Tuesday, July 7, 2009

அன்றும் இன்றும் அவினாசி சாலை, கோவை


கோவை அவினாசி சாலை விரிவாக்கத்திற்காக 2007 ஆண்டு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். கூறியது போலவே நாற்றுக்கள் இந்த மழைகாலத்தில் வைக்கப்பட்டு பாதுகாப்பிற்காக மூங்கில் கூடுகளும் வைத்திருந்தது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. வாழ்க அந்த அதிகாரிகள். வளர்க அவர்களது சுற்றுச்சுழல் பணி. மேலும் அவர்கள் பணி சிறப்பாக இருக்க இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

மரங்கள் வெட்டப்பட்ட அன்றைய காட்சிகளைக் காண
http://maravalam.blogspot.com/2007/08/blog-post_10.html

2 comments:

Anonymous said...

அட போங்க சார்! நீங்கதான் அதிகாரிகளை மெச்சிக்கனும்! இப்படித்தான் திருப்பூரிலும் மரங்களை வெட்டினார்கள். இதுல கொடுமை என்ன அப்படீன்னா? ஏற்கனவே திருப்பூர்ல மரங்கள் ரொம்ப குறைவுனு சாரு நிவேதிதாவுல இருந்து அத்தனை பிரபலங்களும் குறை சொல்கிறார்கள்.

அதிகாரிகள் வெட்டின மரங்களுக்கு மாற்று கன்றுகள் வைக்கப்படும் என்ற வாக்குறுதியை அரசியல் வாதிகள் போல மறந்துவிட்டார்கள். நீங்கள் அவினாசி ரோடு தானே. ஒரு முப்பது கிலோ மீட்டர் பயணம் செய்து இங்கே பல்லடம் ரோடு வந்து பாருங்கள்! திருப்பூரிலிருந்து பார்த்தால் தெற்கே பல்லடமும் வடக்கே பெருமா நல்லூரும் தெளிவாக தெரிகிறது.

வின்சென்ட். said...

" அதிகாரிகள் வெட்டின மரங்களுக்கு மாற்று கன்றுகள் வைக்கப்படும் என்ற வாக்குறுதியை அரசியல் வாதிகள் போல மறந்துவிட்டார்கள்."

உங்கள் ஆதங்கம் புரிகிறது. கண்ணில் பட்ட நல்ல காரியத்தை பாராட்டுவதில் தவறில்லை என்று எண்ணுகிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.