ஏரினும் நன்றால் எரு இடுதல், கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு. 1038
ஏரினால் நிலத்தை உழுவதைக் காட்டிலும் எருவிடுதல் நல்லது. களைஎடுத்த பின் நீர் பாய்ச்சுவதை காட்டிலும் நல்லது நட்ட பயிர்களை பாதுகாப்பதாகும்.




சென்ற வாரம் நண்பரின் தோட்டத்திற்கு சென்றிருந்தேன். மாவுப்பூச்சியின் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. தெரிந்தவர்களிடம் கேட்டபோது பொதுவாக வெயில் காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றார்கள். ஆனாலும் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாக தோன்றியது. பப்பாளி, மா, கொய்யா, வாழை, மல்பெரி என எல்லா பயிர்களிலும் இருந்தது.

செம்பருத்தியில் காணப்பட்ட மாவுப்பூச்சி இன்று கள்ளியில் கூட இருக்கின்றது என்றால் அதன் சக்தியை கணக்கிட்டு பாருங்கள். இயற்கையின் சமன் செய்யும் திறனை அழித்தால் முடிவு எல்லா உயிர்களுக்கும் பாதிப்புத்தான். அதில் மனிதன் தன் பேராசை காரணமாக அற்ப பூச்சிகள்தானே என்று இரசாயன கொல்லிகளைக் கொண்டு அழிக்க ஆரம்பித்ததின் விளைவுகளை நாம் லட்சதிற்கும் மேல் விவசாய தற்கொலைகளாக படிக்கிறோம். இரசாயன கொல்லிகளைக் குறைத்து இயற்கை பூச்சிவிரட்டிகள், உயிரியல் முறைகளை உபயோகித்து கட்டுப்படுத்துவோம்.

இவ்வகை பூச்சிகளுக்கு இயற்கை எதிரிகளை கண்டு கட்டுப்படுத்துவோம். உழுது, எரு இட்டு, களையெடுத்து நீர் பாய்ச்சி அறுவடையில் கூட பாதிப்பு. இதற்கு யாரேனும் உதவ முடியுமென்றால் பின்னூட்டமிடுங்கள்.
6 comments:
You have displayed the real effect on pappaya due to this melebug.
Devarajan
இந்த மாவுபூச்சிக்கு அதை உணவாகச்சாப்பிடும் லேடிபக் என்ற வண்டின பூச்சிதான் இயறகை எதிரி. நமது பூச்சிக்கொல்லிகளின் கருணையால் இந்த நன்மை தரும் உயிரினங்களான வண்டுகள், பெரும் பூச்சிகள் போன்றவை அருகிவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மீன் எண்ணை சோப்புகரைசல் மூலம் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்று சொல்கிறார்களே அது உண்மையா? தெரியப்படுத்தினால் நலம்! தகவலுக்கும் புகைப்படத்துக்கும் மிக்க நன்றி!
திரு. தேவராஜன்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
திரு. ஓசை செல்லா
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இயற்கை எதிரிகளை அழித்துவிட்டு இன்று கஷ்டப்படுகிறோம். சில பொரிவண்டினங்கள் இப்பூச்சிகளை உண்கின்றன. மீன் எண்ணை சோப்புகரைசல் மூலம் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறுவதும் உண்மை ஆனால் ஆரம்பநிலையாக இருக்க வேண்டும்.இயற்கை எதிரிகளை பராமரிப்பது எளிது,நிச்சயமான நிவாரணம் மற்றும் செலவு குறைந்த ஒரு நிர்வாக முறை.
அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில்.
மாவு பூச்சியை அழிக்கும் ஒட்டுன்னியை இலவசமாக
தருகின்றது கேட்டு பெற்று கொள்ளலாம்.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment