ஊட்டச் சத்துமிக்க தானியங்களாக நிரூபிக்கப்பட்டாலும், குறைந்த நீரில் எளிய வளர்ப்பு முறைகள் இருந்தாலும் இந்த தானியங்களை (சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு ) சிறுதானியங்கள் என்று அழைத்து அதன் முக்கியத்துவத்தை பசுமை புரட்சிக்குப் பின் மக்கள் மனத்திலிருந்து அகற்றி விட்டோம். இந்தத் தலைமுறை குழந்தைகளிடம் தானியங்கள் பற்றிக் கேட்டால் அரிசி மற்றும் கோதுமை தவிர மற்ற தானியங்களைப் பற்றி தெரிவதில்லை என்பதைவிட நாம் அவற்றை அவர்களுக்கு காண்பிக்கவில்லை என்பதே உண்மை. மேலும் நாகரீகத்தின் சின்னமாக அவை அடையாளப்படுத்தப்படுவதில்லை. மாறாக அவற்றை உபயோகிப்பவர்களை தாழ்வாக எண்ணக்கூடிய மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். விளைவு பல்வேறு நோய்களில் சிக்கி மருத்துவதிற்கும், உடலை வளமையாக்குவதற்கும் நிறைய செலவு செய்கிறோம்.
ராகி, குதிரைவாலி, கடுகு பயிர்களுக்கிடையே பாரம்பரிய விதைகளைக் காக்கும் விவசாயி திரு. வெள்ளிக்குட்டி. |
இன்றைய விவசாய தற்கொலைகளுக்கு அடிப்படை சுயசார்பு உணவு (சிறுதானியங்கள்) உற்பத்தியை தவிர்த்து வணிகப் பயிர்களுக்கு மாறி சந்தைப்படுத்துவதில் சிக்கல், அதிக நீர்த்தேவை, விலைமிக்க இரசாயன ஈடுபொருட்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் போன்றவைகளுக்கு செலவு செய்யமுடியாமல் போனதுதான் காரணம் என்றால் அது மிகையில்லை.
சிறுதானியங்களின் சிறப்பு அம்சங்கள்.
சத்துமிக்க தானியங்கள்.
மிக குறைந்த நீர்தேவை. மழைநீர் போதும்.
நீர் பாசனம் தேவையில்லை
வளமிக்க மண் தேவையில்லை.
இரசாயன உரம் உபயோக்கிக்க தேவையில்லை
பூச்சி தாக்குதல் குறைவு.
பல தானிய விதைப்பால் சுற்றுச் சுழல் வளமையாக்கப்படுகிறது.
பல்வேறு உபயோகம்.
9 comments:
பயனுள்ள பதிவு நன்று
திரு வெள்ளிக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.
திருமதி.தமிழ்மலர்
திருமதி.முத்துலெட்சுமி
உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
வீட்டுத்தோட்டம் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்..
திருமதி. விஜி
உங்கள் வருகைக்கு நன்றி. நிச்சயம் வரும் பதிவுகள் வீட்டுத்தோட்டம் பற்றி இருக்கும்.
திரு வெள்ளிக்குட்டிக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி :)
திரு. கபீஷ்
உங்கள் வருகைக்கு நன்றி.
please provide address of the farmer- Vellikutti
Sir
He is living opp to My farm. He can't read and write.So if you want to meet him kindly inform me.
Post a Comment