Tuesday, February 15, 2011

நீர் சிக்கனம் - காய்ச்சலும் பாய்ச்சலும்.

நகரங்களில் உபயோகத்திற்கே நீர் பற்றாகுறையில் இருக்கும் போது கோடைகாலத்தில் செடிகளுக்கு நீரை காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் தந்தால் நீர் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதோடு நமக்கு பயன் தரும் செடிகளும் ஆரோக்கியமாக இருக்கும். பயன் தரும் செடிகளோடு அதிகமாக நீரை விரும்பும் மென்மையான தண்டுகளுடைய செடிகளையும் சேர்த்தே வளர்ப்பது.
ஈரத் தன்மை குறையும் போது இலைகள் 
தளர்ந்து வளைந்து கீழே தொங்க ஆரம்பிக்கும்.

நீர் ஊற்றிய பின் இலைகள் நன்கு பெரிதாகிறது
சற்று நேரத்தில் செடி நிமிர்ந்து பழைய நிலைக்கு வந்துவிடுகிறது.

ஈரப்பதம் தொட்டியில்  அல்லது மண்ணில் முற்றிலும் காய ஆரம்பிக்கும் முன் இந்த செடிகளின் இலைகள் தளர்ந்து வளைந்து கீழே தொங்க ஆரம்பிக்கும் போது நீர் விட்டால் சற்று நேரத்தில் பழைய நிலைமையை அடைந்துவிடும். நீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பால்சம், கோலிஸ்,சாமந்தி வகை செடிகள் இதற்கு ஏற்றவை. இதே முறையை நாம் விளைநிலங்களிலும் நடைமுறைப்படுத்த இயலும்.

7 comments:

Pandian R said...

thanks for explaining a good concept with simple explanation. thanks for taking time for documenting all your attempts.

pandian
pudukkottai

வின்சென்ட். said...

திரு. பாண்டியன்

உங்கள் வருகைக்கு நன்றி.இந்த முறையில் சிறப்பாக நீர் சிக்கனத்தை கடைபிடிக்கிறேன்.

கோமதி அரசு said...

அருமையான யோசனை.

நீர் சிக்கனம் மிக மிக தேவை.

நன்றி.

வின்சென்ட். said...

திருமதி.கோமதி அரசு

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

விஜி said...

நல்ல பதிவுகள்..

தெருவில வளர்க்க சீக்கிரமும், பரவலாகவும், அழகாகவும்,வேர்கள் சுவரை கெடுக்காதவாறும் உள்ள மரங்களை சொல்ல முடியுமா? மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்? (கோவையில்)

வின்சென்ட். said...
This comment has been removed by the author.
வின்சென்ட். said...

திரு.விஜி

உங்கள் வருகைக்கு நன்றி.
மரங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில்
Kachnar species
Gulmohar
Amaltas
Mandara
Jacranda
Karanja (Pongamia glabra)
Chameli (Pulmeria alba)
Tulip Tree (Spathodea campanulata)