Monday, June 28, 2010

கண்டுபிடிப்புக்கு கல்வி ஒரு தடையல்ல. அதே சமயம் கல்வியால் மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஒருவர் பள்ளிக்குச் செல்லாதவர். இந்தியாவின் ஒரு கிராமவாசி. மற்றவர் மிக சிறந்த கல்விமான். அமெரிக்காவிலுள்ள உலகின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமான “நாசா ” வில் ( NASA ) பணியாற்றியவர். இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் இந்தியர். இருவரும் அதிகம் செலவில்லாமல் மின்சாரத்தை மிக சிறிய இடத்திலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

இராஜஸ்தான் மாநிலத்தின் lதிரு.ராஜ் சிங் தஹியா முறையான பள்ளி படிப்பு பெறாதவர். ஆனால் சாணம் மற்றும் தாவரக் கழிவுகளிலிருந்து குறைவான செலவில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது அவரது கண்டுபிடிப்பு. 10kw மின்சாரம் எடுக்க ரூ.1,25,000 மும், 35kW மின்சாரம் எடுக்க ரூ.3,25,000 மும் செலவாகின்றது. 20 கிலோ கழிவிலிருந்து 1 மணி நேரத்திற்கு 30 குதிரை சக்தி திறன் கொண்ட எஞ்சினை இயக்க முடியுமாம். இந்த கண்டுபிடிப்பிற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்.

ஜனாதிபதியிடம் விருது பெறும். lதிரு.ராஜ் சிங் தஹியா
28-01-2010 “இந்து” நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாகத்தை ஒலி வடிவில் கேட்க கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
http://blogs.thehindubusinessline.com/audio/wp-content/uploads/2010/01/biotamiloutputwav.MP3

முனைவர். K.R. ஸ்ரீதர் அமெரிக்காவிலுள்ள உலகின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமான “நாசா ” வில் ( NASA ) பணியாற்றியவர். பணிக்குப் பின் தனது ஆராய்ச்சியை சுத்தமான, குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றி பெற்று “புளூம்எனர்ஜி கார்பெரேஷன்” எனும் நிறுவனத்தை உருவாக்கி புளூம்பாக்ஸ் எனும் பெட்டியை உற்பத்தி செய்கிறார். அதனை பிரபல நிறுவனங்களான கூகுள், இபே போன்ற நிறுவனங்கள் உபயோகித்து லட்சக் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்துகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் கையடக்கப் பெட்டியில் நமது வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தை 24 மணிநேரம் 365 நாட்களும் தங்குதடையின்றி பெறமுடியும். சூரியசக்தி, காற்றாலை போன்றவற்றில் தடை ஏற்படும். இதில் அந்த தொல்லையில்லை என்பது இதன் சிறப்பு.

அதன் வீடீயோ காட்சி.


அவரது நிறுவனம் பற்றி அறிய கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
http://www.bloomenergy.com/

முதல் கண்டுபிடிப்பிற்கு மரம், மூங்கில் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுவதால் பசுமையான இந்தியாவை காண முடியும். விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இரண்டாவது கண்டுபிடிப்பால் அனல் மின் நிலைய பயன்பாட்டை குறைப்பதால் சுற்றுச்சுழல் மாசுபாட்டைக் குறைக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் இந்த இரு கண்டுபிடிப்புக்களையும் நமது நாட்டில் செயல்படுத்தினால் நிறைய செலவினங்களை தவிர்த்து சுற்றுச் சுழலை எளிதாக காப்பாற்ற இயலும். பெரிய நிறுவனங்களும் இதனை செயல்படுத்தலாம். அவ்வாறு செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

Tuesday, June 22, 2010

மாணவர்களின் விண்ணப்பமும்........ தப்பிய மரமும்..


சாலை விரிவாக்கம் முடிந்த நிலையில் மரத்தை சுற்றி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. முயற்சி எடுத்த குழந்தைகளை காணவும் அவர்களது மனநிலையை அறியவும் அவர்களை சென்று பார்த்தேன். பெரிய மழலை பட்டாளமே அங்கு இருந்தார்கள். மரத்தை காப்பாற்றிய பெருமிதம் அவர்கள் முகத்தில் இருந்தது. குழந்தைகளின் பெற்றொர், ஆட்டோ ஓட்டுனர்கள், கடை உரிமையாளர்கள் என அனைவரும் அதில் பெருமிதம் கொள்வதோடு மேலும் மரங்களை வளர்க்கவும், பாதுகாக்கவும் ஆவலாய் இருப்பது எனக்கு மேலும் உற்சாகம் தந்தது. இந்த சமூக அக்கறைதான் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. இக்குழந்தைகளின் மனதில் இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற விதையை இங்குள்ள பெரியவர்கள் விதைத்திருக்கிறார்கள் அது மிக பெரிய விருட்சமாக வளர எல்லா வரங்களையும் பெற்று மேலும் சேவை செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.. இதுபோன்று பல கோடி குழந்தைகள், மக்கள் இந்த உலகத்திற்கு தேவை.

ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.... நோ பீஸ் ஆப் மைன்ட். ( No peace of Mind )
ஆயிரம் இல்லாவிட்டாலும் வசதிகள் இல்லாவிட்டாலும் இயற்கையோடு இருந்தால் எல்லாம் உண்டு.

இது பற்றிய பழைய பதிவைக் காண:-
http://maravalam.blogspot.com/2010/05/55.html

Saturday, June 12, 2010

சுற்றுச் சுழலை காப்பது யார் ????


அண்மையில் தமிழகத்தின் முக்கியமான ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஓவியத்தின் பிரதி இது. ஓவியர் ஒரு பொறியாளர். இந்த ஓவியம் பற்றிய கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

Tuesday, June 8, 2010

“இந்து” நாளிதழின் விவசாய கட்டுரைகள் "ஒலி" வடிவமாய் தமிழில்....

பிரபல “இந்து” நாளிதழ் நம்பக தன்மைக்கும் தரத்திற்கும் பெயர் பெற்றது. ஒவ்வொரு வியாழக் கிழமையன்றும் பல்வேறு விவசாய கட்டுரைகளை தாங்கி வரும். தரமான அந்த கட்டுரைகள் தமிழில் கிடைத்தால் தமிழக விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்குமே என்ற ஆதங்கம் இருக்கும். அதுவும் கேட்கும் படி ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் “ஒலி” வடிவத்தில் அவர்களது வலைதளத்தில் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பழைய கட்டுரைகளையும் ஒலி வடிவத்தில் நாம் கேட்கலாம் என்பது மேலும் சிறப்பு.

ஓர் வேண்டுகோள் :
இச்செய்தியினை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேட்டு பயன் பெற கீழ்கண்ட வலைமுகவரியை உபயோகியுங்கள்.
http://blogs.thehindubusinessline.com/audio/?cat=24

Saturday, June 5, 2010

சுற்றுச் சுழலை மிக அதிக அளவில் மாசுபாடுத்தும் ஆனால் தவிர்க்க முடியாத பொருள்.

எண்ணை (டீசல்) இதனால் ஏற்பட்ட சுற்றுசுழல் மாசுபாடும், உயரினங்களின் அழிவும், நாட்டிற்கு நாடு போட்டி, சண்டை, கொலை பின்பு சுரண்டல் என கணக்கிட்டால் இந்த கண்டு பிடிப்பு உலக சமாதானத்தை, உயிரின அழிவை மிக அதிகமாகவே பாதித்துள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு நாட்டிலும் எண்ணை கண்டுபிடித்து அதிகார வர்கத்திற்கு லஞ்சம் தந்து உள்ளூர்வாசிகளை வதைத்து எண்ணை எடுத்து அதை கடலில் கொட்டி நாசம் செய்து பின் சேருகின்ற இடத்திலும் புகையை விட்டு வளி மண்டலத்தை நாசம் செய்த கண்டுபிடிப்பு இது. ஆனால் டீசல் எஞ்சினை கண்டுபிடித்த திரு. ரூடால்ப் டீசலின் முதல் எஞ்சின் தாவர எண்ணை கொண்டுதான் ஓட்டப்பட்டது. (நூறு ஆண்டுகளுக்கு முன்பே )எஞ்சினை தாவர எண்ணைக்கு சிறப்பாக மாற்றாமல் தடம் மாறி எரிபொருள் “கச்சா எண்ணை” என்று ஆனபோது மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் நடந்து இன்று அழிவின் எல்லைக்கு வந்தவுடன் “ஞானம் பிறந்து” மறுபடியும் “பயோ-டீசல்” என பெருமளவு தொகையுடன் ஆராய்ச்சிகள். அதிலும் நம் நாட்டில் நன்கு விளையும் புன்னை, புங்கன் போன்ற வறட்சியை தாங்கி வளரும், நோய் சற்று குறைவான சுற்று சுழலை மேம்படுத்தும் தாவர வகைகளை விடுத்து ஜெட்ரோபாவில் அதிக கவனம் ஓரு நெருடல்தான். உணவு பொருட்களையும் “பயோடீசலாக” மாற்ற நினைப்பது ஏழை மற்றும் வளரும் நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சென்ற மாதம் ஏற்பட்ட மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவை பார்த்தோம். இதே போன்ற மிக மோசமான எண்ணை விபத்து "எக்ஸான் வால்டெஸ்" எண்ணை விபத்து ஆகும். கடற்பகுதியில் மனிதானால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான விபத்து ஆகும்.

1989 ஆண்டு மார்சு மாதம் 24 ஆம் தேதி அலெஸ்காவின் “பிரின்ஸ் வில்லியம் சௌண்ட்” பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து லட்சக் கணக்கான பறவைகளையும், கோடிக் கணக்கான மீன்களையும் அழித்து நிறைய மீன்பிடி, சுற்றுலா நிறுவனங்களை திவாலாக்கியது. மக்களின் உணவு மற்றும் வாழ்வாதாரங்களை பாழடித்தது. 5 பில்லியன் நஷ்ட ஈடு கேட்கப்பட்டு பின் மிக குறைவான தொகைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுசுழல் மாசுபாடு இன்று வரை தொடர்கிறது.

இந்த சுற்றுச்சுழல் தினத்தன்று சில வரையறைகளை, இலக்குகளை நமக்கு நாமே விதித்து செயல்படுத்தலாம்.

சிறிது தூர பயணத்திற்கு சைக்கிள் உபயோகப்படுத்துவது. ( உடற்பயிற்சியும் கூட)
அருகிலுள்ள ஊர்களுக்கு பேருந்தை உபயோகிப்பது.
தூரத்திலுள்ள ஊர்களுக்கு இரெயில் பயணம்.
குழந்தைகளை முடிந்த அளவிற்கு பள்ளிப் பேருந்தில் அனுப்புவது.
நாமும் நிறுவன வாகனங்கள் இருந்தால் அதனை உபயோகிப்பது.
நமது வழக்கமான பாதை நெருக்கடி மிகுந்ததாக இருந்தால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது அல்லது மாற்றுப் பாதையை உபயோகிப்பது.
அருகிலுள்ளவர்களையும் இணைத்து ஓரே ஊர்தியை முடிந்த அளவிற்கு உபயோகிப்பது.
மின்சார வாகனங்களுக்கு மாறுவது ( வேகம் வசதி குறைவுதான் )
மின்தடையின் போது ஜெனரேட்டர்களுக்கு பதில் சூரிய விளக்கு (Solar light) அல்லது காற்றாலைகளை உபயோகிப்பது.
எண்ணை வித்து மரங்களை நடுவோம்.
மாற்று எரிபொருளை ஆராய்வோம்
ஈயம்[lead] கலக்காத எரி பொருளை பயன்படுத்தலாம்.
வாகன புகையளவை கட்டுக்குள் வைக்கலாம்.
(வேறு ஏதேனும் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். )

Wednesday, June 2, 2010

மத்திய அமெரிக்காவில் “அகதா புயல்”

இந்த வருட வெப்ப மண்டல புயல் கணக்கை மத்திய அமெரிக்காவில் “அகதா புயல்” மூலம் இயற்கை துவக்கியுள்ளது. பஞ்ச பூதங்களில் இரண்டு (நீர், காற்று )சேர்ந்து மற்றொரு பூதமான நிலத்தில் வினை புரிய பாதிப்புக்கு உள்ளாவது என்னவோ நாம் தான். நூற்றுக்கு மேற்பட்டோர் உயிர் இழப்பு பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். படங்களையும் ,வீடீயோவையும் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.


சாலை சந்திப்பில் மிகப் பெரிய குழி. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன அழகு படுத்தப்பட்ட பாலத்தின் அருகே மிக பெரிய குழி. கௌதமாலாவைத் தாக்கிய அகதா புயல் பக்கத்து நாடுகளான எல்சால்வேடர், ஹோண்டுரா ஆகிய நாடுகளையும் தாக்கியது. பலத்த மழை காரணமாக அங்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன..

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மாத்திரமே பாதிப்பை குறைக்கமுடியும் முழுவதுமாக தவிர்க்கமுடியாது.

Tuesday, June 1, 2010

BP நிறுவனத்தின் மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவை அடைக்கும் முயற்சி தோல்வி


அமெரிக்காவில் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுவருகின்ற எண்ணெய்க் கசிவை அடைப்பதற்காக BP நிறுவனத்தார் தற்போது செய்துள்ள முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது."ஆழ்கடல் கிணற்றிலிருந்து எண்ணெய் வெளிவருவதைத் தடுப்பதற்காக மேலிருந்து கடினமான சேற்றையும் சிமெண்டு-ஜல்லிக் கலவையையும் செலுத்தி நாங்கள் மூன்று நாட்களாக முயற்சி செய்தும் எண்ணெய் வெளிவருவதைத் தடுக்க முடியவில்லை", என BP நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி டூக் சட்டில்ஸ் அறிவித்துள்ளார். பல முறை முயன்ற பின்னும் இந்த முயற்சி பல தரவில்லை என்பதால் மாற்று வழியில் முயலலாம் என அந்நிறுவனம் தற்போது தீர்மானித்துள்ளது.

அடுத்த கட்ட முயற்சி
பூமிக்கு அடியிலிருந்து எண்ணெய் மேலே வருவதற்கான அந்த குழாயை ஒரு இடத்தில் வெட்டி, மேலே வருகின்ற எண்ணெயை கடலில் கலக்க விடாமல் அப்படியே உறிஞ்சி கப்பலில் சேமித்து விடுவது என்பது அவர்களுடைய அடுத்த உத்தியாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்தாலும் கூட, கடலில் எண்ணெய் கலப்பதை மொத்தமாகத் தடுத்து விட முடியாத் என்பதை பிபி நிறுவனத்தார் ஒப்புக்கொள்கின்றனர்.


அரசியல் தாக்கங்கள்
கசிந்த எண்ணெய் அமெரிக்கக் கரை வரை பரவியுள்ளது என்றால், இதன் அரசியல் தாக்கங்களோ அதனையும் தாண்டி வாஷிங்டன் வரை பரவியுள்ளது. எண்ணெய்க் கசிவைத் தடுக்க முடியாது போயுள்ள இந்த சூழ்நிலை குறித்து தான் கவலையும் கோபமும் அடைந்திருப்பதை அதிபர் ஒபாமா ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் அவரது தலைமைத்துவத்தின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.


வானிலை சவால்கள்
களத்தில் ஏற்கனவே நிலவுகின்ற சிரமான சூழலை வானிலை மாற்றங்கள் மேலும் கடினமாக்கி விடலாம் என கடலோரக் காவல்படையைச் சேர்ந்த அதிகாரி ரியர் அட்மிரல் மேரி லாண்ட்ரி கூறுகிறார். "வானிலை என்பது எங்களுடைய முயற்சிகளுக்கு மிகப்பெரிய ஒரு சவாலாக அமைந்துள்ளது. மெக்ஸிகோ வளைகுடாவில் சூறாவளிகள் ஏற்படுகின்ற ஒரு கால கட்டத்துக்குள் நாம் இப்போது நுழைந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே லூசியானா மாகாண கடலோரப் பகுதிகளில் தங்களுடைய நிலமும் வாழ்வாதாரமும் அழிக்கப்படுவது கண்டு மக்களிடம் ஆத்திரமும் ஆற்றாமையும் அதிகரித்து வருகிறது. எண்ணெய்க் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான நிஜமான தீர்வு என்பது அந்த இடத்துக்கு அருகிலேயே இன்னொரு கிணற்றைத் தோண்டுவது என்பதுதான் என நிபுணர்கள் பலர் நம்புகின்றனர். ஆனால் அப்படி இன்னொரு கிணற்றைத் தோண்ட ஆகஸ்ட் மாதம் வரை ஆகிவிடலாம். அதற்கு முன்னதாக மாற்று வழி கண்டறியப்படவில்லை என்றால், எண்ணெய்த் திட்டுக்களால் ஏற்படுத்தகக்கூடிய சுற்றுச் சூழல், பொருளாதார மற்றும் அரசியல் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்றே தெரிகிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100530_oilleakstemfailure.shtml
நன்றி : பி.பி.சி. தமிழ் படங்கள் உதவி :நாசா

நியு ஆர்லியன்ஸ் நகரம் ஏற்கனவே 2005 ஆண்டு காத்ரீனா மற்றும் ரீட்டா புயல்களால் பாதிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறேன்.