இந்த வருட உலக வன நாளில் உண்மையிலயே வனத்தை உண்டாக்க தன் படிப்பு, வெளிநாட்டு வேலை இவைகளை உதறிவிட்டு கற்கள், பாறைகள் நிறைந்த ஒரு பொட்டல் நிலத்தை வாங்கி அதில் வனம் உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிற்கும் திரு. தி. ராமகிருஷ்ணன் அவர்களை பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அண்மையில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருகிலுள்ள விவசாய அன்பர்கள் தங்கள் நிலத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி தென்னை மற்றும் அதிக நீர் தேவைமிக்க பயிர்களை செய்யும் போது மிக குறைந்த நீரில் வனத்தை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இவரின் அயராத உழைப்பு, எளிமை, ஈடுபாடு என்னை பிரமிப்பு அடைய வைத்தது உண்மை. நம் மனதிலிருக்கும் சில வரைபடங்களை ஒருவர் மிக நேர்த்தியாக செய்திருப்பதை பார்க்கும் போது மனதில்தான் எத்தனை மகிழ்ச்சி. பணம் மட்டுமே அளவுகோல் என்ற இன்றைய உலகமயத்தில் தவசிந்தையுடன் நிறைய மரவகைகளை குறைந்த நீரில் வளர்த்து வனம் ஒன்றே குறிகோள் என்று இருக்கும் திரு. தி. ராமகிருஷ்ணன் போன்றவர்களால் மட்டுமே உலக சுற்றுசுழலை காப்பாற்ற முடியும். இவரை போன்றவர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் கூட போதும் தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை காணும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கும் அவரது குடும்பத்தாரக்கும் எல்லா ஆசிகளையும், நன்மைகளையும் தந்து மேலும் பல செயற்கரிய செயல்களை செய்ய இவ்வலைப்பூ வாழ்த்துகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் அய்யாவிற்கு!
இது போன்ற செய்திகளை பகிர்ந்துக்கொண்டமைக்கும் நன்றிகள் :)
பெரும்பாலான வெளிநாடு வாழ் மக்களின் மனங்களில் இது போன்ற ஆசைகள் துளிர் விட்டு வளர்ந்து வருவதையும் தற்போது பார்க்க இயலுகிறது!
இனி வரும் காலங்களில் இது போன்ற வனப்பணிகள் பெருககூடும் என்ற நம்பிக்கையும் எழுகிறது!
வணக்கம்
சரி திரு. தி. ராமகிருஷ்ணன் அவர்கள் எங்கிருக்கின்றார் எனும் தகவல்களையும் தந்திருந்தால் என்னைப்போன்றவர்களுக்கும் உதவியாய் இருக்கும்
நன்றி
இராஜராஜன்
திரு.ஆயில்யன்
உங்கள் வருகைக்கு நன்றி.
"பெரும்பாலான வெளிநாடு வாழ் மக்களின் மனங்களில் இது போன்ற ஆசைகள் துளிர் விட்டு வளர்ந்து வருவதையும் தற்போது பார்க்க இயலுகிறது!"
வருடம் முழுவதும் சூரிய ஒளி,பனி பொழிவு இல்லாமை,இரண்டு பருவ மழை, பிறந்த மண்- ஆசைகள் துளிர் விட்டுத்தானே ஆகவேண்டும்.
"இனி வரும் காலங்களில் இது போன்ற வனப்பணிகள் பெருககூடும் என்ற நம்பிக்கையும் எழுகிறது"
நம்பிக்கை என்பதைவிட இது காலத்தின் கட்டாயம.
திரு.இராஜராஜன்
உங்கள் வருகைக்கு நன்றி.திரு.தி.ராமகிருஷ்ணன் அவர்கள் சத்தியமங்கலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் பாசகுட்டைபுதூர் என்ற இடத்தில் இருக்கிறார்.தொடர்பு எண்: 94425-60429
வணக்கம் திரு வின்சண்ட் அவர்களை. திரு ராதகிருஷணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சத்தி - அத்தாணி ரோட்டில் சந்தை அருகே இடது பரம் ரோட்டில் சென்றால் மலையடிவாரத்திற்கு முன்னால் 10 ஏக்கரில் மரங்கள் 117 வகைகள் வைத்துள்ளாஆராம் சந்தணமரம்ஒன்றுதான் வைத்துள்ளார். மூங்கில் 10 வகை வைத்துள்ளாராம். போர் தண்ணீரில்சொட்டு நீர் மூலம் வளர்கின்றன. நல்ல முயற்சி. நன்றி.
தங்களின் வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி. நாம் பார்க்க வேண்டிய இடம். நீங்கள் தொடர்பு கொண்டு பேசியது மகிழ்ச்சியை தருகிறது.
Post a Comment