ஐரோப்பிய மொழியில் இருக்கும் தாவர குடும்பங்கள் பற்றியும் தாவரவியல் பெயர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் போது ஆரம்ப காலத்தில் குழப்பமாக இருக்கும். இவை தேவைதானா? என்று கூட நினைக்கத் தோன்றும். தமிழகத்திலேயே ஓரே செடிக்கு பல வட்டாரப் பெயர்கள் உண்டு. இனி நாடு பின் உலகம் என்று எடுத்தால்.... எனவே தாவரப் பெயர்கள் அவசியம் தேவை. பழகிய பின்பு எளிதாக வேற்றுமொழி நண்பர்களுடன் உரையாடும் போது சரியான தாவரவியல் பெயரை அடையாளப்படுத்தி பேசும் போது அவர்களும் சரியான தகவல்களை தரும்போது மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக மூலிகை தாவரங்களை அடையாளப்படுத்தி பயன்படுத்தினால் மாத்திரமே நோய்க்கு மருந்து இல்லையேல்?
பேராசிரியர்.ப. மகேந்திரமணி அவர்கள்கிறிஸ்து பிறப்பதற்கு முன் தொடங்கி நிகழ்காலம் வரை எவ்வாறு வகைபடுத்தினார்கள், பெயரிட்டார்கள், அதில் ஈடுபட்ட மேதைகள் அதனால் ஏற்பட்ட நிகழ்வுகள் போன்றவற்றை எளிய தமிழ் நடையில் பேராசிரியர் திரு. மகேந்திரமணி அவர்கள் ஓய்வுக்குப் பின்
தாவர வகைப்பாட்டியல் -
ஒரு வரலாற்றுப் பார்வை என்ற இந்நூலில் மிக தெளிவாக, விளக்கியிருக்கிறார்.

தாய்மொழியில் தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு தாவர வகைப்பாடுகள், அவற்றை அடையாளம் காணும் முறை பற்றி அறிய இந்நூல் பெரிதும் உதவும். எளிய உதாரணங்களுடன் படவிளக்கங்கள், இணைய வலைதளங்கள் பற்றிய குறிப்புக்கள் இருப்பதால் அனைவருக்குமே இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.
கிடைக்குமிடம்:-பேராசிரியர்.ப. மகேந்திரமணி
7/27, 4 வீதி - பாலகுருகார்டன்
கோவை - 641 004.
அலைபேசி 99945 83478.
விலை. ரூ.60/=
No comments:
Post a Comment