Monday, October 19, 2009

சந்தை விரிவாக்கத்துறை- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்

உழவு செய்பவர்களுக்கும் உண்பவர்களுக்கும் இடையில் நடக்கும் காரியங்கள் இருவரையுமே துக்கத்தில் ஆழ்த்திவிடுகின்றன. இடையில் இருப்பவர் எந்தவித உழைப்பின்றி பதுக்கல், பேரம், முன்வர்த்தகம், என்று பணம் பார்த்துவிடுகிறார். இதனை சரிசெய்ய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் “சந்தை விரிவாக்கத் துறை” என்ற துறையை 14-05-09 முதல் துவக்கி செயல்படுத்திவருகின்றனர்.

நோக்கம் :

# வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியாளர் குழுக்கள்அமைத்து தொகுப்புக்களாக செயல்பட பயிற்சி அளித்தல்.
To promote commodity based farmers groups.

# வணிக, நிதி, காப்பீடு மற்றும் வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தி விவசாயிகள் (குழுக்கள்)/உற்பத்தியாளரின் பொருட்களுக்கு மேம்பட்ட சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்.
To promote Institutional linkages for commodity groups for better marketing.

# விளைபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு கருத்தரங்குகளை நடத்துதல்.
Conduct workshops on linking markets and farmers and organize buyer- seller meets.

# சந்தை நிலவரம் பற்றிய தகவல்களை சேகரித்து, அதனை பிற 29 வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றம் வேளாண் துறையுடன் பகிரந்து கொள்ளுதல்.
To scout the market information and share it with all 29 KVKs and line departments.

# சந்தையில் விலை மாற்றங்கள், சந்தை தகவல்கள் குறித்து விரிவாக்கப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.
To offer master training to developmental workers on market forces,intelligence and informationsystems.

# தமிழ்நாடுஅரசின் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு விற்பனை மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தல்.
To provide training on marketing management to line department Officials.

இத்துறை மாநில வேளாண் வணிக மற்றும் தொழில் துறை இயக்குநரகம், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (APEDA) , முறைசார்ந்த மற்றும் முறை சாராத சந்தைகள், கொள்முதல் செய்வோர் மற்றும் விற்பனையாளர்களிடம் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பிற்கு :

பேராசிரியர் மற்றும் தலைவர்
சந்தை விரிவாக்கத்துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
கோயம்புத்தூர். 641 003.
தொலைபேசி : 0422-6611315.
Source : சந்தை விரிவாக்கத்துறை- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் கையேடு.

4 comments:

kuppusamy said...

16-10-2009 அன்று சந்தை விரிவாக்கத்துறைத் தலைவர் கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம் தமிழ்நாடு வேளைன்மை பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பாலமாக இத்துறை செயல் படும் என்றார். புது மூயற்றசிகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். நன்றி வின்செண்ட் அவர்களெ.

வின்சென்ட். said...

திரு.குப்புச்சாமி அவர்களுக்கு

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. நல்லது நடக்கும் போது அது மக்களைச் சென்றடைய வேண்டும்.

A.B.Rafiulla said...

Sir,
Your prompt publication of Accreditation to TNOCD,Tamil Nadu shall be of great use not only to organic farmers of Tamil Nadu but also to consumers who are in search for healthy,non toxic and tasty organic products.May your service live long.
A.B.Rafiulla,
Coimbatore.

வின்சென்ட். said...

Sir

Thank you very much for visiting my Blog and your valuable comments.