அதிக இரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தியதால் இயற்கை சமன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகள் வலுப் பெற்றதன் விளைவுகளை விவசாய தற்கொலைகள் விபரமாக அறிவிக்கின்றன. ஆனால் எந்தெந்த பூச்சிகள் எந்தெந்த பயிர்களை தாக்குகின்றன , கட்டுபடுத்தும் முறைகள் பற்றி புத்தகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தோன்றும். இத்தேடலில் இருந்த போது இத்துறை சாரந்த பேராசிரியர் ஒருவர் எனக்கு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் பீடைகளும் (ஆசிரியர் ஹெச். லிவின் தேவசகாயம்) என்ற நூலை பரிந்துரைத்தார். படித்து பார்த்த பின் ஆசிரியரின் உழைப்பு, அனுபவம், மிக நேர்த்தியாக வரையப்பட்ட பூச்சியினங்களின் படங்கள் நமக்கு பூச்சியினங்கள் பற்றிய தெளிவைத் தருகிறது. இந்நூல் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
பகுதி -1: பூச்சிகளின் புறத் தன்மைகள், உள் உறப்புகள், உணவு, கழிவு, சுவாச, இனப்பெருக்க மண்டலங்கள் பற்றியும், பொருளாதார சேதம், கட்டுப்பாடு பற்றி விவரித்துள்ளார்.
பகுதி -2 : தானியப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பணப் பயிர்கள், கடுகு வகைப் பயிர்கள், கிழங்கு மற்றும் பூண்டு வகைப் பயிர்கள், தோட்டப் பயிர்கள், பசுந்தாள் உரப் பயிர்கள், பூசணிவகைச் செடிகள், பழச் செடிகள், அலங்காரச் செடிகள், மரங்கள் மற்றும் சேமிப்பு தானியங்களை தாக்கும் பூச்சினங்கள் என வகைப்படுத்தி அதனையும் கட்டுப்படுத்த உழவியல், மருந்து மற்றம் உயிரியல் முறைகளையும் விவரித்துள்ளார்.
பகுதி - 3 : பயிர் சிலந்திகள், எலிகள், பறவைகள், நூற்புழுக்கள், நண்டுகள், நத்தைகள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரித்துள்ளார்.
பகுதி - 4 : பூச்சிகளைச் சேகரித்து, நிலைப்படுத்திப் பாதுகாத்தல் பற்றி விவரித்துள்ளார்.
ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திலும் இருக்கவேண்டிய பயனுள்ள நூல்.
விலை : ரூ.235/=
கிடைக்குமிடம் :
M/s. ZION PRINTERS & PUBLISHERS,
91, ARUNACHALAM STREET,
CHINTADRIPET,
CHENNAI -600 002.
PHONE : 044- 28453655, 28453764.
email : zpp@vsnl.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment