 |
புகையாகும் இலைசருகுகள். |
பனிகாலங்களில் வேம்பு, புங்கன், தூங்குவாகை போன்ற மரங்கள் அதிகமாக இலைகளை உதிர்க்கும். நகரங்களில் பொதுவாக இவற்றை குவித்து தீயிட்டு கொளுத்துவோம். சிறந்த உரமான இதனை தொட்டிசெடிகளுக்கு மூட்டாக்கு இடுவதால் குறைந்த அளவு நீர் ஊற்றினால் போதும் ஈரம் காக்கப்படுவதோடு சிறந்த உரமாகவும் மாறிவிடும். குறிப்பாக வேனிற்காலத்தில் இந்த மூட்டாக்கு சிறப்பாக பயன்தரும்.
 |
மூடாக்கு இட்டு செழிப்பாக வளரும் செடி அவரை |
தொட்டிகளும் அதிகப் பளு இல்லாமல் இருப்பதால் எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றலாம். தனியாக உரம் இடவேண்டிய அவசியம் இல்லை. பூக்களும், காய்கறிகளும் பெரிதாக நல்ல வனப்புடன் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை நமக்கு தரும் பொக்கிஷம் இந்த காய்ந்த இலைகள், அவற்றை புகையாக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம். இந்த குப்பையை உரமாக்கி நகரவிசாயம் செய்வதால் கரிமம் நிலைபடுவதோடு சத்தான இயற்கை காய்,கனிகளும் நமக்கு கிடைக்கிறது. வீட்டின் முன்பு கிடைக்கும் இலைகளை கொண்டு மாடியில் செடிஅவரை, செடிபீன்ஸ், முருங்கை, கறிவேப்பிலை, கீரைகள் போன்ற உபயோகமான செடிகளை நாம் வளர்க்கலாம்.
 |
பெரிய பூக்களுடன் கூடிய யூபோர்பிய மிலி. |
15 comments:
குடத்திலிட்ட விளக்காய், அதிக பரபரப்பின்றி அருமையான இடுகைகளை எழுதி வருகிறீர்கள். நன்றி.
திரு.சேட்டைக்காரன்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
எல்லா செடிகளும் வெகு ஆரோக்கியமாக மிக வனப்புடன் உள்ளது. அனைவருக்கும் உபயோகமான தகவல். நன்றி வின்சென்ட் சார்.
திரு. குமார்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
அன்பு மிகு திரு வின்சென்ட் ஐயா அவர்களுக்கு ,
அற்புதமான பதிவு இது.நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்க இது போன்ற பல விடயங்களை நாம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.பல அசுத்தங்களைப் பெருக்கி வருகிறோம்(பிளாஸ்டிக்,பாலீதீன்).விளைவு நினக்கவே அச்சமாக இருக்கிறது.இது போன்ற விழிப்புணர்வுக் கட்டுரைகள் இப்போது அவசியம் தேவை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
திரு.சாமீ அழகப்பன் ஐயா அவர்களுக்கு
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
"பல அசுத்தங்களைப் பெருக்கி வருகிறோம் (பிளாஸ்டிக், பாலீதீன்).விளைவு நினக்கவே அச்சமாக இருக்கிறது".
நீங்கள் கூறுவது உண்மை ஆனால் இன்றைய தலைமுறை கேட்பதற்கு தயாராக இல்லை என்று தோன்றுகிறது. இருப்பினும் நாம் தரவேண்டிய விழிப்புணர்வுகளை தந்து விடுவோம்.
தங்களுடைய பதிவுகள் எல்லாம் மிகவும் பயனுள்ளது. நான் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். மேலும் எனக்கு தங்கள் பதிவில் உள்ள தொட்டி மண்தொட்டி அல்ல சென்னையில் எங்கு கிடைக்கும். மேலும் செடிஅவரை, செடிபீன்ஸ் இதன் விதைகள் எங்கு கியைக்கும்.என்பதை தெரியப்படுத்தவும்.
நனிறி..
சோ.ஞானசேகர்..
திரு.ஞானசேகர்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இந்த பை சேலம், கோவையில் கிடைக்கிறது. விதைகள் எல்லா உர ,மருந்து விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.
அருமையான வலைப்பதிவு. தொடர்ந்து வாசித்து வருகிறேன். நன்றிகள்
நீங்கள் வைத்திருக்கும் பச்சை பைகள் எங்கே வாங்கி உள்ளீர்கள்? மதுரையில் எங்கே கிடைக்கும்?
திரு. சிவா
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.கோவை மற்றும் சேலத்தில் கிடைக்கிறது. தேவை என்றால் தெரியப்படுத்துங்கள்.
மூட்டாக்கு enraal enna eppadi iduvathu pls tell me
காய்ந்த இலை சருகுகளை செடியைச் சுற்றியிடுவது இதனால் நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு ஈரம் காக்கப்படும். சில மாதங்களில் இலை சருகுகள் உரமாக செடிகளுக்கு மாறிவிடும்.
காய்ந்த இலை சருகுகளை செடியைச் சுற்றியிடுவது இதனால் நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு ஈரம் காக்கப்படும். சில மாதங்களில் இலை சருகுகள் உரமாக செடிகளுக்கு மாறிவிடும்.
thanks for ur reply... i ll try in my home....
Once again thank you for visiting my Blog. Best wishes.
Post a Comment