http://maravalam.blogspot.com/2008/03/blog-post_07.html
பதிவில் எழுதியிருந்தேன். அதன் குஞ்சுகள் சற்று பெரியவைகளாகிவிட்டன. உடல் ரீதியாக அதற்குள்ள நிறத்தையும், அழகையும்,தோகையையும் பெறவில்லை ஆனால் இவைகள் சாலைகளில் எந்தவித பரபரப்புமின்றி ஒய்யாரமாக நடந்து அதன் உணவைத் தேடுவதுதான் அழகு, நம்மை கண்டு அஞ்சுவதில்லை. சென்ற ஞாயிறு காலை சுமார் 7 மணியளவில் அதன் நடைபயிற்சியை காண நேர்ந்தது. அதனை புகைபடமாய் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

6 comments:
தயவு செய்து அனுசரித்து வாழப் பழகவும். தொல்லை அதிகமானால்; பயிர் பச்சைக்கு சேதம் அதிகமானால்; வனவிலங்கு பாதுகாப்போர் மூலம் இவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்து; சற்று அடர்ந்த
காட்டுப்பகுதியில் விட ஆவன செய்யவும்.
மயில் அகவுவது கேட்க மகிழ்வாக இருக்குமே! அவை ஆடும் அழகே அழகு!!!
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் படம் பிடித்து வைக்கவும்.
எங்கள் வீட்டுக்கருகிலும் மயில்கள் உண்டு.. :) தினம் காலையில் அவைகள் புறாவுக்கு வைக்கும் உணவுகளை சாப்பிடவரும் .. மகன் அதுபோலவே கழுத்தை ஆட்டி ஆட்டி நடப்பான்..
தென்மாவட்டங்களில் மயில்கள் விவாசயத்துக்கு அதிக தொந்திரவு என்று விசம் வைத்து கொல்வார்கள் என்று கேள்விப்பட்டேன்..
யோகன் பாரிஸ்(Johan-Paris)
வின்சன்ட்!நீங்கள் கொடுத்துவைத்தவர்; மயிலுடன் வாழக் கிடைத்துள்ளது. தயவு செய்து அவற்றைத் தொந்தரவு செய்யாது ஓரளவுக்கு அனுசரித்து வாழவும்; இவை பாம்பு,பூச்சி,பூரானில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.
மேலும் இங்குள்ள பல வாசனைத் திரவியத்தில் வெட்டிவேர் தைலம் கலந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனக்கு வெட்டிவேர் என்பது தாவரமா? புல்லா? என்றே தெரியவில்லை.
தயவு செய்து இவற்றின் படங்களைப் பதிவாகப் போட முடியுமா??
இங்கொரு பின்னூட்டத்தில் இது பற்றிக் குறிப்பிட்டதால் கேட்கிறேன்.
===============================================
திரு.யோகன் பாரிஸ்
உங்கள் வருகைக்கு நன்றி. எனது Labels இல் கடைசியாக வெட்டிவேர் பற்றி இதுவரை 14 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.அதன் 20 பயன்களை படித்துப் பாருங்கள்.
திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
உங்கள் வருகைக்கு நன்றி. பொதுவாக வன உயிர்களை கொல்வது சட்டப்படி குற்றம். அதிலும் தேசீயப் பறவையான மயில்களை கொல்வது மாபெரும் குற்றம். அதனால் தான் தீர்வு என்று கேள்விக்குறி இட்டேன். தீர்வு காண வேண்டிய ஒரு விவசாய பிரச்சனை.
நானும் அந்த விசயம் கேள்விப்பட்டு வருத்தம் தான் அடைந்தேன்.. தீர்வாக அது அமையாது.. வேறு வழி என்றால்..குரங்குளை பிடிக்க ஆட்களை தில்லியில் போட்டது போல. ஆட்களைபோட்டு மயில்களை பிடித்து வேறு காட்டுக்குள் விடலாம்..
திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
நான் ஏற்கனவே கூறியது போல் தேசீயப் பறவை. இருப்பினும் குறைதீர்க்கும் நாளில் மக்கள் பிரச்சனையை முன் வைக்கின்றனர் ஆனால் தீர்வு ??? தான்
Post a Comment