Monday, October 26, 2009

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறைக்கு “அபிடா” அங்கீகாரம்

தமிழ்நாடு அரசால் மே 2007 ம் வருடத்தில் நிறுவப்பட்ட அங்ககச் சான்றளிப்புத்துறைக்கு மத்திய அரசு “அபிடா” நிறுவனத்தால் மதிப்பேற்றல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பேற்றல் தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி வழங்கப்பட்டு, மதிப்பேற்றல் எண் NPOP/NAB/0019 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..இதன்படி தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையின் கீழ் பதிவு செய்யப்படும் அங்ககப்பண்ணைகளை (Organic Farms )தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி ஆய்வு செய்து உரிய சான்றுகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு வழங்கப்பட்ட மதிப்பேற்றல் ஐரோப்பா கமிஷன், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் வேளாண்மைத்துறையின் மதிப்பேற்றல் வழங்கும் நடைமுறைக்கு இணையாகும்.

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையால் வழங்கப்படும் சான்றுகள் இந்தியாவிலிருந்து அங்ககப் பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பயன் உள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் அங்கக பயிர் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல், அங்கக இடுபொருள் உற்பத்தி, வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு சான்று வழங்க உரிய நடைமுறைகள் மற்றும் தரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கக முறையில் வேளாண்மை மேற்கொள்ளும் விவசாய்கள், விவசாயக்குழுக்கள் மற்றும்வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்ககப்பண்ணைகளை கீழ்கண்ட முகவரியில் பதிவு செய்து பயன் பெறலாம். வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.

இதன் முக்கிய அம்சம் சிறு/குறு விவசாயிகள் கூட பல ஆயிரங்களை செலவு செய்யாமல் சில நூறு ரூபாய்களில் அங்ககச் சான்றிதழ் மற்ற நாடுகளுக்கு இணையானதை பெறலாம் என்பதுதான். இது பற்றிய எனது பழைய பதிவினைக் காண தமிழகத்தில் அங்கக சான்றளிப்புத் துறை

இயக்குநர்,
அங்கக சான்றளிப்புத் துறை,
1424 எ, தடாகம் சாலை,
ஜி.சி.டி. போஸ்ட்கோவை- 641 013
தொலைபேசி எண் : 0422-2435080
பேக்ஸ் : 0422-2457554
மின்னஞ்சல் : tnocd@yahoo.co.in

6 comments:

ரவி said...

தகவலுக்கு நன்றி வின்செண்ட்.

வின்சென்ட். said...

திரு.செந்தழல் ரவி

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. பல ஆயிரங்கள் செலவு செய்தால் மட்டுமே உலகத்தர சான்றிதழ் என்பது மாறி சிறு/குறு விவசாய்களும் சில நூறு ரூபாய்களில் உலகத்தர சான்றிதழ்பெற முடியும் என்பது சில ஆண்டுகளுக்கு முன் நடைபெறாத ஒன்று. இன்று சாத்தியம். ஆனால் சிறு/குறு விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்த வேண்டும்.

Anonymous said...

Sir,
Your prompt publication of Accreditation to TNOCD,Tamil Nadu shall be of great use not only to organic farmers of Tamil Nadu but also to consumers who are in search for healthy,non toxic and tasty organic products.May your service live long.
A.B.Rafiulla,
Coimbatore.

வின்சென்ட். said...

Sir

Thank you very much for visiting my blog and for your comments.

Sundararajan P said...

இயற்கை வேளாண்மை செய்பவர்களுக்கு ஊக்கம் தரும் செய்தி.

நன்றி திரு. வின்சென்ட்.

வின்சென்ட். said...

திரு.சுந்தரராஜன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.