கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள உள்ள மிகப்பெரிய ஏரி “தி கிரேட் லேக்ஸ்”. ஐந்து பெரிய ஏரிகளையும் மேலும் சிறு சிறு ஏரிகளையும் உள்ளடக்கியது.
நடுவில் இருப்பவர் திருமதி.ஜோசபின் மண்டாமின்.
இந்த ஏரிகளைச் சுற்றி பூர்வ குடிகள் ஆண்டாண்டு காலமாக வசித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்கை மற்றும் உணவு இந்த ஏரிகளை சார்ந்தே இருந்தது. மீன்கள் பூர்வ குடிகளின் பிரதான உணவு. வழக்கமான மேற்கத்திய பொருளாதார போக்கு இந்த ஏரிகளையும் மாசடைய வைத்து பூர்வ குடிகளின் நடைமுறை வாழ்கையை பாதித்தது. சுமார் 35 மில்லியன் மக்களின் குடிநீராதாரம் இந்த ஏரிகளே. 63 வயதை எட்டியிருந்த திருமதி.ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருவர். தண்ணீரோடு பேசுபவர். அது மாசுபடுவதை பொறுக்காமல் இந்த முதுமை பருவத்திலும் 2003 ஏப்ரல் முதல் ஓவ்வொரு வருடமும் வசந்த காலத்தில் காலை 5 மணிக்கு முன்னரே எழுந்து பக்தியுடன் 8 லிட்டர் அளவுள்ள தாமிர வாளியில் நீரை சுமந்து நடைபயணத்தை ஆரம்பித்து வழியெங்கும் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த ஏரிகளின் தூய்மைக்கு பாடுபடுகிறார். அவர் 2007 ஆண்டு வரை 5 ஏரிகளையும் சுற்றி வந்து விட்டர்ர். நடந்த தூரம் சுமார் 17,000 கி.மீ. சென்ற வருடம் செயின்ட. லாரன்ஸ் நதிக்கரையில் நடந்துள்ளார். ஆரம்பத்தில் பரிகாசம் செய்யப்பட்ட நடை பயணம் இன்று ஒரு சாதனைப் பயணமாக மாறி ஊடகங்கள் பின் தொடருமளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. சாதாரண, வயது முதிர்ந்த பூர்வகுடி பெண் திருமதி.ஜோசபின் மண்டாமின் மிகப் பெரிய சாதனையாளர் மட்டுமல்ல வணக்கதிற்கும், போற்றுதலுக்கும் உரியவர். அவர் மேலும் பல செயற்கரிய செயல்கள் செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.
நடைப்பயணம் பற்றி மேலும் அறிந்துகொள்ள
www.motherearthwaterwalk.com
தொடர்பை பயன்படுத்துங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமையான தகவல் வின்செண்ட்... பகிர்வுக்கு நன்றி!
அய்யா நான்தான் பர்ஸ்ட் !
அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . குடியைக் கெடுக்கும் தண்ணி பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் . குடிக்கும் தண்ணீர் பற்றி சற்று சிந்திக்கலாம் .
மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவான் பனித்துளி !
திரு.செல்வேந்திரன்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
திரு.பனித்துளி சங்கர்
உங்கள் வருகைக்கு நன்றி.
"குடியைக் கெடுக்கும் தண்ணி பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் . குடிக்கும் தண்ணீர் பற்றி சற்று சிந்திக்கலாம்".
கண்டிப்பாக சிந்திக்கவேண்டிய ஒன்று.
மீண்டும் வரும்போது பதிவுடன் வாருங்கள்.
Post a Comment