

வடஇந்திய ஆடுகளான சிரோஹி மற்றும் பீட்டல் இனங்களை காட்சிக்காக “கண்மணி மார்டன் பார்மஸ்” (98940-45389) வைத்திருந்தார்கள். ஏழைகளின் பசு என்றால் அது மிகையில்லை. பீட்டல் இன ஆடுகள் சுமார் 4 லிட்டர் பால் (குட்டிகளுக்கு போக) தருவதாக கூறினார்கள். விற்பனையும் உண்டு.
டெல்லியிருந்து அழகுசெடிகள்,ஆர்கிட் வகைகள் வைத்திருந்தார்கள். ஜின்செங் வேரில் பைகஸ் வகை செடியை ஒட்டுச் செடியாக்கி வைத்திருந்தார்கள் விலை ரூ.500/= தான். வெளிநாட்டு பூக்களின் கிழங்குகளை வைத்திருந்தார்கள் விலை சற்று அதிகமென தோன்றியது.
லின்ட்சே கார்போரேஷனின் (Lindsay Corporation) தண்ணீரை சிக்கனமாக தெளிக்கும் அமைப்பை காட்சிக்காக வைத்திருந்தார்கள். நிறுவுவதற்கு கணிசமான தொகை தேவைப்படும் என தோன்றுகிறது. கம்பெனி விவசாயத்திற்கு ஏற்றது.
அனைவரையும் கவர்ந்தவர்கள் இந்த மிக உயரமான கலைஞர்கள்தான். கூட்டதிற்கிடையே மிக எளிதாக வலம் வந்து அசத்தினார்கள்.




9 comments:
தகவலுக்கு மிக்க நன்றி!
இந்த ஆடுகளின் மற்ற விவரங்கள் ( வளர்ப்பு முறை, பயன்பாடு போன்றவைகளை) பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
திரு.ஆளவந்தான்
உங்கள் வருகைக்கு நன்றி. "இலாபகரமான வெள்ளாடு வளர்ப்பு" என்ற நூல் கொடுத்திருக்கிற எண்ணில் தொடர்பு கொண்டால் கிடைக்கும்.அந்த நூலில் தகவல்கள் உண்டு.நூலின் விலை ரூ.50/=. அனுபவம் இல்லாமல் பகிர்ந்து கொள்ளவது சரியாக படவில்லை.
தகவல்களுக்கு நன்றி நண்பரே. நானும் ஓர் பதிவு ஆரம்பித்து உள்ளேன்.
agasool.blogspot.com
என்னால் முடிந்த அளவு வேளாண் செய்திகளை வெளியிடுகிறேன்.
நன்றி
விஜய்
திரு. விஜய்
உங்கள் வருகைக்கு நன்றி. எனது வலைப் பூவில் Link தந்து விடுகிறேன் உங்கள் அனுமதியுடன்.
its give some innovative ideas... thanks for posting.
திரு. சரவணகுமார்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
4 லிட்டர் பாலா ?
சூப்பர்
திரு.செந்தழல் ரவி
உங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment