வருங்காலம் தண்ணீருக்காக மனித இனம் போராட போகும் காலம். போராட்டத்தின் சிறு பகுதியை கொஞ்ச காலமாகவே தமிழகம் காவிரி மற்றும் முல்லைப்பெரியார் பங்கீட்டில் அனுபவித்து வருகிறது. எவ்வளவு பொருள், உயிர் இழப்பு, பரஸ்பரம் வெறுப்பு, வேலை நிறுத்தம், நீதிமன்றம், சட்டம் என மனித உழைப்பு வீணாவது என்று கணக்கிட்டால் ரூபாய் மதிப்பில் பல கோடிகளைத் தாண்டும்.
வாழ்கையின் அடிப்படை ஆதாரம் தண்ணீர். இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக பல்வேறு தலைப்புக்களில் முக்கியத்துவம் தந்து கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் (2009) “தண்ணீரை பங்கிடுவது - வாய்ப்பை பங்கிடுவது” (Shared water- shared opportunities) என்று பலவேறு நாடுகளின் எல்லைப்பகுதி தண்ணீரை எவ்வாறு பயனுள்ளதாக பங்கிட்டு சிறப்பாக உபயோகப்படுத்துவது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டாட உள்ளனர். மேலும் தகவலுக்கு UN/WATER ‘கிளிக்’ செய்யவும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உங்கள் பதிவு அருமை!!!
யூத்ஃபுல் விகடனில் உங்கள் பதிவை சேர்த்து உள்ளார்கள்!!!!
http://youthful.vikatan.com/youth/index.asp
உங்கள் பதிவு
நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்!!!
தேவா...
திரு.தேவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. யூத்ஃபுல் விகடனில் பதிவை சேர்த்தது குறித்து தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment