Monday, July 26, 2010

பிரம்மபுத்திரா நதியில் வெட்டிவேர் கொண்டு மண் அரிப்பை தடுக்கும் சிறு முயற்சி.

இந்திய நதிகளில் பிரம்மபுத்திரா நதி மிக பிரமாண்டமானது. மழைகாலங்களில் வெள்ளம் மற்றும் மண் அரிப்பு மிக அதிகமாக இருக்கும், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலம் இதற்கு பெயர் பெற்றது.


வெள்ளப் பெருக்கு.
அதே சமயம் குளிர் காலங்களில் தண்ணீரின் மட்டம் குறைவதால் கரை உடைந்து மண் சரிவு ஏற்பட்டு சகதி ( Slough ) ஏற்படுகிறது.
குளிர் காலங்களில் நீர் மட்டம் குறைவதால் மண் சரிவு ஏற்படுகிறது.
கடந்த 50 வருடங்களாக இந்திய அறிஞர்களும் வெளிநாட்டு அறிஞர்களும் ஆய்வுகள் செய்தாலும் சரியான ஒரு தீர்வு அவர்கள் பிரம்மபுத்திரா நதி மண் அரிப்பிற்கு தரவில்லை. குளிர் காலத்தில் நீர் குறைவாக செல்வதால் கரைமட்டதிற்கும் நீர் மட்டதிற்கும் உள்ள இடைவெளி 6-7 மீட்டர் இருக்கும். மணல் கலந்து இருக்கும் மண். சரிவு சில இடங்களில் செங்குத்தாகவும் சில இடங்களில் உள்வாங்கியும் இருக்கும்.

அஸ்ஸாம் மாநில அரசு, துணை நதியான “டைசேங்” பிரம்மபுத்திரா நதியுடன் சேரும் 500 மீட்டர் பகுதியை வெட்டிவேர் கொண்டு மண் அரிப்பைத் தடுக்க திரு. சந்தானு பட்டாச்சாரியா அவர்களிடம் ஒப்படைத்தார்கள். 28-02-2010 அன்று வெட்டிவேர் நடவு ஆரம்பிக்கப்பட்டது. நதியின் போக்கிற்கு இணையாக வரிசைக்கு வரிசை 1 மீட்டர் , செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியில் நடப்பட்டன. அது போன்று 12 வரிசைகள் நடப்பட்டன. சாண எருவும், வேம் (Vam) இரண்டும் நடவில் உடயோகிக்கப்பட்டது. மார்சு மாதம் மழை பெய்ததால் நீர் பாய்ச்சல் கொடுக்கப்படவில்லை.

பின் மெதுவாக ஆரம்பித்த மழை 17-04-2010 அன்று வெட்டிவேர் நடப்பட்ட பகுதிக்கு மேல் படகுகள் செல்லும் அளவிற்கு முழுவதுமாக நீரில் முழ்கடித்தது. இதுவரை 5 முறை முழுவதுமாக முழ்கியுள்ளது. இறுதியான வெற்றியைக் காண செப்டம்பர் வரை வெள்ள அரிப்பிற்கும், மார்சு வரை நீர் மட்ட குறைவால் ஏற்படும் மண் சரிவிற்கும் காத்திருக்க வேண்டும். இந்தப் பொழுது வரை மண் அரிப்பு ஏற்படாமல் வெட்டிவேர் அந்தப் பகுதியை காப்பாற்றியுள்ளது என்பதை மேலேயுள்ள படம் விளக்கம் தரும்.

இதே போன்று தமிழக நதிகளின் அருகே மண் அரிப்பை தடுக்கமுடியும். காலம் கனிந்து வரவேண்டும்.


திரு. சந்தானு பட்டாச்சாரியா எனக்கு அனுப்பியிருந்த தகவலை சுருக்கியும் மற்றும் முக்கியமான புகைப்படங்களையும் கொண்டு மேற்கண்ட தகவலை உங்களுக்கு அளித்திருக்கிறேன்.

திரு. சந்தானு பட்டாச்சாரியா.
திரு. சந்தானு பட்டாச்சாரியா அஸ்ஸாம் மாநில பொதுபணித் துறையில் பொறியாளர். கிழக்கு இந்திய வெட்டிவேர் அமைப்பின் கௌரவ செயல் இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர். சிறந்த சுற்றுச் சுழல் ஆர்வலர். அவரும் அவர் செய்யும் அரிய பணிகளும் மேலும் சிறக்க வாழ்த்தி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் இவ்வலைப் பூ பெருமை கொள்ளுகிறது.

9 comments:

Anonymous said...

Good initiative...
Hope all success to Battacharya

Thanks for writing this type of message Mr Vincent. Keep it up...

Renga

ஆயில்யன் said...

எங்கள் பகுதியில் வெட்டிவேர் என்ற சொன்னாலே கொள்ளிடம் கழிமுகப்பகுதியில் நிறைய கிடைக்குமே என்றுதான் கூறுவார்கள் !

கொள்ளிடத்தின் கரைகளில் வெட்டிவேர் மிகுதியாக காணப்படுகிறது இன்றும் விசேஷ தினங்களுக்கு வெட்டிவேர் அங்கிருந்து கொண்டு வருகிறார்கள்!

மண் அரிப்பினை தடுக்கும் பொருட்டே நம் பெரியோர்கள் செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள் போல! இருப்பதை காப்பதும்,தொடர்வதும் மட்டுமே நம்முடைய கடமையாக கொண்டாலும் கூட ஏகப்பட்ட பலன்களை அடைய முடியுமோ!

பகிர்தலுக்கு நன்றி ஐயா!

வின்சென்ட். said...

திரு.ரெங்கா
திரு.ஆயில்யன்
இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. இது போன்ற எளிய நுட்பங்களை நம் முன்னனோர்கள் விட்டு சென்றாலும் நாம் நடைமுறைப் படுத்துவதில் தயக்கம் காட்டுகிறோம் என்பதே உண்மை.

Thiruchelvam Ramakrishnan said...

India could become a developed nation only if it appropriately blends its extraordinary wisdom with Science & Technology.

This is one great example...Wishing the initiative a great success!

kuppusamy said...

மிக சிறப்பு வின்சன்ட் அவர்களே. கோவையில் சிறுதுளி அமைப்பு இதைப்பற்றி சிந்தித்து நொய்யல் ஆற்றிலும், கோவை குளங்களிலும் வெட்டி வேரைப்பயன்படுத்தலாம். திருமதி வனிதாமோகன் சிந்தித்து செயல்படுவார்களா? நன்றி.

பனித்துளி சங்கர் said...

இருக்கும் இயற்கை வளங்களை அனைத்தையும் அழித்தால் இப்படிதான் ஏற்படும் . யாருக்குத் தெரியப் போகிறது இது எல்லாம் !
பகிர்வுக்கு நன்றி நண்பரே -

வின்சென்ட். said...

திரு.திருசெல்வம் இராமகிருஷ்ணன்
திரு.குப்புச்சாமி
திரு.பனித்துளி சங்கர்

உங்கள் மூவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் கூறுவதுபோல் இயற்கையை அழிப்பதைக் குறைத்து இதுபோன்ற செலவில்லாத நுட்பங்களை மறுஅறிமுகம் செய்தால் நிச்சயம் இந்தியா வல்லரசே.

aandon ganesh said...

பகிர்தலுக்கு நன்றி ஐயா

வின்சென்ட். said...

திரு.சிங்காரம்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.