
புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த World Wide Fund for Nature-Australia (WWF)வும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து சென்ற வருடம் மார்சு 31 ஆம் தேதியன்று சிட்னி மாநகரில் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை 1 மணி நேரம் மின்சாரம் உபயோகிக்காமல் தவிர்த்தனர். சுமார் 2.2 மில்லியன் மக்கள் தவிர்த்ததாக கணக்கிட்டனர். உடனே அது மற்ற நாடுகளையும் கவர்ந்தது. எனவே இந்த ஆண்டு (2008 ) நிறைய நாடுகளில், நகரங்களில் இதனை இன்று 29-03-2008 இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை மின் உபயோகத்தை தவிர்க்கவுள்ளனர். இதில் டில்லி மாநகரும் உண்டு. வலைப்பதிவர்கள் எங்கிருந்தாலும் சிரமம் பார்க்காமல்இன்று மின் உபயோகத்தை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.