Thursday, March 26, 2009

கிருஷியும் (விவசாயமும்) கிரிக்கெட்டும்.

லோஇஸ் (Loess plateau) பீடபூமி சுமார் 640,000 சதுர கீமீ (தமிழ் நாடு 130058 சதுர கீமீ) பரப்பளவில் சீன நாட்டில் அமைந்துள்ளது. அதிக உபயோகத்தாலும், அதிக மேய்ச்சலினாலும் தன் தாவர செல்வத்தை இழந்தது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு நிலம் பாழ்பட்டு மக்களின் வாழ்கை தரம் குறைந்தது. மண் அரிப்பின் அளவு வருடத்திற்கு சுமார் 1.6 பில்லியன் டன்கள். 50 மில்லியன் மக்கள் வசிக்கும் இப்பகுதியை உலக வங்கி உதவியுடன் இயற்கை வளத்தை புதிப்பிக்க முதல் திட்டத்தை 1993 ஆண்டு துவக்கி 2001 வரை செய்தனர். 1993 இல் 59% வறுமை கோட்டிற்கு கீழிலிருந்த மக்கள் தொகை 2001 இல் 27% மாக குறைந்தது. எல்லாவற்றிற்கும் சீனாவை குறிப்பிடும் நாம் இதனை மட்டும் குறிப்பிடுவதில்லை. நம் நாட்டில் இந்த அளவிற்கு மோசமான இடங்கள் இல்லை. நாம் நினைத்தால் இன்னும் சிறப்பாக நமது இயற்கை செல்வங்களை புதுப்பிக்க முடியும்.
விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறிக்கொண்டு தொழில் அதிபர்களும், கலைத்துறையினரும், அரசியல்துறையினரும் சேர்ந்து இந்த பொருளாதார நெருக்கடி நேரத்தில் கிருஷியை (விவசாயம்) பற்றி பேசாமல் (தேர்தல் நேரத்தில் கூட) கிரிக்கெட்டை பற்றி திட்டமிடுவதும் விவாதமிடுவதும் நாட்டிற்கு நல்லதன்று. மக்களாகிய நாம்தான் உணர்ந்து செயல்படவேண்டும். நமது இயற்கை செல்வங்களை புதுப்பிப்போம். வளமான இந்தியாவை காண்போம்.

உலக வங்கியின் படதொகுப்பைக் காண:
http://digitalmedia.worldbank.org/slideshows/china1005/
படங்கள் உதவி: வலைதளம்

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரே இடத்தின் முன்னேற்றமா இது ?

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் வருகைக்கு நன்றி.லோஇஸ் பீடபூமியின் ஒரு பகுதியில் சுமார் 3000 ச.கீமீ அளவிற்கு புதுபித்திருக்கிறார்கள். உலகில் வாழ்கை தரத்தை உயர்த்திய உலக வங்கி திட்டங்களில் இதுவும் ஓன்று.