Wednesday, December 24, 2008

இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு - பயிலரங்கம்.

இன்றைய விவசாயம் என்பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது பூச்சிகளின் மேலாண்மை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் இரசாயான பூச்சிகொல்லிகளால் சுற்றுசுழலும் கெட்டு முடிவில் விவசாயிகளின் தற்கொலைகளில் முடிவடைகிறதை நாம் தினசரிகளில் படிக்கிறோம். நம் முன்னோர்கள் எப்படி மேலாண்மை செய்தார்கள்? இயற்கை முறையில் பூச்சிகளின் மேலாண்மை சாத்தியமா? ஏன் தேனீக்கள் வேண்டும்? இந்த கேள்விகளுக்கு இப்பயிலரங்கம் தெளிவான விளக்கம் தரும். இது பற்றிய நூல்களும் அங்கு விலைக்கு கிடைக்கும்.

கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போம் சங்கம். பதிவு எண்:110/2006,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்துடன் இணைந்து நடத்தும் ஒரு நாள் பயிலரங்கம்.

நாள் : 09-01-2009 (வெள்ளிகிழமை)

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

தலைப்பு : இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு

இடம் : வேளாண் பூச்சியியல் துறையின் கருத்தரங்கு அறை.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை -3

கட்டணம் : ரூ.180/= ஒருநபருக்கு. (பயிற்சி கையேடு,தேநீர்,மதிய உணவு உட்பட)முதலில் பதிவு செய்யும் 75 நபருக்கு மட்டும் அனுமதி.

பதிவிற்கு : தேவராஜன்..............93691 16018
.............. நாராயணசுவாமி......94433 84746.
=========================================================

2 comments:

கபீஷ் said...

Good one ! Useful!!

வின்சென்ட். said...

திரு.கபீஷ்

உங்கள் வருகைக்கு நன்றி.