முடியும் என்று சொல்பவர் இந்தியாவின் மொத்த தேன் ஏற்றுமதியில் 70% செய்யும் காஷ்மீர் அபியரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். 1980 களில் ரூ.1000/= துவக்க முதலீடு செய்யது இன்று 2008 இல் ரூ.136 கோடிகள் வர்த்தகம் செய்பவர் திரு. ஜக்ஜித் சிங் கபூர். இன்று பணியாற்றும் உழியர்கள் சுமார் 1500 பேர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேனைக் கொள்முதல் செய்கிறது காஷ்மீர் அபியரீஸ். 4 வணிகப் பெயர்களில் 42 நாடுகளில் இவர்களது தேன் விற்பனையாகின்றது. தேனீக்கள் வளர்த்தல் ஏதோ ஒரு விவசாய சிறு உபதொழில் என்று நினைக்கும் நாம் அதில் கூட சாதனைகள் செய்திருக்கும் திரு. ஜக்ஜித் சிங் கபூரை பார்க்கும் போது பிரமிப்பு அடைகிறோம்.. சாதனையாளர் திரு. ஜக்ஜித் சிங் கபூர் அவர்களின் இலக்கான 100 நாடுகள் ரூ.400 கோடிகள் மிக விரைவில் அடைய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.Source : India Today 10-12-2008
7 comments:
தகவலுக்கு நன்றி!
:)
திரு.கபீஷ்,
திரு.ஆனந்தன்,
உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.
Came through velaanmai.com and a lot of interesting infos. keep it up.
Ramesh R
Al Ain
திரு. ரமேஷ்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
தேனீ வளர்ப்பு பற்றி பாடம் படிக்க விரைவில் உங்களிடம் வருவோம் சார்
திரு.செந்தழல் ரவி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.கண்டிப்பாக வாருங்கள். விவசாயம் மிகப் பெரிய கடல், கூட்டு முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும்.எனவே விரைவில் வாருங்கள்.
Post a Comment