
இரு வாரங்களுக்கு முன் சத்தியமங்கலம் - கோபி சாலையிலிருந்து சுமார் 2 கீ.மீ தூரத்தில் பசுமை நிறைந்த இப்பகுதியில் இரு மரங்களில் இயற்கையாக கட்டிய சுமார் 40 மலைந்தேனீக்களின் கூடுகளைப் பார்த்து அதிசயப்பட்டேன். மரங்களின் உரிமையாளர் திரு. மகாலிங்கம் சுற்றுவட்டாரத்தில் இது போன்ற தேன் கூடுகள் இல்லையென்றும் ,அவர்கள் தோட்டத்திலேயே இதே போன்ற மரம் இருந்தும் கூடுகள் இல்லாததை காண்பித்தார்.

காய்கறி பயிர்களில் நல்ல மகசூல் கிடைப்பதாக கூறிய அவர் டிராக்டர் கொண்டு நிலத்தை உழ முடிவதில்லை காரணம் புகை வாசம் வந்தாலே மனிதர்களை தேனீக்கள் தாக்க ஆரம்பித்துவிடுவதும் அது மாத்திரமன்று புகைபிடிப்பவர்களுக்கும் இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்றார். கூடுகள் 3 அடி வரை இருக்கும் போல் தோன்றுகிறது. பளு தாங்காமல் விழுந்து கிடந்த தேன் அடைகளைப் பார்த்தாலே பிரமிப்பாக இருந்தது.

கீழே விழுந்த தேன் அடையுடன் திரு. மகாலிங்கம் தம்பதியினர்.
2 comments:
மூணாறு போயிருந்த போது அங்கே இப்படி தேனடைகளை காட்டுவதுவும் பயணத்திட்டத்தில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள் கைட் கள்.. :)
திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
உங்கள் வருகைக்கு நன்றி.ஒரு வேறுபாடு அது மலைப்பாங்கான பகுதி இது விவசாயம் செய்யும் பகுதி. எனது டீன் பருவத்தில் மூணாறு KDH CLUB க்கு எதிராக விளையாட என்னை அழைத்து செல்வார்கள் சில சமயம் எனது தந்தையும் விளையாட வருவார். பசுமையான அந்த நாட்கள் மிக மிக இனிமையானது.இந்த அவசர வாழ்கையில் மூணாறை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
Post a Comment