
இந்த வருடமும் கொடீசியா வளாகத்தில் 9 வது முறையாக அக்டோபர் 2 தேதி முதல் 5 தேதி வரை இந்த விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. சென்ற சில ஆண்டுகளாக சுமாராக இருந்தது. இந்த வருடம் வேளாண்மை பல்கலைகழகமும் இணைந்து நடத்துகிறார்கள். விவசாயம் பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகி வரும் வேளையில் தொழில் நுட்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். பொதுவாக இது போன்ற கண்காட்சிகள் நமது சிந்தனைகளை, செயல்பாடுகளை ஏதோ ஓரு விதத்தில் மாற்றும். இன்றைய நிலைமையில் மாற்றம் தேவை. எனவே உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்.
இடம் :
கொடீசியா வளாகம், அவினாசி சாலை, கோவை.
நாள் :
அக்டோபர் 2 முதல் 5 தேதி வரை
No comments:
Post a Comment