Wednesday, March 11, 2009

செயல் ஓன்று பாதிப்பு இரண்டு.

பொதுவாக நகரத்து வீதிகளில் இருக்கும் மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்க்க ஆரம்பித்தவுடன்அது வேண்டாத குப்பையென எண்ணி மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். அது ஒரு மிக சிறந்த இயற்கை உரம் என்பதை அவர்கள் அறியாமலே தீ வைப்பதால் புகை உண்டாகி வளிமண்டலமும் மாசுபடுகிறது. அதனை ஓரிடத்தில் சேர்த்து வைத்து மண்புழுக்களை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கலாம் அல்லது ஓரிடத்தில் சேர்த்து வைத்தாலே அது சிதைந்து உரமாக மாறிவிடும் இது வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை தரும். தீயே வைக்காமலிருப்பதால் புகை வளி மண்டலத்தில் சேர வாய்பில்லை இது அந்த நகரத்திற்கும், உலகத்திற்கும் நன்மை தரும். ஆனால் இருநாட்களுக்கு முன் ஒரு கிராம பகுதியில் பார்த்த காட்சி என்னை மேலும் கவலை கொள்ள வைத்தது. மரங்களுக்கு அருகிலேயே தீயிட்டு அந்த மரத்திற்கும் பாதிப்பை உண்டாக்கியிருந்தனர். யாரோ ஒரு மகான் இவ்வாறு வரிசையாக ஆலமரத்தை தனது நேரத்தையும் பொருளையும் செலவு செய்து நமக்கு நன்மையுண்டாகும்படி செய்திருக்கிறார். ஆனால் நாம் அவற்றை உண்டாக்கக்கூட வேண்டாம் பாதுகாத்தால் கூட போதும் அடுத்த தலைமுறை பயன்பெறும்.

3 comments:

Unknown said...

Tharppodhaya nilayil adhigaamaaga sindhikka vendiya thagaval... Thoguththu vazhangiya R. Venkatraman avargalukku mikka Nandri... Innum parpala sindhanaigalayum karuthukkalayum aavaludan edhir nokki kaathirukkirom.....

Unknown said...

Thoguththu vazhangiya R. Venkatraman avargatkku Mikka nanri.... Tharppodhulla thatppa vetppa maarudhal nilaigalukku namadhu ariyaamayum miga periya pangalikkiradhu.... Idhai pondra sindhanaigalai thoondum thoguppugalai aavaludan edhirnokkugirom....

வின்சென்ட். said...

திரு.முத்தழகு

உங்கள் வருகைக்கும்ம் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. தொகுத்து வழங்கிய திரு.வழங்கிய திரு.R. வெங்கட்ராமன் அவர்களுக்கும் நன்றி.