள் அம்மாவும் அவைகளுக்கென சில தானியங்களை வாங்கி போடுவார்கள். மனிதர்களுடன் ஒன்றி வாழும் அவைகளில் சில பயமின்றி வீட்டிற்குள் வந்து நிலைக் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து அதனுடன் மோதிக்கொண்டிருக்கும். ஆனால் இப்போது அவைகள் இப்பகுதியில் இல்லை என்பதே உண்மை. இயற்கையின் அருளால் வேறு சுமார் 10 பறவையினங்கள் அதிகாலை முதல் மாலை வரை அதனதன் நேரத்திற்கு வந்து செல்கின்றன. ஆனாலும் சிட்டுக் குருவிகள் இல்லாதது மாபெரும் குறையே.

1. இரசாயான மருந்துகள் தெளிப்பு. ( நஞ்சு உணவு)
2. ஓட்டு வீடுகள் மாறி மாடிவீடுகள். ( கூடு கட்டுவதற்கு வசதியின்மை )
3. செல்போன் டவர்களின் கதிரியக்கம் ( முட்டைகள் பொறிப்பதில் சிக்கல்.)
4. வாகன இரைச்சல் ( அமைதியற்ற சுழல்.)

என காரணங்கள் கூறுகிறார்கள். ஆரோக்கியமான சுற்றுச் சுழல் ?????

நமது கண்களுக்கு மண்ணில் மண்புழுவும், மண்ணிற்கு மேல் மரங்களும், நீர் நிலைகளில் மீன்களும், ஆகாயத்தில் பறவைக் கூட்டங்களும் ஒரு பகுதியில் இருந்தால் அப்பகுதி ஆரோக்கியமாக உள்ளது என்பது இயற்கையின் பொது நியதி.
=================================================
வசந்த காலத்தில் வரவேண்டிய பறவையினங்கள் வராமல் போன காரணத்தை வெளிச்சம் போட்டு காட்டிய நூல் “மெளன வசந்தம்” ஆசிரியர் சுற்றுச்சுழல் விஞ்ஞானி ரேச்சல் கார்சன் ( The Silent Spring By Rachel Carson ). DDT யின் அழிவிலிருந்து காப்பாற்றிய, சுற்றுச்சுழலைப் பற்றிய விழிப்புணர்வை தந்து 1962 வருடமே உலகை திருப்பிப் போட்ட நூல். அனைவரது இல்லத்திலும் இருக்கவேண்டிய நால்.

இந்த நூலைப் படித்தால் ஏன் சிட்டுக் குருவிகள் மறைந்து வருகின்றன என்பதற்கு விடை கிடைக்கும் எனவே அவர் நினைவாக இந்த பதிவை வலையேற்றுகிறேன்.
படங்கள் உதவி : வலைதளம்

12 comments:

ரவிசாந் said...

பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ரொம்ப கொடுமைங்க, ரைஸ் மில் பக்கம் போனா நிறைய கூட்டமா பறந்துவரும் இப்ப அதுவும் இல்ல..:(

ஹும்ம் எங்க போய் முடியபோகுதோ??

வின்சென்ட். said...

திரு.ரவிசாந்
திரு.ஷங்கர்

உங்கள் இருவரின் வருகைக்கும் நன்றி.

"ஹும்ம் எங்க போய் முடியபோகுதோ??"

எனக்கும் புரியவில்லை பணத்தால் இவைகளையெல்லாம் உண்டாக்க முடியாதே!!!

கோமதி அரசு said...

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா ? உன் இனம் அழிய மனிதன் தான் காரணம்.

செல்போன் டவர்களின் கதிரியக்கம் தான் காரணம். தெரிகிறது ஆனால் சிட்டுக் குருவியை காப்பற்ற என்ன வழி?

இறைவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

Er said...

மனம் நிறைந்து... உளமாறச் சொல்கிறேன்.

நீங்கள் இது போல் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

பல விருதுகள் பெற வேண்டும்.

அன்புடன்
Sudharsahanam, Er.Subha

Essar Trust said...

மரணத்தின் அழைப்பில்... அஞ்சி நடுங்கும் மனித மனதின் துடிப்பு....
அருமையா இருக்குன்னு ஒரு வரியில சொல்லிட்டு போகமுடியாதபடி கட்டிப்போட்ட பதிவு,
Essar Trust

வின்சென்ட். said...

திருமதி.கோமதி அரசு
திரு.சுதர்சனம் & திருமதி.சுபா
M/s Essar Trust

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

மாதேவி said...

"சிட்டுக்குருவிகள் தினம்" மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

நகரங்களில் காண்பது குறைவு.

பக்கத்து வீடுகளில் அதிசயமாக மாமரங்கள் நிற்கின்றன.அணில்கள் வழமையாக எங்கள் வீட்டு பல்கனி பூந்தொட்டியில் வந்து மண்ணைக்கிளறும்.

சென்றவாரம் இரண்டு சிட்டுக்குருவியும் வந்தது ஆச்சரியம்.

வின்சென்ட். said...

திருமதி. மாதேவி

உங்கள் வருகைக்கு நன்றி. இங்கு அணில் குடும்பங்கள் உண்டு. 10 இன பறவைகள் உண்டு. ஆனால் சிட்டுகள் மட்டும் இல்லை.

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

பயனுள்ள பதிவு. நன்றி.

வின்சென்ட். said...

திரு.சுந்தரராஜன்

உங்கள் வருகைக்கு நன்றி.

சி. கருணாகரசு said...

தகவல்கள் மனதை கசக்குகிறது.... எனக்கும் சிட்டு குருவியின் அருகாமை பிடிக்கும்.... அதை உணர்ந்தவன்.
உங்களின் பகிர்வுக்கு நன்றிங்க.