Saturday, July 25, 2009

குட்டியை காப்பாற்ற தன்னை பலியாக்கிக் கொண்ட தாய் யானை.


இந்த வாரம் மேலும் ஒரு யானை இறந்தது. ஆனால் இறந்த விதம் மேலும் நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது. குன்னூர் டைகர் ஹில்ஸ் பகுதியில் ஆண் குட்டி யானை ஓன்று பாறையிடுக்கில் மாட்டிக் கொண்டது. அதனை காப்பாற்ற சென்ற தாய் யானை தவறி பள்ளத்தில் விழுந்து இறந்தது. தகவல் அறிந்த வனதுறையினர் 15 நாட்களே ஆன அந்த குட்டியை காப்பாற்றி முதுமலைக்கு அனுப்பிவைத்தனர். மொத்தத்தில் நன்கு வளர்ந்த யானைகளின் தொகையில் ஒன்று குறைந்தது.

6 comments:

துபாய் ராஜா said...

மீண்டும் ஒரு வருத்தமான செய்தி.

வின்சென்ட். said...

திரு.துபாய் ராஜா

உங்கள் வருகைக்கு நன்றி. பிறந்த குழந்தையை குப்பையில் எறியும் மனிதர்களைக் காட்டிலும் தனது குழந்தைக்காக யானை உயிரையும் தருவது மனதிற்கு மேலும் வருத்தத்தை தருகிறது.

கும்மாச்சி said...

என்னே தாயன்பு, நான் சமீபத்தில் முன்னிரவு பிறந்தக் குட்டியுடன் தாய் யானை அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குட்டியானையின் ஓட்டத்தையும், விளையாட்டையும் கண்களால் தொடர்ந்துகொண்டே இருந்தது தாய் யானை.

வின்சென்ட். said...

திரு.கும்மாச்சி

உங்கள் வருகைக்கு நன்றி. உண்மையில் நீங்கள் பாக்கியம் பெற்றவர்.

KABEER ANBAN said...

தங்கள் வலைப்பூவிற்கு Interesting Blog என்கிற விருதை பரிந்துரை செய்திருக்கிறேன்.

http://nirmal-kabir.blogspot.com/2009/08/blog-post.html

ஏற்று மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

வின்சென்ட். said...

திரு.கபீரன்பன்
நீங்களெல்லாம் எனது வலைப் பூவிற்கு வருகை தருவதே விருதினை அளித்த மாதிரி.தங்கள் வருகைக்கு நன்றி.