Friday, October 23, 2009

மண்புழு உரப்படுகை - எளிய தொழில்நுட்பம்

எதிர்பார்த்தபடி அக்ரி இன்டெக்ஸில் சில எளிய தொழில் நுட்பங்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.அவைகளில் ஒன்று மண்புழு உரம் தயாரிக்க உதவும் மண்புழு உரப்படுகை. மண்புழு உரம் தனியாக தேவைப்படுவதால் நாமே இதனை வாங்கி உபயோகிக்கலாமென்று வாங்கி நிறுவி பார்த்ததில் எளிமையாக உள்ளது. நிறுவுவதும் மிக எளிது. காற்று படுகையினுள் சென்றுவர வசதியாக வலைஅமைப்பு உள்ளது.மண்புழுகுளியல் நீர் (Vermiwash) எளிதாக எடுப்பதற்கு வசதி தந்திருப்பது இதன் சிறப்பு. அமைக்கும் போது இந்தப் பகுதி தாழ்வாக இருக்கமாறு அமைத்தால் எளிதாக மண்புழுகுளியல் நீர் சேகரிக்கலாம்.கட்டிடம் ,கூரை தேவையில்லையென தோன்றுகிறது. தேவைப்படின் இதற்கு மேலாகவே HDPE Sheet கொண்டு மிக எளிதாக கூரை அமைக்கலாம். வழக்கம் போல் எறும்புத் தொல்லை உண்டு. படுகையைச் சுற்றி மஞ்சள் பொடி இட வசதியாக உள்ளது. எறும்பு மருந்து இடுபவர்களுக்கும் வசதிதான் உரப்படுகையை சுற்றி இட்டாலும் புழுக்களுக்கும் மருந்திற்கும் இடையே உரப்படுகையிருப்பதால் புழுக்களுக்கு சேதம் இல்லை. மாடித்தோட்டத்தில் கூட பயன்படுத்த உகந்தது.
தொடர்பிற்கு
ஸ்ரீ அர்ஜுன் தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ்
47, ராஜாஜி ரோடு,
சேலம். 636 007
செல் : 94422-12345

12 comments:

omvijay said...

மிக உபயோகமான பதிவு


விஜய்

வின்சென்ட். said...

திரு. ஓம்விஜய்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

Hi,
I came across your blog(s) on farming. Really a great source for modern farmers.
Thanks for your great contribution.

I have some humble requests for you:
1) Is it possible to provide information about all agriculture subsidiaries that are provided by TN Govt with requirements and contact address.
2) More information about Agriculture machines (i think we cannot depend anymore on human work nowadays), and details about how and for which crops they could be used.

If you could write something about these in your blogs, I think lot of modern farmers could be benefited from it.

Once again Thanks for your interest in sharing knowledge in Internet.

Have a nice day.


Greetz
Prem

வின்சென்ட். said...

Dear Mr.Prem

Thank you very much for visiting my Blog and your encouraging comments. I will try my level best to fulfill your wish.

Anonymous said...

ungal madukinnam,magavum sirrapaga ullathu,pushparaj.tamil lemuriya
lemuriyapublicatons,vversarvakarbuliding,maharahtra-400006.anbudan.pushparaj-9943695581.

வின்சென்ட். said...

திரு.புஷ்பராஜ்

உங்கள் வருகைக்கு நன்றி. "மதுகிண்ணம்" திரு. மதுராமகிருஷ்ணன் அவர்களுடையது. விவசாயத்திலுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூ.சிறந்த அனுபவத்தின் அடிப்படையில் பதிவுகள் இருப்பது அதன் சிறப்பு.

sayee said...

GOOD AND SIMPLE.

SAINATHAN
KELUNGALKELUNGAL.NET

வின்சென்ட். said...

திரு. சாயிநாதன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

Dear Mr Vincent

Your blog is very useful for tamil farmers as well as people who wish to learn agriculture.

I have one doubt regarding this earth warm: why there is a hole collect the earth warm bath water(I didn't know english word, if mistake sorry)What is use of that water. Please explain
Thanks and regards
Renga
genictecATyahooDOTcomDOTsg

வின்சென்ட். said...

Dear Mr.Renga

Thank you very much for visiting my Blog."Vermiwash" is the word. you have to moist the vermi bed with water to decompose the waste so that the worms will eat quickly. if you pour more water it will be harmful to worms. So we have to drain it. Vermiwash is a very good plant tonic which can be used for foliar spray.

saravanan said...

its so intresting and informative....... im a graduate in agriculture. in our college there should be proper bed for vermicomposting . but here its sso simple. thank u sir

வின்சென்ட். said...

திரு. சரவணன்

உங்கள் வருகைக்கு நன்றி. உங்களைப் போன்ற விவசாயம் படித்தவர்கள் இதுபோன்ற எளிய நுட்பங்களை அறிமுகப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சியடைவேன். செய்வீர்கள் என நம்புகிறேன்