Sunday, February 27, 2011

காய், கனிகளுக்கு மதிப்புக் கூட்டுதல்- ஒருநாள் பயிற்சி.


வேளாண்மை பொருட்கள் குறிப்பாக காய்கள், கனிகள் மிக விரைவாக கெட்டுவிடும். ஆனால் அதனை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனை செய்யும் போது நல்ல விலை கிடைப்பதுடன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அதிக நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் காய், கனிகளை ஜீஸ், ஜமாம், ஜெல்லி, சாஸ், கெட்சப் மற்றும் ஊறுகாய் என மதிப்பைக் கூட்டி வீட்டு உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டு எஞ்சியதை விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றது.  இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். 
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

2 comments:

Pandian R said...

பலனுள்ள பல பட்டறைகள் நடக்கின்றன. பணி நாட்களில் நடப்பதால் கலந்து கொள்ள இயலாத சூழல். நேரம் கிடைப்பவர்கள், ஆர்வமுற்றோர், இல்லத்தரசிகள் கலந்து கொள்ளலாம்.

வின்சென்ட். said...

Mr.Fundoo

Thank you very much visiting the Blog.