Monday, April 20, 2009

நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு - ஆலோசனை மற்றும் பயிற்சி.

ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. பாரம்பரியமாக வளர்த்தாலும் அதற்கான உணவு பொருட்களில் மாற்றம், புதிய நோய்கள் (பறவை காயச்சல் போன்றவை), வளர்த்தும் முறைகள், இனம் போன்றவை லாபத்தை நிர்ணயிக்கின்றன. தற்சமயம் மிக லாபகரமாக நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான வழிகாட்டுதல் ??? அண்மையில் கோவையில் நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு பயிற்சி தருவதற்காக வந்திருந்த திரு.ராஜ் டேனியல் B.Sc அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீண்ட கால அனுபவமிக்க இவர் காந்திகிராம் கிராமிய பல்கலைகழகம், காந்திகிராம்,(திண்டுக்கல்) கிராம மேம்பாட்டு திட்டங்களில் பணியாற்றியவர். மேலும் பல்வேறு நிறுவனங்களில் ஆலோசகராக, வழிகாட்டியாக, பயிற்சியாளராக, உள்ளார்.

கொட்டில் முறை ஆடு வளர்ப்பு
நாட்டு கோழி வளர்ப்பு ரன் அன்ட் பென் முறை
நாய்கள் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் பயிற்சி
வெண்பன்றி வளர்ப்பு
புறாக்கள், ஜப்பானிய காடை, இறைச்சி முயல்கள் வளர்ப்பு
போன்றவற்றிலும் அனுபவம் பெற்றவர்.

1983 ஆண்டு புலம்பெயர்ந்த இவர் தமிழக கிராம முன்னேற்றத்திற்கு தன்னை அர்பணித்துள்ளார் என்றால் அது மிகையில்லை. மிக சுறுசுறுப்புடன் பல்வேறு இடங்களுக்கு சென்று பயிற்சி, ஆலோசனை தருகிறார். இருப்பினும் ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிப்பதால் இவர் அதற்கு முக்கியத்துவம் தருகிறார். தமிழக கிராமங்கள் இவரது செலவு குறைந்த எளிய வளர்ப்பு முறைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தினால் கிராம வேலை வாய்ப்பு மற்றும் முன்னேற்றம் நிச்சயம் உண்டு.

தொடர்புக்கு:-
திரு.ராஜ் டேனியல் B.Sc
50/93, நாயக்கர் புது 2வது தெரு,
கிழக்கு கோவிந்தாபுரம்,
திண்டுக்கல் - 624 001
செல் : 96295 - 78183

2 comments:

Narayanaswamy,Coimbatore said...

Your report on Melie bug is quite informative and more farmers should be exposed to such reports.Pls continue your good work.Thanks for putting story on Mr.Raj Daniel,man who can imbibe knowledge growing animals(rather PETS)in environmentally friendly way.He is defintely authority on animal breeding and he would be great asset to india,its no exaggeration because he teaches people how one can live above poverty by breeding few animals.He gives importants to swadeshi animals being grown for wealth creation. GOD bless him with long life to serve people especially marginal farmers

வின்சென்ட். said...

திரு. நாராயணசுவாமி

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. மாவுப்பூச்சியின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டுமானால் எல்லோரும் இணைந்து உயிரியல் முறையில் செயல்பட வேண்டும்.திரு.ராஜ் டேனியல் பற்றிய உங்கள் கருத்துக்கள் உண்மை. அவரை NGO ,விவசாய சங்கங்கள்,சுய உதவிக் குழுக்கள் முழுவதுமாக பயன்படுத்தினால் பாரம்பரிய இனங்கள் காப்பாற்றப்படுவதுடன் கிராம முன்னேற்றமும் உண்டு. "GOD bless him with long life to serve people especially marginal farmers"