Friday, July 23, 2010

சரிவுகளில் வெட்டிவேரின் உதவியால் மண் அரிப்பைத் தடுத்து மழைநீரை சேமித்தல்.

குறைந்து வரும் பருவ மழையில் கிடைக்கின்ற நீரை நிலங்களில் எளிதாகவும் அதே சமயம் அதிக மழை பெய்தால் மண் அரிப்பையும் தடுத்து நீரை சேமிக்க முடியும். சரிவுப் பகுதியில் பொதுவாக 5 அடி முதல் 10 அடி வரை விதைப்பதில்லை வெட்டிவேரின் உதவியால் இந்த பகுதிகளிலும் விதைப்பு செய்ய முடியும். இந்த முறையில் மூன்று நன்மைகள் கிடைகின்றது.

பலத்த மழையின் போது மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. உழுதபகுதியில் அரிப்பு இருந்தாலும் அந்த மண் அருகிலிருக்கும் குழியில் சேமிக்கப்படுகிறது.

சரிவுகளில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இதனால் கீழ் பகுதிக்கு ஈரக் கசிவு இருந்து கொண்டே இருப்பதால் அங்குள்ள பயிர்களும் செழிப்புடன் இருக்கும்.

வெட்டிவேரின் ஸ்திரத் தன்மையால் மேலும் அதிக இடத்தை விதைக்க முடியும்.
புதிதாக வெட்டிய குழியின் மேற்பகுதியில் வெட்டிவேர் நாற்றுக்கள். மண் இறுக்கமின்மை காரணமாய் வேர் எளிதில் இறங்கும்.( இந்த வருட நடவு )
சென்ற வருடங்களில் நடப்பட்ட நாற்றுக்கள். இன்று அரணாக இருக்கிறது.

அம்புக் குறியிட்ட பகுதியில் விதைக்கபடாமல் உள்ளது. வரும் ஆண்டுகளில் விதைக்கலாம்.

12 comments:

settaikkaran said...

உங்களது அயராத உழைப்பும் தொடர்முயற்சியும் வியப்பில் ஆழ்த்துகிறது. வாழ்த்துகிறேன்.

வடுவூர் குமார் said...

நல்ல யோஜனை.

சி.பி.செந்தில்குமார் said...

இயற்கைப்பாதுகாவலருக்கு வணக்கம்.வாழ்த்துக்கள்

manjoorraja said...

பயனுள்ள பதிவு.

விரைவில் சந்திப்போம் நண்பரே.

வின்சென்ட். said...

திரு.சேட்டைக்காரன்
திரு.வடுவூர் குமார்
திரு.சி.பி.செந்தில்குமார்
திரு. மஞ்சூர் ராஜா

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. "வெட்டிவேர்" என்ற தமிழ் பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்டாலும்,100 நாடுகளுக்கு மேல் இதனை உபயோகித்து பல இடர்பாடுகளை, சேதங்களை தவிர்க்கிறார்கள். ஆனால் நாம் இன்னும் இதனை சரியாக உபயோகப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. காலம் மாற்றத்தைத் தரவேண்டும்.

Indian said...

அய்யா,

நகரங்களில் அதிகம் அகலமாகப் பரவாமல், குறைந்த நீர் கொண்டு உயரமாக வளரும் வகையான மரங்கள் ஏதேனும் உள்ளதா? இருந்தால், கோவையில் அவை கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல் தர முடியுமா?

சாமக்கோடங்கி said...

அண்ணே.. நான் விவசாயத்தில் இல்லை.. இருந்தாலும் உங்கள் யோசனை பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக நான் பார்ப்பவர்களிடம் இந்த செய்தியைக் கொண்டு சேர்க்கிறேன்.. நன்றி..

வின்சென்ட். said...

திரு. இந்தியன்

உங்கள் வருகைக்கு நன்றி. குறைந்த நீர் கொண்டு உயரமாக வளரும் வகையான மரங்கள் உண்டு. நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்கள்? கோவை பாரதி பார்க் சாலையில் வனதுறையின் அலுவலகம் உள்ளது அங்கு நீங்கள் கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

வின்சென்ட். said...

திரு.பிரகாஷ்

உங்கள் வருகைக்கு நன்றி.

"கண்டிப்பாக நான் பார்ப்பவர்களிடம் இந்த செய்தியைக் கொண்டு சேர்க்கிறேன்."

நாட்டிற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவை.வாழ்த்துக்களுடன் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

மிக உபயோகமான பணி செய்கிறீர்கள்.. வாழ்த்துகள்

வின்சென்ட். said...

திரு.புன்னகை தேசம்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

வின்சென்ட். said...

ஐயா,

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.