Monday, March 2, 2009

உலக தண்ணீர் தினத்திற்கு நாம் செய்ய வேண்டியது.


உலக தண்ணீர் தினத்தை வலைப் பதிவர்களாகிய நாம் நம் மக்களிடையே பிரபலபடுத்தவேண்டும். என் மனதிற்கு பட்டவற்றை பட்டியலிடுகிறேன். முடிந்தால் நீங்களும் கண்டிப்பாக செய்யுங்கள் அல்லது நீங்கள் சொல்லுங்கள் நாம் அனைவரும் செய்வோம். இது நமது வளமான வருங்கால வாழ்கைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.

1. உலக தண்ணீர் தினத்தின் 2009 அதிகாரபூர்வமான வலைதளமான http://www.unwater.org/worldwaterday/flashindex.html
தொடுப்பு தருவது.
2. அவர்கள் தந்துள்ள widget ஐ நமது வலைப் பூக்களில் போட்டு பிரபலபடுத்துவது.
3. தண்ணீர் சம்பந்தபட்ட புகைபடங்களை வலைப் பூக்களில் போடுவது. UN WATER வலைதளத்திற்கும் அனுப்பிவைப்பது.
4. அந்தந்த பகுதிகளின் தண்ணீர் தேவைக்காக சிலர் பாடுபட்டு வெற்றியடைந்திருப்பார்கள் அவர்களைப் பற்றி பதிவிடுவது.
5.நம் வாழ்கையிலேயே தண்ணீரினால் மகிழ்ச்சி, வருத்தம், இழப்பு, லாபம், கஷ்டம் என ஏதோ ஒரு நிகழ்ச்சி நடந்நிருக்கும் அதனை பகிர்ந்து கொள்ளலாம்.
6.நீங்கள் எப்படி சிக்கனமாக நீரை பயன்படுத்துகிறீர்கள் என பதிவிடுங்கள்.
7.புதிதாக ஏதேனும் கண்டுபிடிப்புக்கள் இருந்தால் அதனைப் பற்றி கூறுங்கள்.
8. நதி நீர் இணைப்பு பற்றி எழுதுங்கள்.
9. அணைகள் நல்லதா? அல்லது பண்ணைக் குட்டைகள் நல்லதா? பதிவிடுங்கள்.
10. தண்ணீரை தனியாருக்கு தாரை வார்ப்பது எந்த அளவிற்கு பொதுமக்களை பாதிக்கும் ?
11. கடல் நீரை நன்னீராக்குவது எளிதா?
12. வெர்சுவல் வாட்டர் (Virtual water) என்ற கணக்கீட்டில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளதா?

மேற்கண்ட சில தலைப்புகளில் உங்கள் கருத்துக்களை பதிவிட்டால் தண்ணீரைப் பற்றி நம் மக்களுக்கு தெளிவுபடுத்தலாம். வருகின்ற மார்ச் மாதம் 22 வரை இதனை முழுமூச்சுடன் செய்வோம்.

2 comments:

மாதேவி said...

உலக தண்ணீர் தினம் பற்றி நல்லதொரு பதிவைத் தந்திருக்கிறீர்கள்.
"நம் வாழ்கையிலேயே தண்ணீரினால் மகிழ்ச்சி, வருத்தம், இழப்பு, லாபம், கஷ்டம் என ஏதோ ஒரு நிகழ்ச்சி நடந்நிருக்கும் அதனை பகிர்ந்து கொள்ளலாம்." என வேண்டியிருந்தீர்கள். எனது இப்பதிவும் பொருத்தமாயிருக்கும் என நம்புகிறேன்.
தொடுப்பு:-
http://ramyeam.blogspot.com/2009/01/blog-post.html

வின்சென்ட். said...

திருமதி.மாதேவி

உங்கள் வருகைக்கும் உங்கள் பதிவினை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி. மிக யதார்த்தமாக இன்றைய மக்களின் மன நிலையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். உங்கள் அடுத்த பதிவும் நிலைமையை துல்லியமாக காட்டுகின்றது.இது போன்று நிறைய பதிவுகளை போடுங்கள்.